நீங்கள் என்றும் இளமையோடு இருக்க 9 வழிகள்

நீங்கள் என்றும் இளமையோடு இருக்க 9 வழிகள்
 | 

நீங்கள் என்றும் இளமையோடு இருக்க 9 வழிகள்

நீங்கள் என்றும் இளமையோடு இருக்க 9 வழிகள்

தினமும் நீர்ச்சத்து நிரம்பிய காய்கறிகள், பழ வகைகளை சாப்பிட்டு வந்தால் நமது சருமத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் நலம் தரும். இப்பொழுது என்றும் இளமையோடு இருக்க சாப்பிட வேண்டிய பழங்கள் மற்றும் காய்கறிகள் பற்றி காண்போம்.

கேரட்டில் 87 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பி உள்ளது. மேலும் மற்ற காய்கறிகள், பழங்களைவிட அதிக அளவில் பீட்டா கரோட்டீன் கேரட்டில் உள்ளது. தினமும் ஒரு கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமத்திற்கும், நுரையீரலுக்கும் நன்மை தரும்.

தினமும் தக்காளிப் பழத்தை ஜூஸ் போட்டு பருகினால், அதிலுள்ள 90 சதவீதம் நீர்ச்சத்து நமக்கு கிடைக்கிறது. அதனை தொடர்ந்து பருகி வந்தால் சருமம் புத்துணர்வுடனும், பளபளப்பாகவும் இருக்கும்.

தர்பூசணி பழத்தில் 92 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பி இருப்பதோடு கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம் உள்ளிட்ட தாது உப்புகள் அடங்கியுள்ளது. இவை சருமத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும்.

ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை தருவதோடு முதுமையை தள்ளிப் போடவும் உதவுகிறது.

முள்ளங்கிக்கு, முதுமையை தள்ளிப்போடும் சக்தி உண்டு. அதிலிருக்கும் நீர்ச்சத்துக்களும், வைட்டமின்களும் தேகத்திற்கு பொலிவு சேர்க்கும்.

ப்ராகோலி 91 சதவீத நீர்ச்சத்து உடையது. அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. அதனை ஜூஸாகவும் பருகலாம். முதுமையை தடுப்பதில் ப்ராகோலிக்கு முக்கிய பங்கு உள்ளது.

ஸ்ட்ராபெரி பழத்திலும் 92 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இவையும் சருமத்தை இளமையுடன் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கிறது.

குடைமிளகாயில் 92 சதவீத நீர்ச்சத்து நிரம்பி உள்ளது. மேலும், இது வைட்டமின் சி, வைட்டமின் பி6, தையமின், பீட்டா கரோட்டீன் ஆகியவற்றையும் உள்ளடக்கியது.

கீரைவகைகளும் 90 சதவீதத்துக்கும் மேல் நீர்ச்சத்துகளை கொண்டிருப்பதோடு உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் வைட்டமின்கள், கனிம சத்துக்களையும் கொண்டுள்ளன. எனவே இவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP