துள்ளி வருகுது வேல் : தூர விலகு பகையே - ஆடிக்கிருத்திகை முருக தரிசனம் அத்தனையும் தரும்

நமது முயற்சிகளை மேற்கொள்ள ஞாயிற்றுக் கிழமை ஆடிக்கிருத்திகை அமோகமான நாள்.
 | 

துள்ளி வருகுது வேல் : தூர விலகு பகையே - ஆடிக்கிருத்திகை முருக தரிசனம் அத்தனையும் தரும்

ஆடிக்கிருத்திகை இந்த முறை ஞாயிற்றுக்கிழமையில் அமைந்துள்ளது. அகத்திய மாமுனி, புலிப்பாணி முனிவர் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமையில் கிருத்திகை நட்சத்திரம் அமைந்தால் அக்னியை நினைத்து தவமிருந்தால் குண்டலினி சக்தி ஏறும் எனக் குறிப்பிட்டுள்ளனர். நமது உடலில் உள்ள ஏழு சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அனாதகம், விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராரா  இவை அனைத்து இந்த ஆடிக்கிருத்திகை நன்னாளில் அக்னியை மனதில் நிறுத்தி தியானிக்க நமக்குள் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.இந்த சித்தி கிடைக்க நமது முயற்சிகளை மேற்கொள்ள ஞாயிற்றுக் கிழமை ஆடிக்கிருத்திகை அமோகமான நாள்.
கார்த்திகை பெண்கள் 6 பேர் கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத்தால் அவர்கள் 6 பேரும் கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர். அப்போது சிவபெருமான், “கார்த்திகை பெண்களே! நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான். அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார்.

துள்ளி வருகுது வேல் : தூர விலகு பகையே - ஆடிக்கிருத்திகை முருக தரிசனம் அத்தனையும் தரும்

கிருத்திகையில் மட்டும் நட்சத்திரங்கள் தாராளமாக இருப்பதால் அந்த நட்சத்திரத்தில் வறியவர்களுக்கு உடை தானம், உணவு தானம் செய்பவர்கள் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள். 

முன்னொரு காலத்தில் அகஸ்திய மாமுனி இமயமலைச் சாரலில் சிவகிரி, சக்திகிரி என்ற இரு மலைகளை பூஜித்து பொதிகை மலைக்கு புறப்படும் போது இரு மலைகளையும் எடுத்துக் கொண்டு கேதாரமலை வரை கொண்டு வந்து அங்கே இளைப்பாறினார். அதன்பின் அம்மலையை தூக்க அவரால் முடியவில்லை. அப்பொழுது அவர் முன் சூரப்பத்மனின் நண்பன் இடும்பாசூரன் வந்து, “நானும் சூரப்பத்மனைப்போல அழியாப்புகழ் பெற வேண்டி முருகப்பெருமானை நோக்கி தவமிருக்கின்றேன்.

முருகனின் அருள் இன்னும் கிடைக்கவில்லை” என்று கூறினான். அதற்கு அகத்தியர் இவ்விருமலை சிவ சக்தியாகும். முருகனின் தாய், தந்தை அம்சமான இம்மலையை நீ காவடிபோல் தூக்கி பொதிகைமலை வரை கொண்டு வந்தால் முருகனின் பரிபூரண அருள் கிடைக்கும் என்று சொல்லி மலையை எளிதில் தூக்கி வரும் மந்திரமான அரோகரா! அரோகரா! என்று சொல்லிக் கொடுத்து தூக்கிவரப் பணித்தார். இவ்வாறு இடும்பாசூரன் காவடிபோல் மலைகளை தூக்கி வரும்போது வரும் வழியில் திருவாவினன்குடியில் வைத்து சற்று இளைப்பாறினான். 
மீண்டும் மலைகளை  எடுக்க முயற்சித்த போது எடுக்க முடியவில்லை. அப்பொழுது அங்கே ஆடு மேய்க்கும் சிறுவனாக வந்திருந்த வேலன், இடும்பனை பார்த்து பலசாலியாக இருக்கிறாய், இதை தூக்க முடியவில்லையா என்று கேலி செய்தார். இதை கண்டு சீறிய இடும்பன் வந்திருப்பது யார் என்று அறியாமல் சினம் கொண்டு தூக்க முற்பட்டு கீழே விழுந்தான்.அவ்வாறு விழுந்தவனை அணைத்து ஆசீர்வதித்த குமரன் கையில் வேலாகவும், வேல்முருகனாகவும் காட்சி தந்த நாள் ஆடிக்கிருத்திகை தினம் ஆகும். 

துள்ளி வருகுது வேல் : தூர விலகு பகையே - ஆடிக்கிருத்திகை முருக தரிசனம் அத்தனையும் தரும்

முருகனின் தரிசனம் கிடைத்து நீங்காப் புகழ்பெற்ற இடும்பனைப்போல் எல்லா பலனும் ஆடிக்கிருத்திகை நாளில் முருகனை பழனிமலையில் தரிசிப்போர் அடைவர் என்றார் அகத்திய மாமுனி.இடும்பனுக்கு காட்சி தந்த முருகனை  தரிசிக்க பழனிக்கு செல்வது பல மடங்கு பலன்களை தரும். பழனிக்கு செல்ல முடியாவிட்டால் அறுபடை வீடுகளில் ஏதெனும் ஒன்று, அதுவும் முடியாவிட்டால் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று  இரண்டு  நெய் விளக்குகளை ,பழனி முருகனுக்கு ஒன்றும் மற்றொன்றை அங்குள்ள முருகப் பெருமானுக்குமாக ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் சகல நன்மைகள் கிடைக்கும்.

 வேலை வாய்ப்பு கிடைக்க ,தாழ்வு மனப்பான்மை நீங்கிட ,நோய் நொடிகள் நீங்கி  உடல் ஆரோக்கியம் பெற்றிட, திருமணத் தடை நீங்கிட, சொந்த வீடு வாங்கிட, மக்கட்செல்வம், பொருட்செல்வம், அருட்செல்வம் என அத்தனை செல்வங்களும் பெற்றிட  ஆடிக்கிருத்திகை நன்னாளில் அழகிய முருகன் அடிபணிவோம்.

துள்ளி வருகுது வேல் : தூர விலகு பகையே!
வேலுண்டு வினையில்லை : மயிலுண்டு பயமில்லை!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP