சக்தி பீடம் -26 அம்பாஜி கோயில் 

சக்திபீடங்களில் இன்று நாம் பார்க்கவிருக்கும் தேவி குஜராத்- இராஜஸ்தான் எல்லையில் வீற்றிருக்கிறாள். சக்தி பீடங்களில் அம்பாளின் இதயம் விழுந்த இடம் என்பதால் இது சக்தி பீடமாகவே அழைக்கப்படுகிறது.
 | 

சக்தி பீடம் -26 அம்பாஜி கோயில் 

சக்திபீடங்களில் இன்று நாம் பார்க்கவிருக்கும் தேவி குஜராத்- இராஜஸ்தான் எல்லையில் வீற்றிருக்கிறாள். சக்தி பீடங்களில் அம்பாளின் இதயம் விழுந்த இடம் என்பதால் இது சக்தி பீடமாகவே அழைக்கப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் அஹமதாபாத் மாவட்டத்தில் பனஸ்கந்தா அம்பாஜி ஊரில் குடியிருக்கிறாள் அம்பாஜி என்றழைக்கப்படும் அம்பேமா அம்மன். அம்மன் விக்ரகம் இல்லாமல் இங்கு ஸ்ரீ விசா இயந்திரத்தை வழிபடுகிறார்கள். வேதகாலத்துக்கு முன்பிருந்தே இத்தலம் இருப்பதால் சக்தி வழிபாடு முன்பே இருந்தது என் பதை அறியலாம்.

தலவரலாறு:
மகிஷாசுரன் என்னும் அசுரன் அக்னிதேவனை நினைத்து தவம் புரிந்து ஆயுதத்தால் தமக்கு அழிவு நேரக்கூடாது என்னும் வரம் வாங்கினான். அதன் பிறகு இந்திரலோகத்தை கைப்பற்றினான். ஆசை யாரை விட்டது வைகுண்டத்தையும், கயிலாயத்தையும் வளைக்க விரும்பினான். ஆயுதத்தால் அழிவு நேரக் கூடாது என்று அவன் வாங்கிய வரத்தால் அவனை எதுவும் செய்ய இயலாமல் தேவர்கள் திணறினார்கள்.  தவமிருந்து பெற்றாலும் அதை தவறாக பயன்படுத்தினால்தேவி பொறுத்தருள்வாளா? எல்லோரும் அவளை சரணடைந்தார்கள். தேவியும் அவர்களுக்கு அபயம் அளித்து அசுரனை ஒழித்து அங் கேயே தங்கி பக்தர்களுக்கு காட்சிதருகிறாள்.

புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றொரு கதையின் படி இராம, இலட்சுமணர்கள் சீதையைத் தேடியபோது சிருங்கி முனிவரை சந்தித்தார்கள். அவர்கள் இந்த அம்பாஜி தேவியை வழிபட்டால் உங்களுக்கு உரிய வழிகாட்டுவாள் என்று கூறினார். அதன்படி அவர்கள் இத்தேவியை வழிபட அம்பிகை அஜய் என்ற அஸ்திரத்தை அளிக்க அதைக் கொண்டு இராவாணனை வென்று இராமன் சீதையை மீட்டதாக கூறுகிறார்கள்.

இத்தலம் ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றீயிருக்கலாம் என்பதை கிருஷ்ணன் கோகுலத்தில் விளையாடிய போது அவருக்கு மூன்றுவயதில் யசோதையும், நந்தகோபரும் இங்குதான் முடி காணிக்கை செலுத்தினார்களாம். அதை நினைவுகூறும் வகையில் ஆண்குழந்தைகளுக்கு மட்டுமே இங்கு மொட்டை அடிக்கப்படுகிறது. பெரியவர்களும், பெண்குழந்தைகளுக்கு கூட இங்கு மொட்டை அடிக்கப்படுவதில்லை.

தலசிறப்பு:
இங்கு யந்திர வழிபாடு மட்டுமே. இத்தலத்தில் சிங்கவாகனத்தின் மீது அம்பிகை அமர்த்தியிருப்பது போல் தோற்றம் உண்டு. ஆனால் இங்கு அம்மன் விக்ரகம் கிடையாது. விஷயந்திரம் என்ற தங்கத்தால் செய்யப்பட்ட யந்திரமே வழிபாட்டுக்குரியது. யந்திரமே பார்க்க அம்பிகை சிலைபோன்ற தோற்றத்தில் உள்ளது. மார்பிள் பிளேட்டில் இந்த யந்திரத்தைப் பொறுத்தி ஆபரணங்களால் அலங்கரித்திருக்கிறார்கள்.இதை அருகில் இருந்து பார்க்கமுடியாது என்பதோடு இதன் வலிமையும் அதிகம் என்பதால் கண்களில் பேண்டேஜ் கட்டி விடுகிறார்கள்.
 மார்பிள் கற்களால் கட்டப்பட்ட பிரகாரத்தில் அம்பாஜி சிறிய கோயிலில் வீற்றிருக்கிறாள். தேவியை அம்பே மா என்றும், சச்சார் சவுக்வாலி என்றும் அழைக்கிறார்கள்.

கோபுரத்தின் உச்சியில் 103 அடி உயரத்தில் மார்பிளாலான கவசம் 3 டன் எடையில் தங்கக் கவசத்தால் மூடப்பட்டுள்ளது. அம்பாஜியின் இதயம் விழுந்த பகுதி என்பதால் இயற்கையாகவே இத்தலம் சக்தி மிகுந்த தலமாக கருதப்படுகிறது. செல்வோமா அம்பாஜியைத் தரிசிக்க..

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP