ஆடி கிருத்திகையில் அருள் புரிவான் வடிவேலன்!

ஆடி கிருத்திகை விரதம் முருகனின் ஆறுபடைவீடுகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் திருத்தணியில் மேலும் சிறப்பாக கொண்டாடப்படும் பக்தர்கள் காவடிகளை சுமந்து தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள்.நாளை ஆடி கிருத்திகை ஆடிகிருத்திகை விரதத்தை எப்படி மேற்கொள்வது பார்க்கலாமா?
 | 

ஆடி கிருத்திகையில் அருள் புரிவான் வடிவேலன்!

நல்லவை யாவும் தேடி வரும் மாதம் ஆடிமாதம் என்கிறார்கள் பெரியோர்கள். ஆடி மாதம் முழுவதும் இறைபக்தியில் செழித்து இறைவனின் அருளை பெற வழிபாடுகள் நடந்துகொண்டே இருக்கும். அம்மன் வழிபாடோடு சிறப்பு மிக்கது முருகப்பெருமான் வழிபாடு.

முருகப்பெருமானின் பக்தர்களுக்கு கிருத்திகை விரதநாட்கள் மிக முக்கிய மானவை. அவற்றிலும் தட்சணாயன  துவக்கமான ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை மேலும் விசேஷமானது. தேவர்களின் மாலைக்காலம் என்று அழைக்கப்படும் இக்காலத்தில், இறைவனை நினைத்து வழிபட்டால் இறை வனின் பூரண அருளை பெறலாம்.

கிருத்திகை விரதத்தை இதுவரை கடைப்பிடிக்காதவர்கள் ஆடி மாதக் கிருத்திகையில் தொடங்கி உத்தராயண காலமாகிய தை மாதக் கிருத்திகை யில் முடிக்கலாம். விநாயகரின் கூற்றுக்கேற்ப நாரதர் 12 ஆண்டுகளாக கிருத் திகை விரதத்தைக் கடைப்பிடித்து தேவரிஷியாக பதவி பெற்றார் என்பது குறிப் பிடத்தக்கது.

ஆடி கிருத்திகை விரதம் முருகனின் ஆறுபடைவீடுகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் திருத்தணியில் மேலும் சிறப்பாக கொண்டாடப்படும் பக்தர்கள் காவடிகளை சுமந்து தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள்.நாளை ஆடி கிருத்திகை ஆடிகிருத்திகை விரதத்தை எப்படி மேற்கொள்வது பார்க்கலாமா?

அதிகாலை எழுந்து நீராடி வீட்டை சுத்தம் செய்து பூஜையறையை சுத்தம் செய்து வள்ளி, தெய்வானை சமேதராக காட்சி தரும் முருகப்பெருமான் படத்துக்கு செந்நிற மலர்களைக் கொண்டு அலங்கரித்து அதற்கு முன்பு அரிசி மாவில் அறுகோண கோலமிடவேண்டும். இருபுறமும் அகல்விளக்கில் விள க்கேற்ற வேண்டும். நைவேத்யமாக எலுமிச்சை சாதம் செய்து படைக்கலாம். 

விரதமிருப்பவர்கள்  அன்றைய தினம் முழுவதும் உணவருந்தாமல் விரதம் மேற்கொள்ளவேண்டும். இயலாதவர்கள் திரவ ஆகாரம் எடுத்துக்கொள்ளலாம். வயதானவர்கள் முருகப்பெருமானை நினைத்து  உப்பு சேர்க்காத உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். 

மாலையில் அருகிலிருக்கும் முருகனின் கோயி லுக்குச் சென்று வழிபட வேண்டும்.  கோயில்களில் நடைபெறும் வழிபாடுகள், சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டு தரிசிக்கலாம்.

அன்று கந்த ஷஷ்டி கவசம்,ஷண்முக கவசம், முருகனுக்குரிய மந்திரங்கள், முருகன் துதிகளைப் பாராயணம் செய்ய வேண்டும். இரவு முழுவதும் விழித் திருந்து கந்தபுராணம் படித்து மறுநாள் அதிகாலை நீராடி இயலாதவர்களுக்கு அன்னதானம் செய்து  அவர்களோடு உணவருந்தி விரதத்தை நிறைவு செய்ய  வேண்டும்.

வினை தீர்ப்பான் வேலவன் என்பதற்கேற்ப ஜென்ம ஜென்மமாய் தொடரும் வினைகள் இப்பிறவியில் தீரும். கடன் தொல்லை விலகும். சொந்த வீடு வாங்கும் பாக்யம் உண்டாகும். நீண்ட ஆயுள் கொடுக்கும். துஷ்ட சக்திகள் நம் மை அண்டாது. உடலோடு மன நலமும் செழிக்கும். 

திருமண தடை நீங்கும். ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் பார்வை உக்கிரமாக இருந்தாலும் தீமை நடக்காமல் காக்கும், செவ்வாய் தோஷ பரிகாரங்கள் நீங்கும்.

வேறென்ன வேண்டும் நாளை ஆடிக்கிருத்திகை (வெள்ளிக்கிழமை 26.07.2019) ஆடி வெள்ளி விரமிருந்து அம்மன் அருளையும், முருகப்பெருமானின் அருளையும் இணைந்து பெறும் பேறை பெறுவோம். 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP