கண் திருஷ்டி காணாமல் போக என்ன செய்யலாம்?

பழமை மாறாமல் இன்றும் அமாவாசை நாட்களில் தொழில் புரிபவர்கள் கண் திருஷ்டியை ஒழிக்க வேண்டி பூசணிக்காயின் நடுவில் சதுரமாக்கி ஓட்டை போட்டு சில்லறை நாணயங்களைச் சேர்த்து மஞ்சள் குங்குமம் தடவி நான்கு வீதி கூடும் இடங்களில் உடைப்பார்கள்.
 | 

கண் திருஷ்டி காணாமல் போக என்ன செய்யலாம்?

"கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி மட்டும் படவே கூடாது" என்று சொல்வார்கள் பெரியவர்கள்.

அவ்வளவு வீரியம் கண்திருஷ்டிக்கு என்பதை, அனுபவப் பூர்வமாகவே உணர்ந்திருந்தார்கள் நம் முன்னோர்கள்.
கண்ணடி என்பது கண்திருஷ்டி என்று அழைக்கப்படுகிறது.

குழந்தைகளில் தொடங்கி பெரியவர்கள் வரை எல்லோரும் ஏதோ ஒரு வகையில் திருஷ்டிக்கு உள்ளாகிறார்கள்.

பழமை மாறாமல் இன்றும் அமாவாசை நாட்களில் தொழில் புரிபவர்கள் கண் திருஷ்டியை ஒழிக்க வேண்டி பூசணிக்காயின் நடுவில் சதுரமாக்கி ஓட்டை போட்டு சில்லறை நாணயங்களைச் சேர்த்து மஞ்சள் குங்குமம் தடவி நான்கு வீதி கூடும் இடங்களில் உடைப்பார்கள்.

பிறந்த குழந்தைகளுக்கு தான் அதிகமாக கண் திருஷ்டி உண்டாகும். குழந்தை பிறந்த வீட்டில் அன்றாடம் அல்லது ஞாயிறு, வியாழன் ஆகிய இரண்டு நாட்களில் நிச்சயம் திருஷ்டி சுத்தி போடுவார்கள்.

கல் உப்பை கையில் வைத்தப்படி மூன்று முறை அங்கப்பிரதட்சண முறையில் சுற்றப்படும் திருஷ்டி குழந்தையின் மீதிருக்கும் கண்திருஷ்டியைப் போக்கும் என்பது ஐதிகம். 
கல் உப்பு, தேங்காய் மூடி, கற்பூரம், சமயங்களில் மூன்று வீடுகளின் ஓலைக்குச்சிகள் போன்றவையும் திருஷ்டி கழிக்க பயன்படும்.
குழந்தைகளுக்கு எப்போதும் நாமே திருஷ்டி கழித்துவிடுகிறோம். பெரியவர்களுக்கு திருஷ்டி ஏற்பட்டிருக்கிறது என்பதையும் அறியலாம்.  கண் திருஷ்டி பட்டவர்களுக்கு உடல் எப்போதும் அசதியாக இருக்கும். சோர்வாக இருக்கும்.

எந்த வேலை செய்தாலும்  மனம் அதில் முழுமையாக ஈடுபடாது. அடிக்கடி கொட்டாவி விட்டப்படி இருப்பார்கள். எந்த நேரமும் உறக்கத்தில் இருக்க தோன்றும். பசியின்மை உண்டாகும். 

இந்த திருஷ்டியை கழிக்க முடியுமா என்றால் இதையும் கழித்தார்கள் முன்னோர்கள் என்றே சொல்ல வேண்டும். கண் திருஷ்டி நம்மீது அதிகமாக இருக்கிறது என்பதை உணர்ந்த பிறகு 
கடல் நீரைக் கொண்டு வந்து திருஷ்டி கழித்தால் பலன் அதிகம். திருஷ்டி பட்ட வீட்டில் அந்த நீரை மூலை முடுக்கெல்லாம்  தெளித்து வைத்தால் வீட்டில் இருக்கும் திருஷ்டியோடு கெட்ட சக்திகளும் ஓடிவிடும் என்பது ஐதிகம். 

பெரியவர்கள் இல்லாத பட்சத்தில் இடது கையில் கல் உப்பை நிரப்பி தலையை சுற்றி நீங்களே  மூன்று முறை அங்கபிரதட்சணமாக சுற்றி அதை ஓடும் நீரில் இடவேண்டும். அல்லது எலுமிச்சைப்பழம் திருஷ்டி நீக்க மிகவும் சிறந்தது.

இதை  இரண்டாக வெட்டி மஞ்சள் குங்குமம் தடவி  வலப்பக் கமாக மூன்று முறையும் இடப்பக்கமாக மூன்றுமுறையும் சுற்றி எறிய வேண்டும். அப்படி வீசும் எலுமிச்சையை யார் காலிலும் படாமல் இருக்கும் இடத்தில் எறியவேண்டும் என்பதையும் மனதில் கொள்ளவும்.

வீட்டில் அனைவரது திருஷ்டியும் ஒருசேர கழிய வேண்டுமெனில் வாசலின் நுழைவாயிலில் கண் திருஷ்டி போக்கும் கற்றாழையை மாட்டி வைக்கலாம். வீட்டின் நுழைவாயிலிலேயே ஆளுயரகண்ணாடி மாட்டிவைக்கலாம். இப் போது கண் திருஷ்டி பிள்ளையார் படங்கள் விற்கிறது அதை வாங்கியும்  மாட்டிவைக்கலாம். 

வீட்டில் எப்போதும் தூய்மையான நீரில் எலுமிச்சம் பழத்தை போட்டு வைக்கலாம். தீய எண்ணங்களைக் கொண்டவர்கள் பாதம் பட்டாலும் அவர்களது எதிர்மறையான எண்ணங்கள் வீட்டிற்குள் பரவுவதை தடுக்கும் சக்தி எலுமிச்சைக்கு உண்டு.
ஞாயிறு,செவ்வாய், வியாழன் ஆகிய மூன்று நாள்களில் மாலை நேரங்களின் முடிவில் இரவு தொடக்கத்தில் திருஷ்டி கழித்தால் கண் திருஷ்டி காணாமல் போகும்.    
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP