உடல் எடை குறைய நுங்கு சாப்பிடுங்க!! 

வெயிலில் காலத்தில் ஏற்படும் தாகத்தைத் தணிக்க என்ன தான் கலர் குளிர் பானங்கள் வாங்கி குடித்தாலும், அவை நம் உடலுக்கு கேடு விளைவிக்குமே தவிர அதனால் நன்மை ஏதும் இல்லை. உடல் உஷ்ணத்தை பெரிதளவில் தணிக்க இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம் தான் பனைமரம். பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை. அந்தவகையில் கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச் சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு. இத்தகைய நுங்கினால் கிடைக்கும் நன்மை குறித்து பார்ப்போம்...
 | 

1. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் நுங்கை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும் தன்மை நுங்குக்கு உண்டு. 

2. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டவர்கள் நுங்கைச் சாப்பிட்டால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

3. சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக, எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கை சாப்பிட்டால், தாகம் அடங்கிவிடும். 

4. நுங்கில் 'ஆந்த்யூசைன்’ என்னும் ரசாயனம் இருப்பதால், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் கட்டிகள் வருவதைத் தடுக்கும். 

5. நுங்கை இளநீருடன் ஜூஸாக அரைத்து அருந்தலாம். தலைக்கு தேய்த்தும் குளிக்கலாம். சருமமும் உடலும் பொலிவடையும்.

6. நுங்கை மசித்து வியர்க்குரு கட்டிகள் இருக்கும் இடத்தில் பூசினால், விரைவில் சரியாகும். தோலும் பளபளப்பாகும்.

7. சுக்கு, மிளகு, கருப்பட்டி சேர்த்து, குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால், தாய்ப் பால் நன்கு சுரக்கும். குழந்தைக்கும் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும்.

8. நுங்கை அரைத்து, தேங்காய்ப் பால் சேர்த்துக் குடித்தால், அல்சர், வயிற்றுப்புண் பிரச்னை தீரும்.

9. ரத்தசோகை உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும். 

10. வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்கள் வருவதைத் தடுத்து, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP