சனி தோஷமும் சகல தோஷமும் நீங்க யந்திர சனீஸ்வரர்...

சனிக்கிழமை அன்று ஏரிக்குப்பம் சென்று சனீஸ்வரரைத் தரிசித்து வாருங்கள். போகும் போது மறக்காமல் வில்வ மாலை வாங்கிசெல்லுங்கள். சகல தோஷமும் நீங்க அருள் புரிவார் யந்திர சனீஸ்வரர்.
 | 

சனி தோஷமும் சகல தோஷமும் நீங்க யந்திர சனீஸ்வரர்...

நவக்கிரகங்களில் ஈஸ்வரர் பட்டம் பெற்றவர் சனிபகவான். ஒவ்வொரு ராசியினருக்கும் உயிர்வாழ்வதற்கு ஜீவ நாடி இவர் என்பதால் ஆயுள்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். சனிபகவானை விக்கிரக வடிவத்தில் தரிசித்திருக்கிறோம். சனிப்பெயர்ச்சியால் உண்டாகும் தோஷத்தை நிவர்த்தி செய்யவும் ஜாதக ரீதியாக சனி நீசம் பெறவும் அருள்புரிந்து கொண்டிருக்கும் யந்திர வடிவ சனீஸ்வர பகவான் தலத்தைப் பற்றி அறிவோமா?

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியிலிருந்து 10 கி.மீ தொலைவில் ஏரிக் குப்பம் என்னும் ஊரில் யந்திர சனீஸ்வர திருக்கோயில் அமைந்திருக்கிறது. பிரதான மூலவர் சனீஸ்வரர். மூலஸ்தானத்தில் தாமரை பீடத்தின் மீது ஆறரை அடி உயரமும் இரண்டறை அடி அகலமும் கொண்டு சிவலிங்க அமைப்பில் அறு கோண வடிவத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து சனீஸ்வரர் காட்சியளிக்கிறார். அவரது அன்னை சாயாதேவியும் யந்திர வடிவில் இங்கு அருள் பாலிக்கிறார்.

யந்திரங்கள் செப்பு தகட்டில் தான் செய்யப்பட்டிருக்கும். ஆனால் சித்தர்களால் உயரமான கல்லில் யந்திர சனீஸ்வரர் சித்தர்களால் வடிவமைக்கப்பட்டிருக்கிறார். சிற்றரசர் ஒருவர் சனீஸ்வரனுக்காக இந்த ஆலயத்தை எழுப்பியிருக்கிறார்.

சிலையின் உச்சியில் சூரியனும் சந்திரனும் நடுவில் காகமும் அமைந்திருக்கிறது. சிலையின் மத்தியில் அறுகோண அமைப்பில் ஷட்கோண யந்திரம் உள்ளது. மேலும் இச்சிலையில் பீட்சாட்சர மந்திரம், லட்சுமி  கடாட்ச மந்திரம், நமசிவாய என்னும் மந்திரங்கள் இடமிருந்து வலமாக பொறிக்கப்பட்டுள்ளது. முகம் காட்டும் கண்ணாடியை இந்த சிலையின் முன்பு வைத்து பார்த்தால் மந்திரங்களை படிக்கலாம் என்பது சிறப்பு. 

ஆலயத்தின் முகப்பில் ஐந்து காகங்கள் பூட்டிய தேரில் சனீஸ்வரர் வருவது போல் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன் மண்டபத்தில் ஓவிய வடிவில் நவக்கிரகங்கள் வாகனத்துடன்  உள்ளனர். ஆலயம் கூரை இல்லாமல் இருப்பதால் யந்திர சனீஸ்வரர் மீது  மழை, வெயில், பனி,காற்று அனைத்தும் படுகிறது.

சனிபகவான் தாயாரோடு சாந்தமாக இருப்பதால் பக்தர்களின் வேண்டுதலுக்கு செவிசாய்க்கிறார் என்று சொல்கிறார்கள். சனி தோஷம் நீங்கவும், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கண்டகச் சனி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் தங்கள் துன்பம் நீங்கவும், குழந்தைப்பேறு பெறவும், திருமண பேறு கிடைக்கவும் இவரை வழிபட்டால் வேண்டுதலை யந்திர சனீஸ்வர பகவான் நிச்சயம் நிறை வேற்றுவார் என்கிறார்கள்.

சனிக்கிழமை அன்று ஏரிக்குப்பம் சென்று சனீஸ்வரரைத் தரிசித்து வாருங்கள். போகும் போது மறக்காமல் வில்வ மாலை வாங்கிசெல்லுங்கள். சகல தோஷமும் நீங்க அருள் புரிவார் யந்திர சனீஸ்வரர்.

 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP