கிருஷ்ணர் யாருக்கு சொந்தம் பாமாவுக்கா, ருக்மணிக்கா?

கிருஷ்ணர் வழக்கம்போல் புன்சிரிப்புடன் துலாபாரத்தில் அமர்ந்திருந்தார். ருக்மணி கிருஷ்ணன் மீது அளவில்லாத பக்தியைக் கொண்டிருந்தாள். கிருஷ்ணனை மனதில் நினைத்து எப்போதும் பக்தியுடன் வளைய வந்தாள்.
 | 

கிருஷ்ணர் யாருக்கு சொந்தம் பாமாவுக்கா, ருக்மணிக்கா?

ஒரு முறை நாரதருக்கு நேரமே போகவில்லை. என்ன செய்யலாம் என்று சுற்றும் முற்றும் பார்த்தார். அட….. நாரதரிடம் பேசினாலே கலகம் தான் என்று எல்லோரும் பாய்ந்து ஓடினார்கள். ஆனாலும் விடுவாரா நாரதர்… வைகுண்டத்துக்கு உலா சென்றார். கிருஷ்ணரின் பதிவிரதை பாமா ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தாள். அட.. நமக்கு நல்ல நேரந்தான் என்று பாமாவின் அருகில் சென்றார். 
 

“என்ன யோசனை பாமா என்று கேட்டார்?” ”இல்லை என்னைப் போல தான் ருக்மிணியும் கிருஷ்ணனின் மீது அன்பு வைத்திருக்கிறாள். ஆனால் கிருஷ்ணன் மீது அதிகம் அன்பு வைத்தவள் நான் தான் என்பதை நிரூபிக்க வேண்டும்” என்றாள். இதற்காகவே காத்திருந்த நாரதர் ”அதனாலென்ன கிருஷ்ணனை தராசில் வைத்து எடைபோட்டுவிடுவோம்” என்று யோசனை கொடுத்தார். விஷயம் கிருஷ்ணரின் காதுக்கு போயிற்று….நடப்பதை முன்கூட்டியே அறியும் கிருஷ்ணன் என்ன நடக்க வேண்டும் என்பதையும் தீர்மானிப்பவன் ஆயிற்றே. சரி என்று சம்மதித்தார்.

ருக்மணியின் தயக்கம் கண்ட பாமினி மகிழ்ந்தாள். நாரதனுக்கு கிருஷ்ணன் அறியாமல் கண்களால் நன்றியுரைத்தாள். கிருஷ்ணர் கண்டும் காணாமல் மனதுக்குள் சிரித்து கொண்டார். கிருஷ்ணனை தராசில் வைக்க எல்லா ஏற்பாடுகளும் நடந்தது. எல்லோரும் கூடியிருந்தார்கள். பாமாவுக்கு மிகுந்த நம்பிக்கை உண்டாயிற்று. விஷ்ணு தன்னை மார்பில் சுமந்திருக்கிறாரே.. அதோடு திருமணத்தின் போது ஏராளமான செல்வங்களை கொண்டு வந்ததால் தன்னால் கிருஷ்ணனின் எடையை எளிதாக சமன்செய்யமுடியும் என்று மகிழ்ந்தாள்.

துலாபாரத்தில் அமர்ந்தார் கிருஷ்ணன்.. மறுபுறம் பாமா தான் வைத்திருந்த பொருள்களை வைத்தால்… கிருஷ்ணர் பக்கம் உயர்ந்தே இருந்தது. சற்றும் இறங்கவில்லை… அட என்ன இது என்று வியந்தவள் கொண்டு வந்த செல்வம் அனைத்தையும் தராசு தட்டில் வைத்து நிரப்பினாள். செல்வம் வைக்க இட மின்றி தட்டு நிறைந்தது. ஆனாலும் கிருஷ்ணர் அமர்ந்திருந்த தட்டு சற்றும் அசையவில்லை. மேலும் தான் அணிந்திருந்த நகைகளையும் கழற்றி வைத்தாள். அப்படியும் இறங்கவில்லை.. கிருஷ்ணா நான் கொண்டு வந்த  பொருள்களே உன் முன்பு தூசியாக கூட சமானமில்லாதபோது பாவம் ருக்மணி என்ன செய்வாள் என்று யோசித்தாள். 

அடுத்தது ருக்மணியின் முறை.. கிருஷ்ணர் வழக்கம்போல் புன்சிரிப்புடன் துலாபாரத்தில் அமர்ந்திருந்தார்.  ருக்மணி கிருஷ்ணன் மீது அளவில்லாத பக்தியைக் கொண்டிருந்தாள். கிருஷ்ணனை மனதில் நினைத்து எப்போதும் பக்தியுடன் வளைய வந்தாள். கிருஷ்ணனிடம் பணயம் வைக்க அன்பை தவிர ஏதுமில்லையே என்று  நினைத்து வருந்தினாள். எப்போதும் கிருஷ்ணரை வணங்கும் போது தோட்டத்திலிருந்து துளசியை பறித்து கிருஷ்ணரை வழிபடுவது வழக்கம். அதையே செய்வோம் என்று நினைத்து கிருஷ்ணா என்ற படி துளசியைப் பறித்து தராசுதட்டில் போட்டாள். அட என்ன மாயம் செய்து விட்டான் கிருஷ்ணன். எடைகொண்ட செல்வங்களுக்கு சமானமாகாத கிருஷ்ணனின் புனித தேகம் துளசி இலைக்கு சமாதானமாக நின்றது. 

கிருஷ்ணன் புன்முறுவல் முறிந்து ”இப்போது புரிந்ததா பாமா.. நான் எனது என்னுடைய பொருள் என்று என்ற அகந்தையை விடுத்து உண்மையான பக்தியுடன் என்னை அணுகினால் அவர்களுக்கே நான் சொந்தம்” என்றார். கிருஷ்ணரின் பாதத்தில் சரணடைந்து மன்னிக்க வேண்டிய பாமா மறக்காமல் துளசி இலையை எடுத்து தலையில் சூடிக்கொண்டாள். 

பரமாத்மாவுக்கு படைக்க உயர்ந்த வகையான நைவேத்தியங்களை விட அன்போடு கொடுக்கும் துளசி இலை மகா பொருத்தமே… 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP