மூளையை உலுக்கும் குடிப்பழக்கம்! ஆய்வில் தகவல்

டீன் ஏஜ் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஸ்டைலாக க்ளாசில் பெக் அடிப்பது இன்றைய நாகரீகமாகிவிட்டது. ஆனால் இந்த குடிப்பழக்கத்தால் மூளை பாதிப்பு ஏற்படும் என ஆய்வில் கண்டறியபட்டுள்ளது.
 | 

நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு பார்களிலும், பப்களிலும் கெத்துக்காக குடிக்கு அடிமையானவர்கள் ஏராளம். குடிப்பழக்கம் மூளையின் வளர்சிதை மாற்றத்தை பாதிப்பதாக ஆல்கஹால் என்ற பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுவில் உள்ள ஆல்கஹால் இளைஞர்களை, குறிப்பாக பெண்களின் மூளையின் நரம்பு செல்களை பாதிக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

மூளையை உலுக்கும் குடிப்பழக்கம்! ஆய்வில் தகவல்

பின்லாந்து பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் நூரா ஹெய்கின்கென் இதுகுறித்து கூறுகையில், மூளையின் சாம்பல் நிறப்பகுதியானது தசைக் கட்டுப்பாடு, உணர்ச்சிக் கட்டுப்பாடு, சுய கட்டுப்பாடு போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது. இளம்பருவத்தினர் அதிகமாக மது அருந்துவதால் சாம்பல் நிறப்பகுதி பெரிதும் பாதிக்கப்படுகிறது. அதிகமான குடிப்பழக்கம் உள்ள இளம்பருவத்தினரின் மூளை, ஹிஸ்டமைனை உற்பத்தி செய்கிறது. ஹிஸ்டமைன் அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகும்போது ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் குறைகிறது. இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாக கூறினார். இத்தகைய பாதகமான விளைவுகளை அறியாமல் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகும் இளைஞர்களுக்கு எதிர்மறை எண்ணங்களும் அதிகமாக காணப்படும் என  ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP