கொசுக்கடியினால் ஏற்படும் சரும பாதிப்பை தடுக்க 5 எளிய வழிகள்

கொசுக்கடியினால் ஏற்படும் சரும பாதிப்பை தடுக்க 5 எளிய வழிகள்:
 | 

கொசுக்கடியினால் ஏற்படும் சரும பாதிப்பை தடுக்க 5 எளிய வழிகள்


தமிழகத்தை பொறுத்தவரை செப்டம்பர் முதல் ஜனவரி வரை கொசு தொல்லை அதிகமாக இருக்கும். ஆனால் தற்போதுள்ள கால மாற்றத்தினால் மாசுவும், கொசுவும் ஒழிக்க முடியாத ஒன்றாகி விட்டது. கொசுவை விரட்ட என்ன தான் சுருள்,லீக்விட்(liquid) யூஸ் பண்ணாலும், அதற்கெல்லாம் மசியாத கொசு நம் உடம்பை கடித்து புண்ணாக்கி விடுகிறது. கொசு கடியினால் ஏற்பட்ட பாதிப்பை குறைக்க வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டு என்னென்ன செய்யலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள். 

கற்றாழை ஜெல்:

கொசுக்கடியினால் சருமம் சிவந்திருந்தாலோ, அல்லது வீக்கம் ஏற்பட்டிருந்தாலோ கற்றாழை ஜெல் அதனை தீர்க்கும். கற்றாழை செடியின் இலையை பாதியாக நறுக்கி அதனை சருமத்தில் தேய்க்கலாம். இதனுடன் வேறு எதுவும் சேர்க்கத் தேவையில்லை. கடைகளில் தனியாக கற்றாழை ஜெல் கிடைக்கிறது. ஆனால் அதில் கெமிக்கல் கலந்திருப்பார்கள் என்பதால் இயற்கையாக கிடைத்திடும் கற்றாழை ஜெல் பயன்படுத்துவது தான் நல்லது.

எலுமிச்சை:

எலுமிச்சை சாறு ஒரு இயற்கையான, ஆன்டி-பயோட்டிக் மற்றும் ஆன்டி-மைக்ரோபயல் ஆகும். ஆகவே எலுமிச்சையைப் பிழிந்து, அதன் சாற்றை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுவதன் மூலம், அரிப்பைக் குறைத்து தொற்று ஏற்படாமல் தடுக்கலாம். 

சந்தனம்:

கொசுக்கடியைத் தவிர வேறு எந்த பூச்சி பாதிப்பிகளினால் சருமம் பாதிக்கப்பட்டாலும் அதனை தவிர்க்க சந்தனம் பயன்படுகிறது. சந்தனத்தை தண்ணீரில் குழைத்து கொசுக்கடி ஏற்ப்பட்டிருக்கும் இடத்தில் தடவிக் கொள்ளுங்கள். இருபது நிமிடங்கள் காய்ந்த பிறகு கழுவி விடலாம்.

கஸ்தூரி மஞ்சள்:

தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது கஸ்தூரி மஞ்சள். இதில் ஆண்ட்டி அலர்ஜி துகள்கள் நிறையவே இருக்கின்றன. இதனை சருமத்தில் தடவுவதால் அலர்ஜி பாதிப்புகள் மிகவும் குறைந்திடும்.

பேக்கிங் சோடா:

சமையல் அறையில் பயன்படுத்துப்படும் பேக்கிங் சோடாவினை கொசுக்கடியினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க பயன்படுத்தலாம். ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். பின்னர் அந்த தண்ணீரைக் கொண்டு கொசுக்கடி பாதித்த பகுதிகளில் தடவிடுங்கள். சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி விடலாம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP