எதிரிகளை பொடிப் பொடியாக்க ஜ்வாலா மாலினி தேவியை வணங்குவாேம்!

இவளை வணங்கும் பக்தர்களுக்கு, எதிரிகளே இருக்கமாட்டார்கள். நம் மனதிலிருக்கும் பொறாமை, கோபம், பேராசை போன்ற எதிரிகளையும் சுட்டுப் பொசுக்கி, நல்ல மனிதர்களாக மாற்றும் வல்லமை படைத்தவள் ஜ்வாலா மாலினி.
 | 

எதிரிகளை பொடிப் பொடியாக்க ஜ்வாலா மாலினி தேவியை வணங்குவாேம்!

அறியாமை என்னும் இருளில் சிக்குண்டு கிடக்கும் பக்தர்கள், அஞ்ஞானம் எனும் கோபத்தையும், குரோதத்தையும் பெற்று, வாழ்வை இருளாக்கி கொள்வார்கள். 

அக்னி என்பது ஞான ஸ்வரூபம். அக்னி எனும் ஒளி வரும் போது, இருள் விலகிவிடும். இந்த இருளை விலக்குபவள் ஜ்வாலா மாலினி. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், இத்தேவியை வணங்குபவர்களுக்கு, எதிர்பாராத தருணங்களில் வாழ்வில் வளத்தை அள்ளிக்கொடுப்பாள். 

இவளை வணங்கும் பக்தர்களுக்கு, எதிரிகளே இருக்கமாட்டார்கள். நம் மனதிலிருக்கும் பொறாமை, கோபம், பேராசை போன்ற எதிரிகளையும் சுட்டுப் பொசுக்கி, நல்ல மனிதர்களாக மாற்றும் வல்லமை படைத்தவள் ஜ்வாலா மாலினி. 

மனமுருக இவளை வணங்குவதால், ஆகர்ஷண, வசிய, ஆவேச சித்திகள்  எளிதில் கிடைக்கும். ஜ்வாலா மாலினி தேவியின் அருளை பெற்றவர்களுக்கு, செல்லும் இடமெல்லாம், மதிப்பும், மரியாதையும் தலைமை பொறுப்பையும் உண்டாகும்.
 
நீங்கள் பிறந்த தேதிக்கு உரிய திதி நித்யாதேவியை, அந்த திதி நாளில் ஸ்ரீ லலிதாம்பிகையுடன், ஸ்ரீ சக்கரம் வைத்து கொடுத்திருக்கும் மூலமந்திரத்தை, ஒரு வருடம் சொல்லி வந்தால், திதி சூனியம் நீங்கி, வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். 

நீங்கள், வளர்பிறை சதுர்த்தசி அல்லது தேய் பிறை த்விதியை திதியில் பிறந்திருந்தால், உங்களுக்குரிய திதி நித்யா தேவி ஜ்வாலா மாலினி. அன்றைய தினம், வீட்டில் விளக்கேற்றி, ஜ்வலா மாலினியை வணங்கினால்,  மனதில் இருக்கும் எதிரிகளும், வெளியில் இருக்கும் எதிரிகளும், தீயில் இட்டது போல் பொசுங்கிபோவார்கள்.

ஜ்வாலா மாலினி:

திதி நித்யாதேவிகளில், பதினான்காம் இடத்தில் இருப்பவள். நெருப்பு ரூபமாய் இருப்பவள்.அக்னியை மாலையாகக் கொண்டவள். நெருப்பு மயமான பாணம், வில், அம்பு, சங்கு, சக்கரம், கேடயம், சூலம், வாள், தர்ஜனி,நெருப்பு, கதை, தாமரை, அம்பு வரதம் போன்றவற்றை ஏந்தி பன்னிரு திருக்கரங் களுடன் ஆறுமுகங்கள் கொண்டு அருள்பாலிக்கிறாள். ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்களைக் கொண்டிருக்கிறாள். பக்தர்களைத் தீய சக்திகள் அண்டாமல் இருக்க, ஜ்வாலா மாலினி க்ஷிப்த வஹ்னி ப்ரகார மண்டலா என்னும் திருப்பெயரோடு  அக்னி ஜ்வாலை என்ற அரணாக இருந்துகாத்து அருள் புரிகிறாள்.

மூலமந்திரம்:
ஓம் ஜ்வாலாமாலின்யை வித்மஹே 
மஹாஜ்வாலாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP