சதய நட்சத்திரக்காரர்கள் செல்ல  வேண்டிய திருத்தலம்…!

சதய நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் ஏற்படும் துன்பங்களை நீக்க புகலிடம் தேடி செல்ல வேண்டிய திருத்தலம் திருவாரூர் மாவட்டம் திருப்புகலூரில் உள்ள அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்.
 | 

சதய நட்சத்திரக்காரர்கள் செல்ல  வேண்டிய திருத்தலம்…!

சதய நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் ஏற்படும் துன்பங்களை நீக்க புகலிடம் தேடி  செல்ல வேண்டிய திருத்தலம் திருவாரூர் மாவட்டம் திருப்புகலூரில் உள்ள அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்... அசுரர்களுக்கு பயந்து தேவர்கள்  அபயம் தேடி  இங்கு தஞ்சமடைந்ததால் புகலூர் என்று அழைக்கப்பட்டது.

இங்கு மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சரணய புரீஷ்வரர், பிரத் திய க்ஷவரதர், கோணபிரான் என்னும் திருப்பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.  இறைவி கருந்தார் குழலி, இத்தலத்தில் நிறைமாத கர்ப்பிணிக்கு  நேரிடையாக வந்து  பிரசவம் பார்த்து  கூலியாக நிலத்தையும் பெற்றிருக்கிறாள்.  இதனால் சூளிகாம்பாள் என்ற பெயரிலும் அருள்பாலிக்கிறாள். இத்தல விநாயகர் ஞான விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் உள்ள சனிபகவான் அனுகிரக சனிபகவான்  என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இவருடன் நளச்சக்கரவர்த்தி யும்   இருக்கிறார்.

கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் என முக்காலங்களையும் உணர்த்தும் தலமாக விளங்குகிறது. அதற்கேற்ப  பூதேஸ்வரர், வர்த்தமானேஸ்வரர், பவிஷ் யேஸ்வரர் தனிச் சன்னிதியில் அமர்ந்திருக்கிறார்கள். 63 நாயன்மார்களில் முருக நாயனார் இத்திருத்தலத்தில் அவதரித்து வர்த்தமானேஸ்வரர் துணைவி மனோன் மணிக்கு  பூத்தொடுத்து தந்ததாக  வரலாறு கூறுகிறது. அக்னி பகவானுக்கு  பாவ விமோசனம் கொடுத்து காட்சி தந்த தலம் இது என்பதால் இறைவன் அக் னீஸ்வரர் என்னும் திருநாமத்தில் அழைக்கப்படுகிறார்.  இரண்டு  திருமுகத் தோடு 7 கைகளைக் கொண்டு 7 பொறிகளையும் 4 கொம்புகளையும்,  3 பாதங்கள் கொண்ட உருவத்திலும் அருள்பாலிக்கிறார். இக்காட்சி அபூர்வமானது என்ப தோடு காணக் கிடைக்காத அரியதும் கூட…

பாணாசுரன் தன் தாயார் சிவபூஜை செய்ய வேண்டி  பூலோகத்தில் இருக்கும் லிங்கங்களை பெயர்த்து கொண்டுவருவான். ஒருமுறை இத்தல  சுயம்புலிங்கத் தைக் கண்டு   மகிழ்ந்த அவன்  பெயர்த்து எடுக்க முயற்சித்த போது முடியாமல் போகவே தன்னுயிரைக் கொடுக்க துணிந்தான். இறைவன் தடுத்து ஆட் கொண்டார். உன் தாயாரின் பூஜைக்கு  யாம் வருவோம் என்றார். பாணாசுரன் தாய்  மகிழ்ந்து பூஜை செய்ததும் மீண்டும்  இத்தலத்திற்கு திரும்பியது சிவலிங் கம்.  அதனால் இறைவன் கோணப்பிரான் என்றும் அழைக்கப்படுகிறார். பாணா சுரன் தோண்டிய அகழியை இப்போதும் காணலாம். 

திருநாவுக்கரசர், சுந்தரர், திருநீலக்க நாயனார். சிறுத்தொண்ட நாயனார் ஆகி யோர்  இத்தலத்துக்கு வந்து பாடியும் இறைவனை வணங்கியும் இருக்கிறார் கள். இங்கு அப்பர் சதயம் நட்சத்திரம் நான்காம் சாமத்தில் இறைவனிடம் ஐக்கியமானதால் இத்தலம் சதய நட்சத்திரத்தினருக்கு உரிய தலமாயிற்று..

சதயம் நட்சத்திரக்காரர்கள்  நேரம் கிடைக்கும் போது அல்லது தாங்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்தன்று அக்னிபுரீஸ்வரரை வேண்டினால். துன்பங்கள் அனைத்தும் பறந்தோடும். திருமணப்பேறு அளிக்கவும், சுகப்பிரசவம் வேண்டி யும் இத்தல இறைவியை வழிபடலாம். புதிய வீடு கட்ட வாஸ்துபூஜை செய்ய இத்தலத்துக்கு வந்து வாஸ்துபூஜை செய்து செங்கலை வைத்து வழிபட்டு எடுத்து செல்கிறார்கள் பக்தர்கள்.. 

சதயம் நட்சத்திரக்காரர்கள் துன்பங்கள் தொலைந்தோடவும், துன்பம் நேரும் போது  உங்களைக் காக்கவும் அக்னிபுரீஸ்வரரை நாடுங்கள்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP