கர்ப்ப காலத்தில் எதிர்கொள்ளக்கூடிய வயிற்று வலிக்கான காரணங்கள்!

கர்ப்பம் தரித்த மாதத்திலிருந்து மாதவிடாய் சுழற்சி நின்று விடும். இவ்வாறு இருக்கையில் கருவுற்றது உறுதியான பின்னர் ரத்த கசிவுடன் கூடிய வயிற்றுவலி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அனுக வேண்டும்.
 | 

கர்ப்ப காலத்தில் எதிர்கொள்ளக்கூடிய வயிற்று வலிக்கான காரணங்கள்!

கர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிக முக்கிய பாகமாக கருதப்படுகிறது. இந்த சமயத்தில் பல தரப்பட்ட வலிகளை சந்திக்க நேரிடும். இவ்வாறான வலிகளை பிரசவத்திற்கு முந்தைய வலிகள் என சொல்வதுண்டு. பொதுவாக அடிவயிற்று வலிகள் இயல்பான ஒன்றாக இருந்தாலும், தொடர்ந்து அதிக வலிகளுடன் கூடிய சில அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும். 

ஒரு பெண்ணின் வயிற்றில் புதிதாக ஒரு உயிர் உருவாகும் நேரத்தில் வயிற்றினுள் அசாதாரண சூழல் நிகழும். கரு உருவாக ஆரம்பிக்கும் காலமான 2 முதல் 6 வாரங்களில் அடிவயிற்றில் வலி ஏற்படும். இந்த வலி மாதவிடாய் ஏற்படுவதற்கு முன் தோன்றும். அடிவயிற்று வலி போன்ற உணர்வை கொடுக்கும். உண்மையில்  இதன் அர்த்தம் கரு கர்ப்பப்பையில் பதியமாகிவிட்டது என்பதாகும்.

கர்ப்ப காலத்தில் எதிர்கொள்ளக்கூடிய வயிற்று வலிக்கான காரணங்கள்!

கர்ப்பமாக இருக்கும் காலத்தில் தாய்மையடைந்துள்ள பெண்ணின் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். அதோடு  இயக்குநீரிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். இந்த சூழலில் அடிவயிற்றில் வலி தோன்றும்.

கருக்குழாயில் கரு முட்டை தங்கிவிட்டால் அடிவயிற்றில் அதிக வலி தோன்றும், அதாவது கருக்குழாயில் கருவானது வளர்வதால்  கடுமையான வலி ஏற்படும். இந்த வலி 4 முதல் 6 வாரத்திற்கு பின்னரே தோன்றும். இதனை கவனிக்காமல் விடுதல் கருகலைவதற்கு வழிவகுக்கும். 

கர்ப்ப காலத்தில் எதிர்கொள்ளக்கூடிய வயிற்று வலிக்கான காரணங்கள்!

கர்ப்பம் தரித்த மாதத்திலிருந்து மாதவிடாய் சுழற்சி நின்று விடும். இவ்வாறு இருக்கையில் கருவுற்றது உறுதியான பின்னர் ரத்த கசிவுடன் கூடிய வயிற்றுவலி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். 

36 வாரங்களுக்கு பின்னரே பிரசவத்திற்காக வலி ஏற்படும் . அதற்கு முன்னர் அதிக வலியை உணர்ந்தால். அது குறை பிரசவத்திற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

கர்ப்ப காலத்தில் எதிர்கொள்ளக்கூடிய வயிற்று வலிக்கான காரணங்கள்!

கர்ப்பமாக இருக்கும்போது வயிற்றில் வலி ஏற்படுவது சாதாரணமான விஷயமாக இருந்தாலும், சிறிது நேர ஓய்விற்கு பின்னரும் வயிற்றில் வலி நீடித்தால் அது பெரிய ஆபத்தை விளைவிக்க கூடும். எனவே அரை மணி நேரத்திற்கு மேலாக அடிவயிற்றில் வலியை உணர்ந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது தாய், சேய் இருவருக்கும் நன்மை பயக்கும்.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP