ஆரோக்யம் இல்லாத குண்டு குழந்தைகள்... அம்மாக்களுக்கு அட்வைஸ்..!

கொழு கொழுவென இருக்கும் குழந்தைகள் எல்லாம் ஆரோக்யமான குழந்தைகள் என்று அம்மாக்கள் நினைத்ததன் விளைவு தான் இன்று பெருகி வரும் குண்டு குழந்தைகள். குண்டு குழந்தைகள் எல்லாம் ஆரோக்ய குழந்தைகள் அல்ல
 | 

ஆரோக்யம் இல்லாத குண்டு குழந்தைகள்... அம்மாக்களுக்கு அட்வைஸ்..!

கொழு கொழுவென இருக்கும் குழந்தைகள் எல்லாம் ஆரோக்யமான குழந்தைகள் என்று அம்மாக்கள் நினைத்ததன் விளைவு தான் இன்று பெருகி வரும் குண்டு குழந்தைகள்..  ஒல்லி குழந்தைகளை விட ஆரோக்யமானவர்கள் என்று  பெருமைபட பேசும்  அம்மாக்கள் மருத்துவர்களிடம் சென்ற பிறகுதான்  குழந்தைகள் எவ்வளவு ஆபத்தை சந்தித்துகொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்கிறார்கள்.

பண்டையக் காலத்தில் அல்ல.. நம் பாரம்பரியமிக்க உணவுகள் எல்லாமே சத்துக்களையும்,  போதிய ஆரோக்யத்தையும் கொடுத்து உடலை வலுவாக வைத்திருந்தது.. உடலுக்கு தேவையான சத்துக்கள் ஒன்று கூடுதலாக இருந் தாலும் உடலுக்கும் தேவையான  ஏதோ  ஒரு சத்து குறைபாடாக இருந்தாலே  ஒரு வித நோய் தாக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்று சொல்லலாம்.

உதாரணத்துக்கு குழந்தை வயிற்றில் இருக்கும்போதே அதிகப்படியான  கால்சியம் நிறைந்த உணவுகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் குழந்தையின் எலும்புகள் மென்மையாகாமல் வலுபெற்று இருக்கும். ஆனால் அத்தகைய கால்சியம் போதுமான அளவு இல்லாத போது.. குழந்தையின் எலும்புகள் மென் மையாகவே இருக்கிறது. பிறந்து வளரும் சூழ்நிலையிலும் எலும்புகளின் மென் மையால்  கீழே விழுந்ததும் எலும்புகள் நொறுங்குகிறது.. அல்லது வலுவிழந்து இயல்பிலேயே மூட்டு சம்பந்தமான வியாதிகளை பதின்ம வயதிலேயே  அக்குழந்தைகள் அனுபவிக்கிறது.

வளரும் குழந்தைகளுக்கு தேவை உடல் பருமனை உண்டாக்கக்கூடிய உணவுகள் அல்ல.. உடலுக்கு தேவையான சத்தை கொடுக்கக் கூடிய  உணவுகள் தான்.. தற்போது ரீபைண்ட் மற்றும் பாமாயில் எண்ணெய்களை உபயோகிக்க கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கும் நிலையில் சாட்வகைகளை சப்புக்கொட்டி சாப்பிடும் குழந்தைகள் தாறுமாறாய் பருமனாகிறார்கள்.   

கண்ணைக் கவரும் நிறங்களில் உலாவரும் சாக்லெட்ஸ்.. சர்க்கரை கலந்த இனிப்பு மிட்டாய், ஸ்வீட்ஸ்,  மண்ணின் சுவை கூட இல்லாத நூடூல்ஸ்... உட லுக்கு அதிக கேடு விளைவிக்கும் மைதாவில் செய்யப்பட்ட பீட்ஸா, பர்கர், சாண்ட்விச், ஸ்ப்ரிங் பொட்டேடோ, பிங்கர் சிப்ஸ் பொட்டேடோ, செயற்கை   இனிப்பூட்டிகள் நிறைந்த குளிர்பானங்கள், இனிப்பும், புளிப்பும், காரமும் கொண்டு  இன்ன சுவை என்று யூகிக்க முடியாத  பாக்கெட்டில் அடைக்கப்பட்ட கறுக் மொறுக் நொறுக்குத் தீனிகள் எல்லாமே உடலுக்கு கேடுகளை மட்டுமே   அள்ளித்தருகின்றன. நல்ல கொழுப்புகளை வழங்கக்கூடிய உணவுகளைத் தவிர்த்து இந்த வகையான உணவுகள் உடலுக்கு கெட்ட கொழுப்புகளை அதி கரித்து உடல் பருமனை உண்டாக்கிவிடுகிறது.

குழந்தைகளுக்கு பாசிப்பருப்பு உருண்டையும், கல்ல மிட்டாயும், வேர்க்கடலை பர்ஃபியும் செய்து தர முடியாத அளவுக்கு ஓடிக்கொண்டிருக்கும் அம்மாக்கள்  குழந்தைகளைத் திருப்தி படுத்த இத்தகைய ஸ்நாக்ஸ்களை வாங்கித் தருகி றார்கள். ஆனால் நாக்கில் மட்டுமே சுவையூட்டக்கூடிய இத்தகைய சாட் உணவு வகைகள் உடலின் ஆரோக்யத்துக்கு சுவையூட்டுவதில்லை..  தொடர்ந்து இத்த கைய  ஸ்நாக்ஸ் வகைகளை மட்டுமே உண்ணும் குழந்தைகள்  உடல் பரு மனுக்கு உள்ளாகிறார்கள்.. இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வலுவே இல்லாமல் வளர்கிறார்கள்.

குண்டு குழந்தைகள் எல்லாம் ஆரோக்ய குழந்தைகள் அல்ல... என்பதை  இனியாவது உணருங்கள் அம்மாக்களே..!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP