Logo

இரத்த சோகை எற்படுவதற்கான காரணங்கள் 

இரத்த சோகை என்பது இரத்தத்தில் உள்ள மொத்த இரத்த சிவப்பணுக்கள் (ஆர்.பி.சி) அல்லது ஹீமோகுளோபின் குறைவு ஆகும். உங்கள் உடல் போதுமான சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்காதபோது, உங்கள் உடலில் ஹீமோகுளோபின் இயல்பை விட குறைவாக இருப்பதால் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காது.
 | 

இரத்த சோகை எற்படுவதற்கான காரணங்கள் 

இரத்த சோகை என்பது இரத்தத்தில் உள்ள மொத்த இரத்த சிவப்பணுக்கள் (ஆர்.பி.சி) அல்லது ஹீமோகுளோபின் குறைவு ஆகும். உங்கள் உடல் போதுமான சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்காதபோது, ​​உங்கள் உடலில் ஹீமோகுளோபின் இயல்பை விட குறைவாக இருப்பதால்  போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காது. குறைந்த ஆக்ஸிஜன் கிடைப்பது தலைச்சுற்றல் மற்றும் மூச்சுத் திணறலை உருவாக்குகிறது. இந்த நோயால் பாதிக்கப்படுவதையே  இரத்த சோகை ஆகும்.

 ஆண்களைப் பொறுத்தவரை, ஹீமோகுளோபின் அளவு 13.5 கிராம் / 100 மில்லிக்கு குறைவாக இருந்தாலும்,  பெண்களைப் பொறுத்தவரை, ஹீமோகுளோபின் அளவு 12.0 கிராம் / 100 மில்லிக்கும் குறைவாக இருந்தால் அதனை ரத்த சோகை என்கின்றனர் மருத்துவர்கள்.  

இரத்த சோகை வகைகள்;


வைட்டமின் குறைபாடு இரத்த சோகை: வைட்டமின் குறைபாடு இரத்த சோகை என்பது வைட்டமின் சி மற்றும் பி -12 போன்ற சில வைட்டமின்களின் குறைபாட்டால் ஏற்படக்கூடியது.

இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை: இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை போதிய அளவு இரும்புச்சத்து இல்லாததன் காரணமாக ஏற்படுகிறது. உடலில் இரும்புச்சத்து இல்லாதது குறைவான இரத்த சிவப்பணுக்களுக்கு (ஆர்.பி.சி) வழிவகுக்கிறது.

நாள்பட்ட இரத்த சோகை: தொற்றுநோய்களால் நாள்பட்ட இரத்த சோகை ஏற்படுகிறது. நாள்பட்ட இரத்த சோகையின் அறிகுறிகளில் மூச்சுத் திணறல் மற்றும் சோர்வு ஆகியவையாகும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP