உணவில் கறிவேப்பிலையை ஒதுக்குபவரா நீங்கள்?

சமைக்கும் அத்தனை உணவுப்பொருள்களிலும் இறுதியாக கறிவேப்பிலையைத் தாளித்து சேர்த்த பிறகே ருசியைக் கூடுகிறது. கறிவேப்பிலை இல்லாத சமையலே இல்லை என்று சொல்லுமளவுக்கு ருசிக்காகவும், நறுமணத்துக்காகவும் சேர்க்கப்படும் இந்தக் கறிவேப்பிலை நம் ஆரோக்யத்தைக் காக்கும் அருமருந்தாகவும் செயல்படுகிறது.
 | 

உணவில் கறிவேப்பிலையை ஒதுக்குபவரா நீங்கள்?

சிலருக்கு வினோதமான பழக்கம் உண்டு. சாப்பிடும் போது உணவில் இருக்கும் கறிவேப்பிலை, கொத்துமல்லி, வெங்காயம், தக்காளி என்று அனைத்தையும் எடுத்து வைத்து  விட்டு சாப்பிடுவார்கள். இவர்கள் 40 வயதைக் கடந்தவர்களாக இருந்தால்  கண்டிப்பாக அவ்வப்போது மருத்துவரிடம் சென்று வருவார்கள். “காரணம் கேட்டால் வைட்டமின் சத்து இல்லையாம். அதனால் தான் அடிக்கடி உடலுக்கு தொல்லை வந்துவிடுகிறது” என்று மருத்துவர் சொல்வதாக கூறுவார்கள்.இறுதிவரை வைட்டமின் சத்து நாம் உண்ணும் உணவில் இருக்கிறது என்று  தெரியாமலேயே மாத்திரையாக எடுத்து கொள்வார்கள். சாப்பிடும் போது நாம் எடுத்து வைக்கும் கறிவேப்பிலையில் எத்தனை மருத்துவக்குணங்கள்  இருக்கிறது என்பது  தெரியுமா?நமது முன்னோர்கள் மட்டுமல்ல.. சமீபத்திய ஆய்வும் கறிவேப்பிலையில் இருக்கும் மருத்துவக்குணங்களை  நிரூபித்திருக்கிறது. 

கறிவேப்பிலையில் வைட்டமின்கள் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. கறிவேப்பிலையில் உள்ள அமிலங்கள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணம் மற்றும் மருத்துவக் குணங்களை வெளிப்படுத்துகிறது.சமைக்கும் அத்தனை உணவுப்பொருள்களிலும் இறுதியாக கறிவேப்பிலையைத் தாளித்து சேர்த்த பிறகே ருசியைக் கூடுகிறது. கறிவேப்பிலை இல்லாத சமையலே இல்லை என்று சொல்லுமளவுக்கு ருசிக்காகவும், நறுமணத்துக்காகவும் சேர்க்கப்படும் இந்தக் கறிவேப்பிலை நம் ஆரோக்யத்தைக் காக்கும் அருமருந்தாகவும் செயல்படுகிறது. கறிவேப்பிலையைத் துவையலாக செய்யலாம், கறிவேப்பிலை குழம்பாக்கலாம், கறிவேப்பிலையைப் பொடியாக்கி நல்லெண்ணெய் விட்டு சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். கறிவேப்பிலையைப் பச்சையாக மென்று சாப்பிட்டால் ஆரோக்கியம் முழுமை பெறும்.

வளரும் குழந்தைகளுக்கு செரிமானப் பிரச்சனைகள், நெஞ்சுசளி போன்றவற்றை நீக்கும் வல்லமை கறிவேப்பிலைக்கு உண்டு. இன்று கண்பார்வைக் குறைபாட்டால் அதிக சதவீதத்தினர் கண்ணாடி அணிகின்றனர். கண் பார்வையைச் சீராக வைக்க கறிவேப்பிலை உதவும் என்பதால் குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை கறிவேப்பிலை சாதத்தைக் கொடுக்கலாம். நீரிழிவு நோயாளிகள் பச்சை கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் இருக்கும். கறிவேப்பில்லை இரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைப்பதோடு, இதய நோய்க்கான அபாயத்தைக் குறைக்கும்.

இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலாப் பொருள்களுக்கான கறிவேப்பிலை புற்று நோயை ஆரம்பத்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை ஆஸ்திரேலியா உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்துச் சாறெடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணெய் கலந்து இதமானச் சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி, காற்றுப்புகாத பாட்டிலில் ஊற்றிவைக்கவும். இந்த எண்ணெயை தினசரி தலைக்குத் தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் நீங் கும். இளநரை வராது. கண் பார்வை குறைவு ஏற்படாது. கூந்தலின் பளபளப்பு அதிகரிக்கும்.கூந்தல் கருமையாக இருக்கும். 

இனி உணவுப் பொருள்களில் இருந்து கறிவேப்பிலையை ஒதுக்கும் போது,ஒரு நொடி அதனால் நாம் இழக்க போகும் நன்மைகளை யோசித்துப் பார்ப்போம். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP