பஞ்சபூதசக்திகளும் உடலோடு தொடர்பு கொள்ளும் நேரம்…

உடலை வருத்தும் நேர்த்திக்கடனை செய்வதில் முதன்மையானவர்கள் இந்துக்கள். அதிலும் ஆடி மாதம் வந்துவிட்டால் தெருவெங்கும் இருக்கும் சிறு சிறு கோயில்கள் கூட அமர்க்களப்படும்.
 | 

பஞ்சபூதசக்திகளும் உடலோடு தொடர்பு கொள்ளும் நேரம்…

உடலை வருத்தும் நேர்த்திக்கடனை செய்வதில் முதன்மையானவர்கள் இந்துக்கள். அதிலும் ஆடி மாதம் வந்துவிட்டால் தெருவெங்கும் இருக்கும் சிறு சிறு கோயில்கள் கூட அமர்க்களப்படும்.  அம்மனுக்கு அன்றாடம் சிறப்பு வழி பாடுகளும், பூஜை புனஸ்காரங்களும் தொடர்ந்து நடைபெறும்.

பெண்கள் இயல்பாகவே இறை பக்தி மிகுந்தவர்கள். அதிலும் அம்மனுக்கு உகந்த ஆடிமாதத் தில்  பெண்கள் தங்களை வருத்திக்கொண்டு விரதம் இருப்பதிலும் அம்மனை வழிபடுவதிலும் பக்தியோடு நேர்த்திக்கடன் செலுத்துவதிலும் முனைப்போடு இருப்பார்கள். ஆடிமாதம் தொடங்கி முடியும் வரை ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடி அமாவாசை, வரலஷ்மி விரதம், ஆடிக்கூழ், ஆடிப்பெருக்கு என்று தொடர்ந்து இறைவனை வணங்கி வழிபட்டு வருவது முன்னோர்கள் காலத்தில் இருந்தே இருக்கிறது.

இவற்றில் முக்கிய மானது அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் தீமிதி திருவிழா. பூக்குழி என்று அழைக்கப்படும் தீமிதித்தல், அக்னி சட்டி ஏந்துதல், அலகு குத்துதல், மொட்டை தலையில் தேங்காய் உடைத்தல், ஆணி  செருப்பில் நடத்தல், கழுவேற்றுதல் போன்றவை குறிப்பிடத்தக்கது.

ஆண்கள், பெண்கள் மட்டுமல்லாமல் வயது பேதமின்றி சிறு குழந்தைகளும் இத்தகைய நேர்த்திக்கடனை செய்வது ஆச்சரியப்படுத்துகிறது. இவை வெறும் சடங்கு சம்பிரதாயத்துக்காக மட்டுமல்ல அறிவியல் காரணங்களுக்காகவுமே நமது முன்னோர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். விஞ்ஞானமும் ஆன்மிகமும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை என்பதை அவ்வப்போது படித்தும் கேட்டும் வருகிறோம். இந்த தீமிதித்தலும் இத்தகைய அறிவியல் ரீதியில் நமக்கு நன்மை உண்டாக்குவதே என்று சொல்லலாம்.

தீமிதிக்க விரும்பும் பக்தர்கள் தீமிதிக்கும் நாட்களுக்கு 21 நாட்களுக்கு முன்பே காப்பு கட்டி விரதம் மேற்கொள்வார்கள். உடலும் உள்ளமும் தூய்மை பெறும் வகையில் உணவிலும் மனதிலும் கட்டுப்பாடு கொண்டு வருவார்கள்.காலில் காலணி அணியாமல் வெறும் காலில் நடக்க வேண்டும். தினமும் இருவேளை குளிக்க வேண்டும்.

இத்தகைய பழக்கங்கள் உடலுக்கும் மனதுக்கும் சமச் சீர்மை பெறுகிறது. இக்காலத்தில் பஞ்சபூத சக்திகள் அனைத்தும் நம் உட லோடு நேரடி தொடர்பில் இருக்கும். இதை நம் முன்னோர்கள் புரிந்து விளக் கம் கொடுத்திருக்கிறார்கள். காலணி அணியாமல் பாதம் பட நடப்பது நிலத்தோடு தொடர்பை வலுப்படுத்துகிறது. தினமும் இரண்டு வேளை குளிப்பதன் மூலம் நம் உடலில் படும் நீரானது  பஞ்ச பூதத்தில் நீரோடு தொடர்புடையது.

விரதத்திலும் மெளன விரதத்திலும் பஞ்சபூதத்தில் காற்றையும், வாயுவின் சக்தியையும் நமக்கு அளிக்கிறது. இவை நான்கும் நம்மோடு தொடர்பு கொண்டு அதிக சக்தியைக் கொடுக்கும் போது பஞ்சபூத சக்திகளில் நெருப்பு சக்தியும் தீக்குழிக்குள் இறங்கும்போது சாத்தியமாகிறது.  ஆடிமாதத்தில்  உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறையும் காலம். இக்காலத்தில் நோய் தொற்றுகள் அதிகரிக்கும். மனதளவில் உளவியல் ரீதியாக நேர்மறை யான ஆற்றலைக் கொடுக்க இறைபக்தியைப் புகுத்தி இத்தகைய வீரமிக்க செயல்களில் ஈடுபடுத்திய நம் முன்னோர்கள் நிச்சயம் போற்றத்தக்கவர்களே..

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP