உடல் சூட்டை தவிர்க்கவும், உடல் எடையை குறைக்கவும் ஏற்ற‌ 5 ஆரோக்கியமான பானங்கள்

கோடைகாலங்களில், சோடாக்கள், மென்மையான பானங்கள், தேடி செல்கிறோம். இத்தகைய பானங்களை தவிர ஆரோக்யமான முறையில் தயாரிக்கப்படும் நம் உடலுக்கு நீரேற்றம் தரும், உடல் பருமனை குறைக்க பெரிதும் உதவும் பானங்களை இங்கு காணலாம்.
 | 

உடல் சூட்டை தவிர்க்கவும், உடல் எடையை குறைக்கவும் ஏற்ற‌ 5 ஆரோக்கியமான பானங்கள்

கோடைகாலங்களில், சோடாக்கள், மென்மையான பானங்களைத் தேடிச்செல்கிறோம் இவற்றில் கலோரி, காஃபின் மற்றும் கார்பனேற்றப்பட்ட நீர் உள்ளது.  இதனால்  உடல்நலத்திற்கு தீங்கு விளைவதுடன்,  உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பும் அதிகம்.  இத்த‌கைய பானங்களை தவிர ஆரோக்யமான முறையில் தயாரிக்கப்படும் நம் உடலுக்கு  நீரேற்றம் தரும்,  உடல் பருமனை  குறைக்க பெரிதும் உதவும் பானங்களை இங்கு காணலாம்.

எலுமிச்சை புதினா பானம்;
எலுமிச்சை புதினா மற்றும் தண்ணீர் கொண்டு செய்யப்பட்டும் இந்த பானத்தை தயாரிப்பது மிகவும் எளிதான செயல் உள்ளது.  இந்த பானம் உங்கள் தாகத்தை தீர்ப்பது  மட்டுமல்லாமல், எடை குறைப்பு,  டீடாக்ஸின் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தோல் மற்றும் முடி உட்பட அனைத்திற்கும் நன்மை தரக்கூடிய பானமாக உள்ளது. எலுமிச்சை வைட்டமின் சி உள்ளதால், இது உங்கள் தோலிலுள்ள தேவையற்ற மாசுகளையும் குறைக்க உதவும்.  புதினா ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இது உடல் சூட்டை குறைப்பதுடன்  செரிமானத்தை  மேம்படுத்தும்  ஆரோக்கிய நலன்களைக் கொண்டுள்ளது.

உடல் சூட்டை தவிர்க்கவும், உடல் எடையை குறைக்கவும் ஏற்ற‌ 5 ஆரோக்கியமான பானங்கள்

தர்பூசணி பானம்;

தர்பூசணி மிகவும் பிரபலமான கோடை பழங்களில் ஒன்றாகும், மேலும் கோடை காலங்களில் கிடைக்கக்கூடிய ஆரோக்கியமான பானம் . இந்த பானம் தர்பூசணி மற்றும் புதினா கொண்டு தயாரிக்கப்படுகிறது மற்றும் தர்பூசணி இயற்கையாகவே இனிமையாக இருப்பதால் இதில் சர்க்கரை சேர்க்கத் தேவையில்லை.  
இந்த பானம் உடல் பருமன் குறைக்க  , நீரிழிவு நோய்க்கு  சிறந்த உணவாகக் கருதப்படுகிறது.  

உடல் சூட்டை தவிர்க்கவும், உடல் எடையை குறைக்கவும் ஏற்ற‌ 5 ஆரோக்கியமான பானங்கள்

வாழைப்பழ பானம்;
 குழந்தைகளுக்கு சிறந்த பனமாக கருதப்படுகிறது. இந்த பானம்  பால் மற்றும் வாழைப்பழங்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது.   வாழைப்பழங்கள் மிகவும் ஆரோக்கியமானவை, இது உடலுக்கு வலிமை சேர்க்கிறது. வாழைப்பழங்களில் பொட்டாசியம் மற்றும் கால்சியம் அதிகளவில் உள்ளதால் குழந்தைகளின் எலும்புகள் வளர்ச்சி மற்றும் பற்கள் ஆகியவற்றுக்கு இது சிறந்தது.

உடல் சூட்டை தவிர்க்கவும், உடல் எடையை குறைக்கவும் ஏற்ற‌ 5 ஆரோக்கியமான பானங்கள்

லிச்சி  பானங்கள்
கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழவகையை சார்ந்தது லிச்சி, அதிக அளவு ஆக்ஸிஜனேற்றத்தைக் கொண்டுள்ளது மற்றும்  பிற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன.  நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பொருத்தமான உணவாகும். மேலும்  உடல் பருமனை குறைக்க இந்த பானம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.  

உடல் சூட்டை தவிர்க்கவும், உடல் எடையை குறைக்கவும் ஏற்ற‌ 5 ஆரோக்கியமான பானங்கள்

ஸ்ட்ராபெரி பானங்கள்
கோடைகாலங்களில் குடிப்பதற்கான சிறந்த பானமாக‌  ஸ்ட்ராபெர்ரி பனம் இருக்கிறது,   ஸ்ட்ராபெர்ரி உடல் குளிர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது, மேலும்  உடலில் நீர் பற்றாக்குறையை போக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் தவிர்க்கவும் உதவுகிறது. இந்த ஸ்ட்ராபெரி பானங்கள் பருமன் குறைப்பு உணவு பட்டியளில் முக்கிய இடம் பிடிக்கின்றன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP