அதிமதுர டீயின் நன்மைகள்!

பல மருத்துவ குண நலன்களை கொண்ட அதிமதுரத்தை எவ்வாறு அன்றாட, காலை தேவையான தேனீராக எடுத்து கொள்ளலாம் என பார்க்கலாம்;
 | 

அதிமதுர டீயின் நன்மைகள்!

சர்க்கரையை விட 50 மடங்கு இனிப்பான பொருள்  அதிமதுரம்!   இனிப்பது மட்டுல்ல, அதிமதுரம் ஆயுர்வேதத்தில் முக்கிய மருத்துவ குணங்கள் கொண்டது.

அதிமதுர கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளித்தால் வாய்ப்புண்கள் ஆறும். அதிமதுரத்தை அப்படியே வாயில் வைத்து மென்றாலே தொண்டை தொற்று நீங்கும்.

அதிமதுரம்  இரத்தம், சர்க்கரை அதிகரிப்பதை  தடுக்க உதவும். அமெரிக்க நீரிழிவு நோய் சங்கத்தின் கூற்றுப்படி, அதிமதுர வேர், அமர்ப்ருட்டின்களுடன் நிரம்பியுள்ளது, இது நீரிழிவு தொடர்பான நிலைமைகளை கட்டுக்குள் வைத்திருக்கும் பண்புகளைக் கொண்டிருப்பதாக கூறுகிறது.

அதிமதுர டீயின் நன்மைகள்!


 பல மருத்துவ குண நலன்களை கொண்ட   அதிமதுரத்தை  எவ்வாறு  அன்றாட, காலை தேவையான தேனீராக எடுத்து கொள்ளலாம் என பார்க்கலாம்;

அதிமதுரம் டீ:

தேவையான பொருட்கள்

அதிமதுரம் தூள்                                                                  - 1 ஸ்பூன்
தண்ணீர்                                                                                - 200 மில்லி
தேன் அல்லது நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி - (சுவைக்கேற்ப)

செய்முறை:

அதிமதுரம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.  காய வைத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.அந்த‌ பொடியை நீரில் போட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து தேன் அல்லது நாட்டு சர்க்கரை கலந்து வடிகட்டி பருகவும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP