சாதுவான குணத்தைக்கொண்டிருக்கும் அவிட்டம் நட்சத்திரக்காரர்கள்…

அவிட்டம் நட்சத்திரம் செவ்வாயை அதிபதியாக கொண்டிருக்கும் மூன்றாவது நட்சத்திரம். அவிட்ட நட்சத்திரத்தின் முதல் மற்றும் இரண்டாவது பாதங்கள் மகர ராசியிலும் மூன்று மற்றும் நான்காம் பாதங்கள் கும்பராசியிலும் இடம்பிடிக்கும். 27 நட்சத்திரத்தின் வரிசையில் 23-வது இடத்தில் இந்நட்சத்திரம் இருக்கிறது. அஷ்ட வசுக்கள் பிறந்த நட்சத்திரம் இது என்பதால் இதை தேவநட்சத்திரம் என்றும் சொல்கிறார்கள்.
 | 

அவிட்டம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்தவர்களான நீங்கள் நேர் வழியில் நடக்கவே விரும்புவீர்கள். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவீர்கள். மனக்கசப்புகள் கொண்ட உறவுகள் உங்களை தேடி வந்தால் மன்னிக்கவும் தயங்க மாட்டீர்கள். உங்களுக்கென்று ஒரு பாதையை வகுத்து வைத்திருப்பீர்கள். எதையும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். எப்போதும் குடும்பத்துடன் வசிப்பதையே விரும்புவீர்கள். பிற பொருள் மீது ஆசைப்படமாட்டீர்கள்.

அவிட்டம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களான நீங்கள் தைரியத்தோடு உலா வருவீர்கள். கற்றுகொள்வதில் ஆர்வமிக்கவர்களாக இருப்பீர்கள். அடுத்தவர் தயவில் வாழ விரும்பமாட்டீர்கள். சுயநலமின்றி விளங்குவீர்கள். எந்த ஒன்றிலும் வெற்றி பெறும் வரை ஓயமாட்டீர்கள். உங்களுக்கு தீங்கு செய்தவர்களை மன்னித்தாலும் துரோகம் செய்தவரை மன்னிக்க மாட்டீர்கள். மறைமுக எதிரியாக இருந்தாலும் நேரடியாக இருந்தாலும் தைரியமாக எதிர் கொள்வீர்கள். பசி என்று வருபவரை வயிறு நிறைய செய்து மகிழ்வீர்கள்.

அவிட்டம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் பிறந்தவரான நீங்கள் சோம்பலை  கொண்டிருந்தாலும் பிறரை வசீகரிக்கும் தோற்றத்தைக் கொண்டவர்களாக இருப்பீர்கள். ஆடை ஆபரணங்களில் விருப்பம் கொண்டிருப்பீர்கள். வாழ்வின் எதார்த்தை புரிந்து கொள்ளும் குணத்தை பெற்றிருப்பீர்கள். விட்டு கொடுக்கும் குணத்தை கொண்டிருப்பீர்கள். மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசமாட்டீர்கள். இயன்றளவு உதவி  செய்து மகிழ்வீர்கள்.

அவிட்டம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் பிறந்தவர்களான நீங்கள் மனதை அடக்கி ஆள தெரிந்தவர்கள். முன்கோபி உடையவர்கள். நீங்கள் இருக்குமிடத்தில்  உங்களைப் பற்றிய பெருமை இருக்கும்படி பார்த்துக்கொள்வீர்கள். யோசித்து முடிவு எடுக்கவே விரும்புவீர்கள். உங்களின் ரகசியங்களை பகிர்ந்துகொள்வதை விரும்பமாட்டிர்கள். சமயத்தில் சுயநலவாதிகளாக இருப்பீர்கள்.

அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களான நீங்கள் இறை நம்பிக்கையோடு இருப்பீர்கள். யாரிடமிருந்தும் இலவசமாக எதையும் பெற விரும்ப மாட்டீர்கள். வசதி வாய்ப்புகளோடு இருந்தாலும் எளிமையான வாழ்க்கை வாழவே விரும்புவீர்கள். தடைகள் எவ்வளவு வந்தாலும்  நிதானமாக சமாளிக்கும் குணத்தைப் பெற்றிருப்பீர்கள். சாதுவான குணத்தைக் கொண்டிருப்பீர்கள்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP