பார்வைக் கோளாறை நீக்கும் கேரட் கீர்...!

சரும வளர்ச்சியை நீக்கி பொலிவைக் கொடுப்பதோடு...உடலுக்குத் தேவையான வைட்டமின் ஏ சத்துக்களைத் தருகிறது கேரட்.. கேரட் கண் பார்வைக் கோளாறுகளை நீக்குகிறது.. கேரட்டை பச்சையாகவோ... பொரியல் செய்தோ குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
 | 

பார்வைக் கோளாறை நீக்கும் கேரட் கீர்...!

சரும வளர்ச்சியை நீக்கி பொலிவைக் கொடுப்பதோடு...உடலுக்குத் தேவையான  வைட்டமின் ஏ சத்துக்களைத் தருகிறது கேரட்..  கேரட் கண் பார்வைக் கோளாறுகளை நீக்குகிறது..  கேரட்டை பச்சையாகவோ... பொரியல் செய்தோ குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஆனால் எப்போதும் கேரட்டா என்று கேட்காமல் இருக்க கேரட்டை  கொண்டு குழந்தைகளுக்கு விதவிதமாய்  செய்து கொடுக்கலாம்... 

கேரட்டை  சிறுதுண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அடித்து சாறு பிழிந்து சர்க் கரை சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுப்பது பற்றி முன்னரே சொல்லி யிருக்கிறோம்.  கேரட்டின் பச்சை வாசனை அதில் சேர்ந்திருக்கும் என்பதால் சில குழந்தைகள் குடிக்க மறுப்பார்கள். ஆனால் கொளுத்தும் கோடைக்கு செயற்கை பானங்களை வாங்கிதருவதை விட வீட்டில் செய்து கொடுக்கலாம்.  சத்துக்களும் சேரும்.  ஆரோக்யமானதாகவும் இருக்கும். கேரட் கீர் எல்லோருக்கும் பிடித்த மான ஒன்று... உச்சி வெயில் தாகத்தில் ஃப்ரிட்ஜில் வைத்து  கேரட் கீர் பரிமாறி னால் எல்லோரும்  கேட்டு வாங்கி குடிப்பார்கள்.

தேவையான பொருள்கள்: கேரட் - 5, பால் - அரை லிட்டர், சர்க்கரை - இனிப்புக்கேற்ப, ஏலத்தூள் - சிட்டிகை, பாதாம், முந்திரி, பிஸ்தா, சாரப்பருப்பு - தலா  அரை தேக்கரண்டி... 

செய்முறை:

கேரட்டை தோல் சீவி குக்கரில் 3 விசில் விட்டு வேக வைக்கவும்..  கேரட் வெந்ததும் மிக்ஸியில் மைய அரைத்து வைக்கவும். அரை லிட்டர் பாலில் கால் லிட்டர் தண்ணீர் கலந்து நன்றாக காய்ச்சவும்.. பால் கொதிக்கும் போது  மசித்த கேரட் விழுதை சேர்த்து நன்றாக கலக்கி சர்க்கரையைக் கொட்டவும்.. இறக்கும் போது ஏலத்தூள், உலர் பழங்கள் சேர்த்து   கலக்கவும். சூடாக குடிப்பதாக இருந் தால் நெய்யில் உலர் பழங்களை வறுத்துப்பொடித்து குடுக்கலாம். ஆனால்  குளிர்ச்சியாக குடிக்க விரும்பினால் நெய் சேர்க்காமல் அப்படியே சேர்க்கவும்.. சுவையான்  கேரட் கீர் தயார்.

விழா சமயங்களில், திடீர் விருந்தினர் வருகையில் இதை செய்து அசத்துங்கள்.. சத்து மிக்க பானம் என்பதாலும் சுவையில் மயக்குவதாலும் யாரும் மறுக்கமாட் டார்கள்... நீரிழிவு  பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் சர்க்கரை சேர்க்காமல் குறை வான  அளவில் எடுத்துக்கொள்ளலாம்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP