இதய நோயை தடுக்கும் ஜூஸ் எது தெரியுமா?

ஆரஞ்சு பழச்சாறினை தொடர்ந்து குடித்து வந்தால் இதய நோய்களின் விகிதம் 12 முதல் 13 சதவிகிதம் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதென, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 | 

இதய நோயை தடுக்கும் ஜூஸ் எது தெரியுமா?

பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்படடுள்ள  ஆய்வு முடிவுகளில். ஒவ்வொரு நாளும் ஆரஞ்சு பழச்சாறினை தொடர்ந்து பருகி வந்தால் மூளையில் உள்ள‌ குழாயில் அடைப்பை 24 சதவீதம் குறைக்கலாமென குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஆரஞ்சு பழச்சாறுகள் குடித்து வந்தால் இதய நோய்களின் விகிதம் 12 முதல் 13 சதவிகிதம் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதெனவும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. தினசரி ஆரஞ்சு பழச்சாறு குடித்து வந்தால் பக்கவாதம் வருவதற்கான ஆபத்தைக் குறைக்க முடியும் என்றும் இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கிறது. 

மேலும் ஆரஞ்சு பழத்தை ஜூஸாக குடிப்பதை விட முழு பழத்தையும் சாப்பிடுவதே சாலச் சிறந்தது என்றும் இந்த ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதய நோயை தடுக்கும் ஜூஸ் எது தெரியுமா?

ஆரஞ்சில் உள்ள மெக்னீசியம் இரத்த நாளங்களை விரிவடையச் செய்து இரத்த அழுத்தத்தை சரி செய்கிறது.

ஆரஞ்சில் உள்ள ப்ளோவினோய்டு காயங்களையும் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளையும் சரி செய்யும். உடலில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் அதை விரைவில் குணமாக்க வல்லது.

இதில் உள்ள வைட்டமின் – சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

அல்சரினால் குடலில் ஏற்படும் பாதிப்பை தடுத்து செரிமான மண்டலத்தை சரி செய்கிறது. தொடர்ந்து ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் சிறுநீரக கற்களை கரைக்க இயலும்.

இதய நோயை தடுக்கும் ஜூஸ் எது தெரியுமா?

புற்றுநோயை சரி செய்வதுடன் ஆரோக்கியமான சருமத்தையும் ஆரஞ்சுப் பழம் தரும். மேலும் முதுமையான சருமத்தை விரட்டி இளமையான சருமத்தை பெறலாம்.

இதில் அதிக அளவில் உள்ள நார்ச் சத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. இரும்பு சத்தை உற்பத்தி செய்வதற்கு போதுமான அளவு வைட்டமின் – சி தேவை. ஆரஞ்சில் இது அதிகமாகவே உள்ளது. இதனால் நமக்கு ஏற்படும் இரத்த சோகையையும் ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து உண்பதன் மூலம் சரிசெய்ய முடியும் என்றும் அந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP