உணவுக்கு முன் சூப் குடித்தால் எடை குறையும்!

பொதுவாக, உணவு சாப்பிடும் முன் சூப் குடிப்பது வழக்கம்.
 | 

உணவுக்கு முன் சூப் குடித்தால் எடை குறையும்!

பொதுவாக, உணவு சாப்பிடும் முன் சூப் குடிப்பது வழக்கம். சூப் குடிப்பதால் மூளையில் எண்ண மாற்றங்கள் ஏற்படுகின்றன.  இனிப்பு, உப்பு, புளிப்பு, கசப்பு ஆகிய சுவைகளை உள்ளடக்கிய 'உமாமி' (இது ஒரு ஜப்பான் சொல்) சூப் உடல் எடைக் குறைவதற்கு பெரிதும் உதவுகிறது. 

அதனால் சாப்பிடுவதற்கு முன் உமாமி அதிகமுள்ள சூப் குடிக்க வேண்டும் என ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர். க்ளூடாமைட் அதிகம் உள்ள இந்த சூப், மூளையில் சில மாற்றங்களை ஏற்படுகிறது எனவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த மாற்றங்களினால், உணவை தேர்ந்தெடுக்கும் எண்ணங்கள் மாறுபடும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, அதிக உடல் எடைக் கொண்டவர்கள், கட்டுப்பாடான உணவுகளை எடுத்து கொள்ள நினைத்தால், சாப்பிடும் முன் உமாமி நிறைந்த சூப்பை குடிக்குமாறு அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள். இப்படி சாப்பிடுவதற்கு முன் சூப் குடிப்பதால் நொறுக்குத் தீணிகள் சாப்பிடும் எண்ணமும் நாளடைவில் மறைந்துப் போகிறதாம். 

 நியூரோ சைக்கோ-பார்மகாலஜி பத்திரிக்கையில் இது குறித்த முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அதில், உமாமி சூப் குடித்தவர்கள் ஆரோக்கியாமன உணவை தேர்ந்தெடுக்கின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP