பழங்கள் சாப்பிட்ட உடன் தண்ணீர் அருந்தலாமா?

தர்பூசணி போன்ற நீர் பழங்களை சாப்பிட்ட பின்னர் நீர் குடிக்கக் கூடாது என்று ஊட்டச்சத்து நிபுணர்களே ஒப்புக்கொள்கிறார்கள். நீர் பழங்களை சாப்பிட்ட உடன் தண்ணீர் அருந்துவதால் செரிமான செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்கின்றனர்.
 | 

பழங்கள் சாப்பிட்ட உடன் தண்ணீர் அருந்தலாமா?

கோடை காலங்களில் உடல் சந்திக்க கூடிய மிகப் பெரிய பிரச்னை நீர் இழப்பு. இந்த பிரச்னைக்கு தீர்வாக சொல்லப்படுவது அதிக பழங்கள் மற்றும் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் மற்றும் பழங்கள் உட்கொள்வதால் உடலுக்கு தேவையான‌ தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை பெற முடியும். இதனால் நாம் புத்துணர்ச்சியுடனும், உற்சாகத்துடனும் செயல் பட முடியும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், பழம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதால் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

பழங்களை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பதால் வயிற்றில் வாயுத்தொல்லை அதிகரிக்கும். மேலும் செரிமான‌த்திற்காக சுரக்கும் அமிலங்களின் தன்மை குறைவதுடன் பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரை மற்றும் ஈஸ்ட் வினை புரிந்து கெட்ட வாயுவாக உருவெடுப்பதால் அதிகப்படியான வாயு பிரச்னையை சந்திக்க நேரிடும்.

பழங்கள் சாப்பிட்ட உடன் தண்ணீர் அருந்தலாமா?

தர்பூசணி போன்ற நீர் பழங்களை சாப்பிட்ட பின்னர் நீர் குடிக்கக் கூடாது என்று ஊட்டச்சத்து நிபுணர்களே ஒப்புக்கொள்கிறார்கள். நீர் பழங்களை சாப்பிட்ட உடன் தண்ணீர் அருந்துவதால் செரிமான செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்கின்றனர்.

பழங்கள் சாப்பிட்ட உடன் தண்ணீர் அருந்தலாமா?

வாழைப்பழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் அருந்தக்கூடாது, பொதுவாக இத்தகைய பழங்கள் அதன் இயல்பான பண்புக்கூறுகள் மூலம் செரிமானம் ஆகக்கூடியவை. இந்த வகை பழங்களை உட்கொண்டா உடன் நீர் அருந்துவதால் வாழைப்பழங்களின் இயல்பு தன்மை மாறி செருமானம் ஆவதில் சிக்கல் ஏற்படும்.  வாழைப்பழங்கள் சாப்பிட்டு 15லிருந்து 20 நிமிடங்களுக்கு பின்னரே தண்ணீர் குடிக்க வேண்டும்.

பழங்கள் சாப்பிட்ட உடன் தண்ணீர் அருந்தலாமா?

அஜீரணம், பாக்டீரியா வளர்ச்சி,  வாயு தொந்தரவு போன்ற வயிற்று பிரச்னைகளுக்கு பெரும்பாலும் வயிற்றில் சுரக்கும் அமிலத்தன்மை அல்லது காரத்தன்மை குறைபாட்டால் ஏற்படக்கூடியவை. பழங்களை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்ப‌தால் செரிமானத்தின்  சமச்சீர் தன்மை குறைந்து பலவித உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். மேலும் தேவையற்ற நேரங்களில் தண்ணீர் குடிப்பதால்  நீரிழிவு போன்ற கோளாறுகளை ஏற்படும். 

பழங்கள் சாப்பிட்ட உடன் தண்ணீர் அருந்தலாமா?

எந்த உணவாக இருந்தாலும் உட்கொண்டவுடன் தண்ணீர் குடிப்பதால் உணவில் உள்ள  ஊட்டச்சத்துகள்   அனைத்தையும் முழுமையாக பெற முடியாமல் போவதுடன், உடல் பருமன் ,மெட்டபாலிச அளவு குறைதல் போன்ற பிரச்னைகளையும் சந்திக்க நேரிடும்.

பழங்கள் சாப்பிட்ட உடன் தண்ணீர் அருந்தலாமா?

பெரும்பாலான பழங்களில் இயற்கையாகவே தண்ணீர் நிறைந்திருக்கும் . இத்தகைய பழங்களை சாப்பிட்ட பின்னர்,  உடனடியாக தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. எந்த உணவாக இருந்தாலும் உட்கொள்வதற்கு ஒரு மணி நேரம் முன்பு , உட்கொண்ட பிறகு ஒன்றரை மணி நேரம் கழித்து மட்டுமே தண்ணீர் அருந்த வேண்டும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP