பரிசுத்தமான அன்பையே இறைவன் விரும்புவான்…!

ஒருவர் மீது நாம் வைக்கும் பரிசுத்தமான அன்பு.. இறைவன் மீது காட்டுவதற்கு சமம்...
 | 

பரிசுத்தமான அன்பையே இறைவன் விரும்புவான்…!

இறைவனுக்கு வேண்டிய அனைத்தும் செய்பவன் மட்டுமே  இறைவனை நெருங்க முடியும் என்றால் செய்ய இயலாத நிலைமையில் இருப்பவன் இறைவனை அடைய முடியாதா.. அப்படி இயலாத நிலையை அளிப்பதும் இறை வன்தானே... ஆனால் இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன்..  பரந்து விரிந்த ஆகாயமும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை அமைந்திருக்கும் நீரும், பூமி யும் அனைவருக்கும் பொதுவானது என்பது போல் இறைவனும் எல்லோருக்கும் பொதுவானவனே... 

அரசன் ஒருவன் இருந்தான். தர்ம காரியங்கள் செய்வதிலும்  பிறருக்கு அள்ளிகொடுப்பதிலும் சிறந்து விளங்கினான். இறைவனுக்கு  வேண்டிய அனைத் தும் கொடுப்பதால் நான் தான் இறைவனுக்கு நெருக்கமானவன். இறைவன் எனக்கு மட்டும்தான்  அருள்புரிவான் என்னும் எண்ணத்தை மட்டும் வலுவாக கொண்டிருந்தான். ஒருநாள் அரசன் கனவில் இறைவன் வந்து தனக்கு ஆலயம் எழுப்பும்படி  கூறினார்.  மிகுந்த மகிழ்ச்சி அடைந்த அரசன் அடுத்த நாளே அதற்கான பணிகளில் ஈடுபட தொடங்கினான்...

ஆலயப்பணிகள் தொடங்கியதும் ஊர்மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உதவினார்கள்....அந்த ஊரில் வயதான  கிழவி தன்  ஐந்துவயதுபேத்தி அன்ன பூரணியுடன் வசித்துவந்தாள்... வீட்டுக்கு ஒருவர் வந்து ஆலயப்பணிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று அரசர் கட்டளையிட்டார்.  எல்லோர் வீட்டிலிருந்தும் பணியாளர்கள் வந்தார்கள். 

பணியாளர்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்க நீர் மோர், கூழ் போன்றவற்றைத் தருவதாக கிழவி கூறினாள். இறைவனுக்குத் தொண்டு செய்ய சொன்னால் பணியாளர்களுக்கு செய்கிறாயா சரி உன்னால்தான் இயலவில்லையே....இதையாவது செய் என்று ஏளனமாக சொல்லியபடி கிளம்பினார் அரசர்.

மறுநாள் கிழவியும், பேத்தியும் ஆலயப்பணிகள் நடைபெறும் இடத்துக்கு வந்தார்கள்... சின்னக்குழந்தை  பிஞ்சு விரல்களில் தட்டு நிறைய கூழ் தம்ளர் களைக் கொண்டு வந்து கொடுத்தது..களைப்போடு பணியாற்றியவர்கள் அன்ன பூரணி அளித்த கூழை குடித்து களைப்பு நீங்க  இரட்டிப்பாக உழைத்தார்கள்.  குறுகிய காலத்தில் முகம் பார்த்து பசியாற்றும் அக்குழந்தை அங்கிருப்போரின் மனதில்  இளவரசியாக குடிகொண்டுவிட்டது. ஆலயப்பணிகள் குறித்த நேரத்தில் முடிக்கப்பட்டு குடமுழுக்கும் சிறப்பாக செய்யப்பட்டது.  இறைவா உன் விருப்பப் படியே புது ஆலயம் கட்டி முடித்துவிட்டேன்...  உன் தேவையை செவ்வனே நிறைவேற்றிவிட்டேன் என்றான் அரசன்.

கருவறையிலிருந்து வந்த அசரீரி.. ”இல்லை மகனே..  எனக்கு புதிய ஆடைகளும், அணிகலன்களும், இருப்பிடமும் கொடுத்தாய் . நெய்யால் தயார் செய்யப் பட்ட நைவேத்யமும் கூட உண்டுதான். ஆனால் இவையெல்லாம் எனக்கு திருப்தியளிக்கவில்லை. முகம்பார்த்து பசியாற்றும் அன்னபூரணியின் அன்புக்கு முன் இவையெல்லாம் எனக்கு திருப்தியளிக்கவில்லை...  எனக்கு அர்ப்பணிக்கும் பொருள்களை வைத்து நான் பக்தர்களை நெருங்குவதில்லை.. அன்பை வைத்துத்தான்  என்பதை  இனியேனும் உணர்ந்துகொள் என்றது.... 

ஒருவர் மீது நாம் வைக்கும் பரிசுத்தமான அன்பு.. இறைவன் மீது காட்டுவதற்கு சமம்...

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP