Logo

ரோகிணி நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டி ஆலயம்

ரோகிணி நட்சத்திரத்காரர்கள் வழிபட வேண்டிய ஸ்தலம் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில். 108 வைணவத்தலங்களில் இதுவும் ஒன்று.
 | 

ரோகிணி நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டி ஆலயம்

மனிதப் பிறவி எடுத்தவர்கள் முற்பிறவியில் செய்த  பாவ புண்ணியங்களுக்கேற்பவே இப்பிறவியில் நன்மையையோ தீமையையோ அடைகிறார்கள் என்கிறது  புராணக்கதைகளும், சாஸ்திரங்களும், இந்துமதமும். ஒவ்வொரு வரும் தாங்கள் பிறந்த நட்சத்திரத்துக்கு உரிய ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டால் தோஷங்கள் நிவர்த்தி ஆகும். துன்பங்கள் குறையும் என்பது ஐதிகம். அந்த வகையில்   ரோகிணி நட்சத்திரத்காரர்கள் வழிபட வேண்டிய ஸ்தலம்  காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அருள்மிகு  பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில். 108 வைணவத்தலங்களில் இதுவும் ஒன்று.

மூலவர் பாண்டவதூதர், தாயார் சதய்பாமா, ருக்மணி. மூலஸ்தானத்தில் கிருஷ்ணர் 25 அடி உயரத்தில் அமர்ந்த  திருக்கோலத்தில் காட்சி தருவது வேறு எங்கும் இல்லாத சிறப்பு. கல்வெட்டுகளில் இவரை தூதஹரி என்று குறிப்பிட் டுள்ளனர். மகாபாரத கதையில் பாண்டவர்களில் மூத்தவரான தர்மர்  தன்னுடைய நாட்டை இழந்தபோது பஞ்சபாண்டவர்கள் ஐவருக்கும்  தலா ஒரு வீடு வேண்டும் என்று கேட்பதற்கு துரியோதனனிடம் தூதுவராக சென்றார் கிருஷ்ண பரமாத்மா.  தூதுவராக வந்திருக்கும் கிருஷ்ணரை அவமதிக்கும் நோக் கில் அவர்  அமரும் நாட்காலியின் கீழ் பாதாளத்தை உருவாக்கி, அதன் மேல் இலைதழைகளைப் போட்டு மூட செய்தான் துரியோதனன். பரமாத்மா அறியாத ரகசியமா... அவர்  அமர்ந்ததும் துரியோதனன் எதிர்பார்த்தப்படி பாதாளத்துக்குள் சரிந்தார் கிருஷ்ணர். துரியோதனன் எதிர்பாரா வண்ணம்  தாக்க வந்த மல்யுத்த வீரர்களை அழைத்து விஸ்வரூப தரிசனம் தந்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.

யுத்தம் முடிந்து பல காலங்களுக்குப் பிறகு ஜனமே ஜயர் என்ற மகாராஜா, வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக்கதை கேட்கும் போது கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனத்தைத் தானும் காண வேண்டும் என்னும் ஆவலைக் கொண் டார். பிறகு காஞ்சிபுரம் வந்து தவம் செய்தார் இவரது தவத்தை மெச்சிய பெருமாள் பாரத காலத்தில் ஏற்ற தூதுவ கோலத்தைக் காட்டினார். 

கிருஷ்ண பகவான் தன் பாதங்களைப் பூமியில் அழுத்தி  விஸ்வபாதயோக  சக்திகளைக் கொண்டு அருளும் தலம் இது என்பதால் பக்தர்கள் இங்கு அங்க பிரதட்சணம் செய்தால் அவர்களது 72 ஆயிரம் நாடிகளும்  துடிப்புடன் செயல் பட்டு துன்பங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதிகம்.

சந்திரனின் மனைவியான ரோகிணி தேவி இத்தலத்து இறைவனை வழிபட்டு சந்திரனை அடையும் பேறை பெற்றாள். சந்திரன் 27 நட்சத்திரங்களையும் மணம் புரிந்திருந்தாலும் ஞான சக்திகளைக் கொண்ட ரோகிணி நட்சத்திரத்தையே முத லில் மணந்தார். இன்றும் ரோகிணி நட்சத்திரம் சூட்சும்  வடிவில் வந்து இத்தல இறைவனை பூஜிப்பதாக நம்பப்படுகிறது. 

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  நேரம் கிடைக்கும்போதெல்லாம் காஞ்சிபுரம் வந்து பாண்டவதூதப்பெருமாளைத் தரிசிப்பது துன்பங்களிலிருந்து காக்கும். புதன், சனிக்கிழமை,  அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் அன்று இத்தல இறைவனை வணங்குவது பெறுவதற்கரிய பேறை பெற்றுத்தரும். கஷ்டங்கள் யாவும் விலகிவிடும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP