வலி இல்லாத கட்டிகள் கொழுப்பு கட்டிகளா? புற்றுநோய் கட்டிகளா?

வளர்ச்சியடைந்து வரும் கொழுப்பு கட்டிகள் பெரிதாகி அழுத்தும்போது தசைகளின் இயக்கத்துக்கு தடை செய்யும் வகையில் வலியை உண்டாக்கினாலோ, கட்டிகளிலிருந்து சீழ் வந்தாலோ, துர்நாற்றம் வீசினாலோ. கட்டிகளின் நிறம் மாறினாலோ உடனடியாக மருத்துவரை அணுகி அந்தக் கட்டி புற்றுநோய்க்கட்டியா என்று அறிந்துகொள்வது நல்லது.
 | 

வலி இல்லாத கட்டிகள் கொழுப்பு கட்டிகளா? புற்றுநோய் கட்டிகளா?

வலி இல்லாத கட்டிகள் என்றால் அது புற்றுநோய் கட்டிதான் என்னும் முடிவுக்கு வந்துவிடுபவர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கவே இதைக் கொடுத்திருக்கி றோம். மென்மையான சருமங்களைக் கொண்ட மனித உடலில் ஆங்காங்கே கட்டிகள் தென்படுவது இயல்பானது.

வியர்வையால் உருவாகும் வேனிற் கட்டிகள், உஷ்ணக் கட்டிகள் எல்லாமே உடைந்து விடும். அதனால் இவற்றைப் பெரிதுபடுத்த தேவையில்லை. இவை தவிர இரண்டு வகை கட்டிகள்  உடலில் தோன்றுகிறது. ஒன்று புற்றுநோய்க்கட்டி, மற்றொன்று சாதாரண வகையான கட்டிகள்.

கொழுப்புக் கட்டி, நார்க்கட்டி, நீர்க்கட்டி, திசுக்கட்டி இவையெல்லாம் சாதாரண கட்டிகள் என்று அழைக்கப்பட்டாலும் பெரும்பாலும் கொழுப்புக் கட்டிகள் தான் உண்டாகிறது. வலியில்லாத இக்கட்டிகள் எவ்வித பாதிப்பையும் உண்டாக்காது. கொழுப்பு செல்கள் அதிகமாக வளர்ந்து ஒரே இடத்தில் திரண்டு கட்டிப்போல் உருவாகும்.

கொழுப்புக்கட்டிகள் வலியை உண்டாக்காது என்பதோடு தோலுக்கும் தசைக்கும் இடையில் வளரும். எலும்புகள் போல் ஆழமாக இருக்காது. மிகமெதுவாக வளரும் இந்த கொழுப்புக் கட்டிகள் மென்மையானவையாக இருக்கும். உருண்டையாக இருப்பதால் வெளிப்புறம் தொடும்போதே சற்று நகரும். அழுத்தினாலும் வலியை கொடுக்காது. இது லைப்போமா என்று அழைக்கப்படுகிறது.

உடலில் கை, கால்,கழுத்து, வயிறு, இடுப்பு, தொடை,தோள்பகுதி என்று எங்கு வேண்டுமானாலும் வரலாம். முன்பெல்லாம் 45 வயதைக் கடந்த மத்திமக்காரர்களுக்கு கொழுப்புக் கட்டிகள் வந்தது. பொதுவாகவே உடல் உறுப்புகளுக்கு நல்ல கொழுப்புகள் தேவை என்றாலும் அளவுக்கு அதிகமாக சேரும் போது கொழுப்புக்கட்டிகள் உருவாகிறது. தற்போது சிறு வயதிலேயே அதிகப்படியான கொழுப்பு மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ளும் இளைய தலைமுறையினருக்கு அதிகமாக வர வாய்ப்பிருக்கிறது.  

இளம் வயதிலேயே சருமத்தில் இலேசாக வீங்கினாலும் மெதுவாக வளர்ச்சியடைவதால் பொறுமையாகத்தான்  கண்ணுக்கு தெரியும். பிறகு தொட்டால் உணரும் அளவுக்கு தெரியும். நடுத்தர வயதில் தான் வெளிப்படையாக தெரியும். ஒன்றுக்கு மேற்பட்ட கட்டிகள் வர வாய்ப்புகள் அதிகம். இது 2 முதல் 5  செமீ வரை இருக்கும். வெகு சிலருக்கு 10 முதல் 20 செமீ வரை வளரக்கூடும்.

கொழுப்புகட்டிகள் கரைவதற்கு ஆயுர்வேதத்தில் செம்பு பாத்திரங்களைப் பயன்படுத்த வலியுறுத்துகிறார்கள். ஆங்கில மருத்துவத்தைப் பொறுத்தவரை இதற்கு சிகிச்சை அளிப்பதில்லை. இதனால் எவ்வித பாதிப்புமில்லை என்பதோடு ஒரு கட்டத்தில் அதன் வளர்ச்சியும் நின்றுவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள். 

கொழுப்புக் கட்டிகள் உருவாவதற்கு  இதுவரை சரியான காரணம் தெரிய வில்லை. பரம்பரை, உடல்பருமன், கொழுப்பு நிறைந்த உணவுகள், நீரிழிவு போன்றவை கொழுப்பு கட்டிகள் உருவாக காரணமாகிறது. கொழுப்பு கட்டிகள் ஒரு கட்டத்தில் அதன் வளர்ச்சியை நிறுத்திவிடும். ஆனால் வளர்ச்சியடைந்து வரும் கொழுப்பு கட்டிகள் பெரிதாகி அழுத்தும்போது தசைகளின் இயக்கத்துக்கு தடை செய்யும் வகையில் வலியை உண்டாக்கினாலோ, கட்டிகளிலிருந்து சீழ் வந்தாலோ, துர்நாற்றம் வீசினாலோ. கட்டிகளின் நிறம் மாறினாலோ உடனடியாக  மருத்துவரை அணுகி அந்தக் கட்டி புற்றுநோய்க்கட்டியா என்று அறிந்துகொள்வது  நல்லது.


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP