முகப்பரு பிரச்னையா?...முதலில் இத படிங்க

சருமத்தில் படும் தூசி ஒவ்வாமையை ஏற்படுத்தி முகப்பருக்களை உண்டாக்கி விடுகிறது என்பதால் வெளியே செல்லும் போது முகத்திற்கு மாஸ்க் போட்டு செல்லுங்கள். உடல் உணவிலும் அக்கறை செலுத்துங்கள். தினமும் 3 லிட்டர் தண்ணீர் தேவை என்பதோடு எண்ணெயில் தயாரித்த உணவுவகைகளை அருகில் சேர்க்காதீர்கள். உண்ணும் உணவில் ஆரோக்யமும் இருக்கிறது. அழகும் சீராகிறது.
 | 

முகப்பரு பிரச்னையா?...முதலில் இத படிங்க

பருவ வயது பெண்களுக்கான பிரச்னைகளில் முக்கியமானது முகப்பரு பிரச்னை. அழகைக் கெடுக்கும் வகையில் தோன்றும் முகப்பருக்கள் முக அழகை சீர் குலைப்பதோடு சருமத்தையும் பாதிக்க செய்துவிடுகிறது. பெண்களுக்கு இணையாக ஆண்களும் பருக்கள் பிரச்னையால் அவதிப்படுகிறார்கள்.

முகப்பருக்களைப் போக்க செய்யும் அழகு க்ரீம்களை பயன்படுத்துவதால் முகப் பருக்கள் குறைகிறதோ இல்லையோ ஆனால் சருமம் பொலிவை இழக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் தோன்றும் பருக்கள் அந்த நேரங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் உண்டாவது. அது அந்த நேரங்களில் மட்டுமே வரும் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக பருவ வயது எட்டும் போது வரும்பருக்கள் குறிப்பிட்ட வயதுக்குள் மேல் வராது. தொடர்ந்து மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் பெண்களுக்கு முகப்பரு எப்போதும் உருவாகும்.

பருக்கள் முதலில் உருவாகும் போது அதைக் கிள்ளினால் உள்ளிருந்து வெள்ளை நிறத்தில் சிறு குருணைப் போன்று வெளிப்படும். அதனால் பருக்களை கிள்ளினால் அருகில் இருக்கும் இடங்களில் தொற்றும், சிலருக்கு சீழ் பிடிக்க தொடங்கி வலியை உண்டாக்கும். சில நேரங்களில் கறும்புள்ளிகளையும், தழும்புகளையும் விட்டுச்செல்லும். அதனால் இயன்றவரை அவற்றை பாதிப்பு இல்லாமல் நீக்குவதே சிறந்தது.

காலை எழுந்தது முதல் படுக்கும் வரை நேரம் கிடைக்கும் போதெல்லாம் முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவுங்கள். அதிக கெமிக்கல் நிறைந்த சோப்புகளைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இயன்றவரை பாசிப்பருப்பு மாவை பயன்படுத்துவது சருமத்துக்கு நன்மை பயக்கும். வாரம் ஒருமுறை ஆவிபிடித்தால் முகத்தில் இரத்த ஓட்டம் சீராகும்.

சருமத்தில் துளைகள் விரிவடைந்து அதிலிருக்கும் அழுக்குகள், நச்சுக்கள் உள்ள வெளியேறி விடும். பதின்மவயதினர் ஆரம்ப நிலையிலிருந்தே இதைக் கடைப்பிடித்தாலே முகப்பருக்கள் வராமல் இருக்கும். முகப்பரு இருக்கும் போது ஆவிபிடித்து மெல்லிய சுத்தமான துணியால் துடைத்து வந்தால் இறந்த செல்கள் வெளியேறும்.

இரவு தூங்கும் போது சந்தனத்தைக் குழைத்து முகத்தில் பூசுங்கள். பருக்களில் எரிச்சல் இருந்தாலும் வலி ஏற்படுத்தினாலும் நீங்கிவிடும். வெந்தயத்தைப் பொடித்து பன்னீரில் கலந்து  ஃபேஸ் பேக் போட்டு அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் முகப்பரு நீங்கி, அதனால் ஏற்படும் தழும்புகளும் மறையும். எலுமிச்சை சாறை முகப்பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் பருவில் உள்ள கிருமிகள் ஒழியும். ஐஸ்கட்டி கொண்டு மசாஜ் செய்வதும் நல்லது. 

சருமத்தில் படும் தூசி ஒவ்வாமையை ஏற்படுத்தி முகப்பருக்களை உண்டாக்கி விடுகிறது என்பதால் வெளியே செல்லும் போது முகத்திற்கு மாஸ்க் போட்டு செல்லுங்கள். உடல் உணவிலும் அக்கறை செலுத்துங்கள். தினமும் 3 லிட்டர் தண்ணீர் தேவை என்பதோடு எண்ணெயில் தயாரித்த உணவுவகைகளை அருகில் சேர்க்காதீர்கள். உண்ணும் உணவில் ஆரோக்யமும் இருக்கிறது. அழகும் சீராகிறது. 


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP