கோடையில் பிள்ளைகளை செம்மைப்படுத்த 10 எளிய வழிகள்!

இந்தக் கோடை விடுமுறையில் வீட்டிலேயே பிள்ளைகளுக்கு கொண்டாட்டத்துடன் பயனுள்ளபடி கவனித்துக்கொள்ள 10 எளிய வழிகள்.
 | 

கோடையில் பிள்ளைகளை செம்மைப்படுத்த 10 எளிய வழிகள்!

கோடை விடுமுறை வரப் போகிறது என்றால் குழந்தைகளுக்கு கொண்டாட்டம்; பெற்றோருக்கு திண்டாட்டம் என்பதே பலரது பார்வையாக இருக்கிறது. பிள்ளைகளை விடுமுறையில் வீட்டில் வைத்து சமாளிக்கத் திணறும் பெற்றோர்கள் இப்போதே எந்த சம்மர் கிளாஸுக்கு அனுப்பலாம் என்று டைம் டேபிள் போட ஆரம்பித்திருப்பர். பிள்ளைகள் விடுமுறையில் பள்ளிப் பாடங்களை விடுத்து, வேறு விஷயங்களைக் தெரிந்துகொள்வது நல்லதுதான். ஆனால், விடுமுறை வகுப்புகள் சொல்லிக் கொடுக்க முடியாத அற்புத அனுபவங்களை நம்மால் இந்த விடுமுறையில் நம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க முடியும். அதற்கு நமது சிறு முயற்சியும், திட்டமிடலும் இருந்தாலே போதும். உங்கள் முயற்சிக்கு வலுசேர்க்க 10 வழிகள் இதோ...

கோடையில் பிள்ளைகளை செம்மைப்படுத்த 10 எளிய வழிகள்!

வீட்டில் தேவையற்று கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கைவினைப் பொருட்களை உருவாக்க இணையத்தில் பல வழிகள் கற்று தரப்படுகிறது. அதைக் குழந்தைகளுடன் பார்த்து முயற்சி செய்யுங்கள். இது குழந்தைகளுக்கு அதிக பெருமையையும், ஆர்வத்தையும் கொடுக்கும்.

கோடையில் பிள்ளைகளை செம்மைப்படுத்த 10 எளிய வழிகள்!

வெளியில் செல்வது என்றால் அது உணவு விடுதி, சினிமா தியேட்டர், மால் என்று மட்டும் இல்லாமல் வெறும் கால்நடையாக இது வரை உங்கள் பிள்ளைகள் பார்க்காத தெருவையோ அல்லது பூங்காவையோ அல்லது நூலகத்தையோ அல்லது வயல் வெளிகளையோ சுற்றிக் காட்டலாம்.

கோடையில் பிள்ளைகளை செம்மைப்படுத்த 10 எளிய வழிகள்!

புதுப்படம் பார்க்க தியேட்டர் அழைத்து செல்லுவது மட்டும் அல்லாமல், பிறமொழியில் குழந்தைகளுக்கான சிறந்தப் படங்களை தேர்ந்தெடுத்து வாரம் ஒன்று என குழந்தைகளுடன் பார்க்கலாம். முடிந்தால் அக்கம் பக்கத்துக்கு பிள்ளைகளையும் சேர்த்து அழைத்து கொள்ளலாம்.

கோடையில் பிள்ளைகளை செம்மைப்படுத்த 10 எளிய வழிகள்!

தினமும் இரவு படுக்கும்போது குழந்தைகளுடன் பேசுவது, விளையாடுவது, கதை சொல்வது என நேரம் செலவு செய்யுங்கள். இது அந்த நாளின் இறுக்கத்தை குறைத்து நிம்மதியான தூக்கத்தை கொடுக்க உதவும்.

கோடையில் பிள்ளைகளை செம்மைப்படுத்த 10 எளிய வழிகள்!

கோடையில் அதிகம் தண்ணீர், ஜூஸ் போன்றவற்றைப் பருக வேண்டும். பிள்ளைகளை எளிமையான நீர்பானங்களை அவர்களே தயார் செய்துகொள்ள கற்றுக் கொடுங்கள். இதன் மூலம் குழந்தைகள் அதிக உற்சாகத்துடன் அதைக் குடிப்பர். மேலும் தேவை இல்லாமல் வீணாக்கக் கூடாது என்பதையும் புரிந்துகொள்வர்.

கோடையில் பிள்ளைகளை செம்மைப்படுத்த 10 எளிய வழிகள்!

தாத்தா, பாட்டி, அத்தை, மாமா ,சித்தி, சித்தப்பா இப்படி ஏதேனும் ஒரு நெருங்கிய உறவு முறை வீட்டிற்கு இரண்டு நாட்கள் அனுப்பி வையுங்கள். குழந்தைகள் உங்களை பிரித்து, புதுச் சூழலில் தங்களை பொருத்திக்கொள்ள இது உதவும். பல நல்ல பழக்க வழக்கங்களையும், உறவுகளை மதிக்கும் குணங்களையும் குழந்தைகள் எளிதில் கற்றுக்கொள்வர்.

கோடையில் பிள்ளைகளை செம்மைப்படுத்த 10 எளிய வழிகள்!

கோடை வகுப்பிற்கு அனுப்பும் முன்பு அந்த இடத்தின் பாதுகாப்பு, நடத்தும் நபரின் விபரம் போன்றவற்றை விசாரித்து, பாதுகாப்பானது தானா என்று தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

கோடையில் பிள்ளைகளை செம்மைப்படுத்த 10 எளிய வழிகள்!

பள்ளி நாட்களில் அவசரமாக சாப்பிட்டுச் சென்ற குழந்தைகளை இந்த விடுமுறையில் அவர்கள் இதுவரை பழக்கப்படாத காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிடப் பழக்கலாம். அதை அவர்கள் சாப்பிடும்போது பாராட்டி சின்னப் பரிசுகளை வழங்கலாம்.

கோடையில் பிள்ளைகளை செம்மைப்படுத்த 10 எளிய வழிகள்!

செல்லப் பிராணி வாங்கி கொடுப்பது, செடி வளர்ப்பது போன்றவற்றில் ஆர்வத்தை உண்டாக்குங்கள். இதன்மூலம் குழந்தைகள் வெறும் மொபைல் கேம்ஸ் மட்டுமே விளையாடிக் கொண்டிருப்பது குறையும்.

கோடையில் பிள்ளைகளை செம்மைப்படுத்த 10 எளிய வழிகள்!

பால் வாங்குவது, வடை வாங்குவது என்று வீட்டிற்கு அருகில் இருக்கும் கடைக்குப் பிள்ளைகளைத் தனியாய் அனுப்புங்கள். இதன் மூலம் குழந்தைகள் பொருளின் விலை, கையில் இருக்கும் பணம், மீதி சில்லறை போன்ற எளிய கணக்கை இயல்பாய் கற்றுக்கொள்வர். தன்னம்பிக்கையும் மேம்படும். குழந்தைகளை எதாவது ஒரு தற்காப்பு கலையை அல்லது ஒரு வாழக்கை கல்வி கலையை கற்றுக்கொள்ள இந்தக் கோடையில் அனுமதிப்பது நல்லதுதான். ஆனால் ஒரு பெற்றோராய் மேற்கண்ட நம்மால் இயன்ற எளிதான வழிகளைப் பின்பற்றி இந்தக் கோடையில் நம் பிள்ளைகளை மேம்படுத்துவதும் நமது கடமை. - கே.ஏ.பத்மஜா, கட்டுரையாளர் - தொடர்புக்கு angelsvks@gmail.com

கோடையில் பிள்ளைகளை செம்மைப்படுத்த 10 எளிய வழிகள்!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP