எளிதாக கிடைக்கும் காய்கறிகளின் கெத்தான சத்துகள்!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள், வாயில் பெயர் கூட நுழையாத மேற்கத்திய உணவுகளின் பக்கம் ஈர்க்கப்பட்டு, காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதே கிடையாது. ஆனால் இத்தகைய காய்கறிகளில் நார்ச்சத்துகள், தாது உப்புகள், விட்டமின்கள் அதிகம் உள்ளன.
 | 

எளிதாக கிடைக்கும் காய்கறிகளின் கெத்தான சத்துகள்!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள், வாயில் பெயர் கூட நுழையாத மேற்கத்திய உணவுகளின் பக்கம் ஈர்க்கப்பட்டு, காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதே கிடையாது. ஆனால் இத்தகைய காய்கறிகளில் நார்ச்சத்துகள், தாது உப்புகள், விட்டமின்கள் அதிகம் உள்ளன. அப்படி நாம் பயன்படுத்தும் எந்தந்த காய்கறிகளில் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பதை பார்ப்போம்.

எளிதாக கிடைக்கும் காய்கறிகளின் கெத்தான சத்துகள்!

பீட்ரூட்: பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும். பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும். மேலும் இரத்தத்தை சுத்திகரிக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும்.

எளிதாக கிடைக்கும் காய்கறிகளின் கெத்தான சத்துகள்!

வாழைத்தண்டு : இதில் நீர்ச்சத்து, நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஓரளவு வைட்டமின் சி, பாஸ்பரஸ், மிகக் குறைந்த கலோரி ஆகியவை இதில் உண்டு. இவை உடல் நஞ்சை நீக்கும். பித்தம், உடல் உஷ்ணத்தை போக்கும். சிறுநீரக கற்களை நீக்கும் சக்தி உடையது.

எளிதாக கிடைக்கும் காய்கறிகளின் கெத்தான சத்துகள்!

கத்தரிக்காய் : உடல் இயக்கம் சீராவதற்கு கத்தரிக்காய் பயன்படுகிறது. இதில் ஃபோலிக் அமிலம், கொலின் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. இது வாய்ப்புண்ணை குணப்படுத்தும்.

எளிதாக கிடைக்கும் காய்கறிகளின் கெத்தான சத்துகள்!

கேரட் : பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் இதில் நிறைய இருக்கின்றன. கண், தோல் மற்றும் எலும்பு உறுதிபடவும், ரத்த விருத்திக்கும் மிகவும் நல்லது.

எளிதாக கிடைக்கும் காய்கறிகளின் கெத்தான சத்துகள்!

அவரைக்காய் : நிறைய நார்ச்சத்து, ஓரளவு புரதம், குறைந்த அளவு பொட்டாஷியம், மிகக் குறைந்த அளவு கலோரி உள்ள காய்கறி இது. மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு தரும்.

எளிதாக கிடைக்கும் காய்கறிகளின் கெத்தான சத்துகள்!

வெள்ளரிக்காய் : நீர்ச்சத்து நிறைந்தது. மிகக் குறைந்த அளவு கலோரி, ஓரளவு ஃபோலிக் அமிலம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் இருக்கின்றன. மேலும் இவை தாகத்தைத் தணிக்கும். சருமப் பிரச்சனைகளை நீக்கும்.

எளிதாக கிடைக்கும் காய்கறிகளின் கெத்தான சத்துகள்!

உருளைக்கிழங்கு : உருளைக்கிழங்கு ஓர் உன்னதமான ஊட்டச்சத்து மிக்க உணவு ஆகும். மேலும் சரும நோயை விரட்டும். உடலுக்கு வலிமை தரும்.

எளிதாக கிடைக்கும் காய்கறிகளின் கெத்தான சத்துகள்!

பீன்ஸ் : இதில் வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு தரும். எலும்பு, பற்களின் பலத்தை கூட்டும். கல்லீரல், உஷ்ணத்தை நீக்கும்.

எளிதாக கிடைக்கும் காய்கறிகளின் கெத்தான சத்துகள்!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP