ஆன்மிகமும், அறிவியலும் வலியுறுத்துவது ஒன்றுதான்…

ராகுகாலம், எமகண்டம் போன்ற நேரங்களில் நல்ல காரியங்களைத் தவிர்த்துவிடுவோம். காலங்காலமாக இதை செய்து வருகிறோம் என்பதற்கு காரணங்கள் உண்டு. ஆனால் அதே போன்று செவ்வாய் மற்றும் சனிக்கிழமை களில் நல்ல காரியங்கள் செய்வதைத் தள்ளிப்போடுகிறோம்.
 | 

ஆன்மிகமும், அறிவியலும் வலியுறுத்துவது ஒன்றுதான்…

ராகுகாலம், எமகண்டம் போன்ற நேரங்களில் நல்ல காரியங்களைத் தவிர்த்துவிடுவோம். காலங்காலமாக இதை செய்து வருகிறோம் என்பதற்கு காரணங்கள் உண்டு. ஆனால் அதே போன்று  செவ்வாய் மற்றும் சனிக்கிழமை களில் நல்ல காரியங்கள் செய்வதைத்  தள்ளிப்போடுகிறோம். 

செவ்வாய் பிருத்வி என்றும், பூமி என்றும் அழைக்கப்படுகிறது.  ஜோதிட ரீதியாக செவ்வாய் என்றால் மங்களம் என்று சொல்வார்கள். செவ்வாய் தோஷம் என்றாலே பதறிவிடுகிறார்கள். ஆனால் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள்  பாக் கியம் கொண்டவர்கள்தான். தோஷம் என்னும் ஒற்றை வார்த்தை அவர்கள் மன தில் பல எதிர்மறையான சிந்தனைகளை உண்டாக்கிவிடுகிறது.

மனிதனுக்கு நல்ல இரத்த ஓட்டத்தையும், ஆரோக்யத்தையும் வலிமையும் கொடுப்பது செவ்வாய் தான். செவ்வாய்  பகவானுக்கு உரிய கடவுள் முருகக் கட வுள். செவ்வாய்க்கிழமை வெகு  விசேஷமானது என்று சாஸ்திரங்களில் சொல் லப்பட்டுள்ளது. மனையடி சாஸ்திரத்தின் படி செவ்வாய்க்கிழமைகளில் பூமி பூஜை செய்வது மிகவும் நல்லது. அன்றைய தினம் இறைவனுக்கு பூஜை செய்யும் போது  கடவுளின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும். மேலும் தொடங்கப்பட்ட விஷ யமும் தடங்கலின்றி சிறப்பாக நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

அஷ்டமி, நவமியில் எதையும் செய்யக்கூடாது என்று சொல்லியிருக்கிறார் கள். ஆனால் நவமியில் தான் ஸ்ரீராமர் பிறந்தார். அஷ்டமியில்தான் கிருஷ்ண பகவான் அவதரித்தார்.  எட்டு எண்ணும்கூட்டுத்தொகையும் நல்லதல்ல என்று சொல்கிறார்கள் ஆனால் அஷ்டலஷ்மிகள் எட்டு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

வெளிநாடுகளில் செவ்வாய்க்கிழமைகளில் விரும்பி திருமணம் செய்து கொள்கிறார்கள். பெண்ணுக்கு மாங்கல்ய பலனை தருவதற்கும் செவ்வாயின் உதவியை நாடுகிறார்கள். பெண்களுக்கு அணிவிக்கப்படும் மாங்கல்யத்தின் இருபுறமும்  செவ்வாய்க்குரிய பவளத்தைச் சேர்க்கிறார்கள்.

இது ஆகாது என்று சொல்லும்போதே அலட்சியம் செய்யாமல் அறியாமல் அச்சப்படும் மக்களே அதிகம் இருக்கிறார்கள். குடும்பத்துக்கு ஆகாது என்று ஒதுக்கி வைக்கும் நிகழ்வுகளை மீறி செய்தால் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்துவிடுமோ என்று ஆழமாக மனதில் பதிய வைப்பதால் ஏற்படும் எதிர்மறை சக்திகளின் ஆற்றல்  வலுக்கிறது.  பெரும்பாலும் அதனாலேயே அசம்பாவித மும் ஏற்பட்டுவிடுகிறது. பிறகு ஒதுக்கி வைத்ததைச் செய்தால் இப்படித்தான் நேரும் என்னும் மனோபாவம் இயல்பாகவெ ஏற்பட்டுவிடுகிறது. 

செய்யக்கூடாத நாட்களில் எல்லாமே செய்யலாம் என்று சொல்வதைவிட மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்களுக்கு வலு கொடுக்கும் வகையில் செயல்படாமல் இருப்பதே சிறந்தது. விஞ்ஞான ரீதியாக மனம் ஒன்றை செய் யக்கூடாது என்று  உறுதியாக நினைத்துவிட்டால் என்ன செய்தாலும் அது கெடுத லாகவே முடிந்துவிடும். ஆனால் செய்ய தகாத செயலையும் செய்தே ஆக வேண்டும் என்று மனம் முடிவு செய்த பிறகு இறங்கினால் அத்தகைய செயல் எதுவாயினும் மனதுக்கு ஆதரவாகவே முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. 

ஆன்மிகமும், அறிவியலும் வலியுறுத்துவது ஒன்றுதான்... ஆக்கபூர்வமாக சிந்தியுங்கள்... எதிர்மறை எண்ணங்களை வளர்க்காதீர்கள்.... 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP