சின்னம்மை ஏற்பட காரணங்களும், தடுக்கும் வழிமுறைகளும்

சின்னம்மைக்கான சிகிச்சையாக, தொன்று தொட்டு செய்யப்படுவது, வேப்பிலை, மஞ்சள், சின்ன வெங்காயம் ஆகியவற்றை ஒன்று சேர்த்து அரைத்து, அம்மை கொப்புளங்கள் மீது பத்து போடுவது. இதுவே சிறந்த மருந்தாகவும் கருதப்படுகிறது.
 | 

சின்னம்மை ஏற்பட காரணங்களும், தடுக்கும் வழிமுறைகளும்

அம்மைத்தொற்று பொதுவாக, சின்னம்மை, பெரியம்மை, விளையாட்டம்மை, தட்டம்மை, பாலம்மை, தவளையம்மை,கல்லம்மை, மிளகம்மை, கடுகம்மை, பாசிப்பயரற்றம்மை, வெந்தயம்மை, கொள்ளம்மை பனியேறி, ஒரு குரு அம்மை, பனைமுகரி, ஒரு கருப்புக் குரு அம்மை, கரும்பனசை, பயறி, இராமக்கம், விச்சிலுப்பை அல்லது விச்சிலிர்ப்பான், சிச்சிலுப்பான், சிச்சிலிர்ப்பான், நீர்க்கொள்வான், கொப்புளிப்பான் என அம்மையின் தன்மைக்கும், அது ஏற்படுத்தும் விளைவிற்கும் ஏற்றார்போல் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தொற்று வரிசெல்லா ஜோஸ்டர் (Varicella Zoster) என்ற வைரஸ் கிருமியால் பரவக்கூடியது, மேலும் இது, முதியவர்களுக்கு, குழந்தைகளுக்கு, கர்ப்பிணி பெண்களுக்கு, நோய் எதிற்ப்பு குறைவாக உள்ளவர்களுக்கு வேகமா தோற்றக்கூடியது.

சின்னம்மை ஏற்பட காரணங்களும், தடுக்கும் வழிமுறைகளும்

இந்த அம்மையை உருவாக்கும் வைரஸ் பொதுவாக, அம்மைத்தொற்று ஏற்பட்டுள்ள நபர்கள் தும்முவதால், இருமுவதால், தோலின் மேற்பரப்பில் உண்டாகும் கொப்புளங்களிலிருந்து வடியும் நீர், பிறர் மீது படுவதன் மூலம், உள்ளிட்ட காரணங்களால் சின்னம்மை பரவுகிறது. இந்த தொற்றின் நோய் காப்பு காலம் என சொல்லப்படும், நோய் முற்றும் காலம் 10 முதல் 21 நாட்களாகும்.  

சின்னம்மைக்கான  சிகிச்சை:
சின்னம்மை ஏற்பட காரணங்களும், தடுக்கும் வழிமுறைகளும் 

சின்னம்மைக்கான சிகிச்சையாக தொன்று தொட்டு செய்யப்படுவது, வேப்பிலை, மஞ்சள், சின்ன வெங்காயம் ஆகியவற்றை ஒன்று சேர்த்து அரைத்து, அம்மை கொப்புளங்கள் மீது பத்து போடுவது.  இதுவே சிறந்த மருந்தாகவும் கருதப்படுகிறது. 

இருப்பினும், தற்போது அலோபதி முறையில் சின்னம்மைகான சிகிச்சைகள் வந்து விட்டன.   இந்த சிகிச்சையின் மூலம் 5 நாட்களில் அம்மை நோய் குணமாகும் என சொல்லப்படுகிறது. மேலும், ஓமவள்ளி  இலைகளை அரைத்து அம்மை தழும்புகளின் மீது தடவி வர தழும்புகள் விரைவில் மறைந்துவிடும்.

பொதுவாக அம்மை கொப்புளங்களில் இருந்து நீர் வடிவதால் மற்றவர்களுக்கு தொற்றும் அபாயம் அதிகம் என்பதால், சின்னம்மையால் பாதிக்கப்பட்டவர்கள், குளிர்ச்சி நிறைந்த அறையில், புண்கள் ஆறி உதிரும் வரை இருப்பது சிறந்தது.

அதனோடு, வேப்பிலை ஒரு கிருமிநாசினி என்பதால், சுத்தமான வேப்பிலையை பருத்தி துணியில் பரப்பி, சின்னம்மை தொற்று உள்ளவர்களை, அதன் மீது படுக்க வைக்க வேண்டும். உடல் முழுவதும் கொப்புளங்கள் இருப்பதால் அம்மை வந்தவர்கள் குளிக்க முடியாது இருந்தும், வெண்ணீரில் நனைத்த,ஈரத்துணியால் அவ்வப்பொழுது, உடலைத் துடைத்துக் கொள்ளலாம். அவ்வாறு செய்வதால்,கொப்புளங்களிலிருந்து வடியும் நீரினால் கிருமிகள் பரவுவதை குறைக்கலாம். 

உணவு முறைவுகள்:

சின்னம்மை ஏற்பட காரணங்களும், தடுக்கும் வழிமுறைகளும்

சின்னம்மை ஏற்பட்டவர்களின் உடல் மிகவும் சூடாக இருக்கும் என்பதால், உடலை குளிர்விக்க கூடிய, நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும், அம்மை தொற்று ஏற்பட்டவர்களுக்கு பிடித்த எந்த உணவையும் சாப்பிடலாம், ஆனால், வீட்டில் சுத்தமாக சமைக்கப்பட்ட, காரம் மற்றும் எண்ணெய் குறைவாக உள்ள உணவுகளாக இருப்பது நல்லது. மேலும் வைட்டமின் ஏ நிறைந்த  பழச்சாறு, பப்பாளி,கேரட், இளநீர், வெயில் காலங்களில் மட்டுமே கிடைக்ககூடிய நுங்கு, உப்புக்கரைசல் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.


தடுக்கும் வழிமுறைகள்:

சின்னம்மை ஏற்பட காரணங்களும், தடுக்கும் வழிமுறைகளும்

 அம்மையை தடுக்க கூடிய தடுப்பு ஊசிகளை மருத்துவரின் பறிந்துரைப்படி அனைத்து வயதினரும் போட்டுக்கொள்ளலாம்.  வெயில் காலங்களில் வெப்பம் அதிகமாக இருப்பதினால், சூட்டைத்தாங்கும் வைரஸ்கள் உயிர்ப்பெற்று, நோய் தொற்றுக்களை ஏற்படுத்தும்.

இத்தகைய வைரஸ்கள் குப்பை நிறைந்த பகுதிகளிலும், அசுத்தமான இடங்களிலேயே, அதிகமாக காணப்படுகிறது. எனவே நமது சுற்றுச்சூலலை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் உடல் சூடு அதிகமாக உள்ளவர்களுக்கும், நோய் எதிர்ப்பு குறைவாக உள்ளவர்களுக்குமே இந்த வைரஸ் அதிகமான‌ தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனால், உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் உணவுகளை அதிகமாக, கோடைக்கால‌ங்களில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

 ஒரு நாளில் இரண்டு முறை குளிர்ந்த நீரில் கட்டாயம் குளிக்க வேண்டும். இவ்வாறான, சுய சுத்தத்தால் அம்மை நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP