அஸ்வினி நட்சத்திரக்காரர்கள்  செல்ல வேண்டிய ஆலயம்...

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களைக் குறைத்து கொள்ள அவர்களது நட்சத்திரங்களுக்குரிய ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது நல்லது.
 | 

அஸ்வினி நட்சத்திரக்காரர்கள்  செல்ல வேண்டிய ஆலயம்...

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களைக் குறைத்து கொள்ள அவர்களது நட்சத்திரங்களுக்குரிய ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது நல்லது.  அவர்களது ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் அவர்களுக்குரிய தலத்தில்  சென்று வழிபடும் போது துன்பங்கள் குறைந்து மனநிம்மதி பெருகும் என்பது ஐதிகம்.

அஸ்வினி முதல்  ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் உண்டு. ஒவ்வொருவரும் குலதெய்வம், இஷ்ட தெய்வங்களோடு அவர்களது நட்சத்திரத்துக்குரிய  கோயில் வழிபாடு செய்வதும் அவசியமாகிறது. 27 நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் சென்று வழிபட வேண்டிய கோயில்கள் உண்டு. அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயம் திருவாரூர் மாவட்டம்  திருத் துறைப் பூண்டியில் அமைந்துள்ள அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர்  திருக் கோயில்.

அஸ்வினி நட்சத்திர தேவதைகளும், மருத்துவ தேவதைகளும் தினமும் வழிபாடு செய்யும் தலம் பிறவி மருந்தீஸ்வரர் ஆலயம். அதனால்தான் அஸ்வினி நட்சத்திரம் உடையவர்கள் நோய்களிலிருந்து நிவாரணம் அடையும்  பேறை இயல்பிலேயே பெற்றிருப்பார்கள். இந்நட்சத்திரக்காரர்கள் தாங்கள் பிறந்த  நட் சத்திர நாளில் இந்த ஆலயத்துக்கு  சென்று வழிபடுவது மிகவும் நல்லது. மேலும் செவ்வாய் பகவான் வழிபாடு, சனீஸ்வர ஹோமம், தன்வந்திரி ஹோமம் செய் தால் நோயில்லாத வாழ்வை பெறுவார்கள்.

மூலவர் மருந்தீஸ்வரர், தாயார் பிரஹன் நாயகி அம்மாள்.. இத்தலத்தில் இறைவன் மேல்நோக்கி  அருள்பாலிக்கிறான். இங்கு சிவனின் அம்சமான கஜசம்ஹார மூர்த்தி விசேஷம். தாங்கள் செய்யும் யாகமே  சிவனுக்கு சக்தியை உண்டாக்குகிறது என்று  நினைத்த முனிவர்களின் ஆணவத்தை நீக்க சிவன் பிட்சாடனராக மாறுவேடத்தில்  அழகிய உருவில் வந்தார். அவர்  பின்னாடி சென்ற முனிவர்கள் தன்னிலை மறந்து ஆடை  அவிழ செல்ல அந்த நேரம் விஷ்ணு  மோகினி அவதாரத்தில் வந்தார்.  மனைவியை  விட சிறந்த அழகு கொண்ட மோகினியைப் பின்தொடர்ந்து சென்ற முனிவர்கள்,  தங்கள் நிலை உணர்ந்து தங்களை இந்நிலைக்கு ஆளாக்கிய  பிட்சாடனாரை அழிக்க சக்தி மிக்க யானையை  ஏவினார்கள்.  மாறுவேடம் கொண்டிருந்த சிவன் யானையை கொன்று அதன் தோலை ஆடையாக அணிந்து கொண்டார்.  இதனாலேயே இவர் கஜசம்ஹார மூர்த்தி என்னும் பெயரை பெற்றானர்.அமாவாசை, பெளர்ணமி போன்ற தினங்களில் கஜசம்ஹார மூர்த்தியை வணங்குவதால்  மனதில் இருக்கும் பயம் அகலும். 

அஸ்வினி நட்சத்திரம் உடையவர்கள்... தங்களுக்கு ஏற்படும் தோஷங்களைப் போக்கி கொள்ள இத்தலத்து இறைவன் அருள் புரிவார். திருமணத்தடை,  பிணி, குழந்தைப் பேறு, கல்வியில் மேன்மை  வேண்டும் அஸ்வினி நட்சத்திரக் காரர்கள் பிறவி மருந்தீஸ்வரர் தலத்துக்கு வந்து மருந்தீஸ்வரரை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் தடைகளும் நீங்கும் என்பதை கண் கூடாக உணரலாம். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP