இன்று சோமபிரதோஷம்...!

பாவங்கள் நீக்கி புண்ணியம் தரும். நீங்கள் செய்யும் ஒரு நாள் பிரார்த்தனை கோடி மடங்கு புண்ணியம் தர வேண்டுமெனில் முக்கிய நாட் களில் இறைவனுக்குரிய தினங்களில் விரதம் மேற்கொள்வதும் பூஜை செய்வதும் ஆலய தரிசனமும் செய்யுங்கள்.
 | 

இன்று சோமபிரதோஷம்...!

இறைவனை எக்காலங்களிலும் எந்நேரத்திலும் மனத்தில் நிறுத்தி பிரார்த்தனை செய்வது  பாவங்கள் நீக்கி புண்ணியம் தரும். நீங்கள் செய்யும் ஒரு நாள் பிரார்த்தனை கோடி மடங்கு புண்ணியம் தர வேண்டுமெனில்  முக்கிய நாட் களில் இறைவனுக்குரிய தினங்களில் விரதம் மேற்கொள்வதும் பூஜை செய்வதும் ஆலய தரிசனமும் செய்யுங்கள்.  

இன்று சோமபிரதோஷம். சோமவாரம் என்பது  திங்கள் கிழமையைக் குறிக்கும். இது சிவப்பெருமானுக்குரிய விசேஷநாள். அமாவாசை,பெளர்ணமியிலிருந்து வளர்பிறை, தேய்பிறை   13 ஆம் நாள்களில் வரும்  திரையோதசி திதி தான்  சிவனுக்குரிய  பிரதோஷ தினமாகக் கொண்டாடப்படுகிறது. 

சோமபிரதோஷம், சனி பிரதோஷம், சனி மஹாபிரதோஷம் என மூன்று பிர தோஷங்கள்  சிறப்பு மிக்கவையாக சொல்லப்படுகின்றன. இன்று சோமபிர தோஷம். பிரதோஷ காலத்தில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை  சிவாலயலங்களுக்குச்  சென்று ஓம் நமசிவாயா என்னும் திருமந்திரத்தை மனம் உருகி  சொல்லுங்கள்.  

பிரதோஷ தரிசனம் அதிக புண்ணியம் தரும் என்கிறார்கள் ஆன்மிக பெரியோர்கள். பிரதோஷ காலத்தில்  அபிஷேகம் செய்ய பால், இளநீர் வாங்கி செல்லுங்கள். சிவனுக்கு வில்வம் சாற்றி வழிபடுங்கள்.  இயன்றவளவுக்கு முதியோர்களுக்கு தானம் செய்யுங்கள்.

மன நிம்மதியை இழந்து தவிப்பவர்கள் துன்பம் நீங்கவும்.. வாழ்வில் வளம் பெறவும்  பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு  ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதுங்கள்.. சிவனது அருளை பெறுங்கள்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP