சக்தி பீடம் -21 மகாகாளி

தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் திருவாலங்காட்டில் குடிகொண்டிருக்கும் மகாகாளி அம்மனின் சக்தி பீடங்களில் காளி சக்தி பீடமாக விளங்குகிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயத் தலங் களில் இது 248 வது திருத்தலம் ஆகும்.
 | 

சக்தி பீடம் -21 மகாகாளி

தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் திருவாலங்காட்டில் குடிகொண்டிருக்கும் மகாகாளி அம்மனின் சக்தி பீடங்களில் காளி சக்தி பீடமாக விளங்குகிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயத் தலங் களில் இது 248 வது திருத்தலம் ஆகும். 

தல வரலாறு:
அசுரர்கள் எப்போதும் தேவர்களுக்கும் மக்களுக்கும் கடுமையான துன்பத்தை கொடுக்க கூடியவர்கள். ஆலமரம் அதிகமுள்ள  காட்டில் தங்கியிருந்த  சும்பன், நிசும்பன் என்னும் அசுரர்கள் தேவர்களுக்கும், மக்களுக்கும் அதீத துன்பங்களை விளைவித்து வந்தார்கள். அசுரர்களினால் பாதிக்கப்பட்ட தேவர்கள்  எம்பெருமானிடமும் பார்வதி தேவியிடமும் முறையிட்டார்கள்.

அசுரர்களை அழிக்க பார்வதி தேவி தன்னுடைய கண்களிலிருந்து காளியை உருவாக்கினாள். அசுரர்களை அழித்த பிறகு அந்த இடத்துக்கு தலைவியாக காளி தேவியை இருக்கும்படி பணித்தாள் பார்வதி தேவி. பார்வதியின் வாக்குப்படி அசுரர்களை வென்ற காளி அவர்களது இரத்தத்தைக் குடித்து பல கோர செயல்களை செய்தாள். அப்போது முஞ்சிக்கேச கார்க்கோட முனிவர் வேண்டுக்கோளுக்கு செவி சாய்த்து அங்கு வந்தார் எம்பெருமான்.

வரும்போது கோரத்தாண்டவம் ஆடிவந்த பெருமானை வரவேற்ற காளி இருவரும் நடனமாடுவோம். யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே இந்த காட்டை ஆள தகுதிபடைத்தவர்கள் என்றாள். சிவனும் ஒப்புக்கொண்டு காளியுடன்  ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். ஆட்டத்தின் போது காதில் இருந்த மணியை கீழே வைத்து அதை இடக்கை பெருவிரலால் மீண்டும் எடுத்து தன் ஆட்டத்தைத் தொடர்ந்தார்.

அதைக் கண்ட காளி திகைத்தாள் இது போல் தன்னால் ஆட முடியாது என்பதை ஒப்புக்கொண்டாள். சிவனிடம் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடைந்தாள் அப்போது இறைவன் என்னையன்றி வேறு யாரும் உனக்கு இணையில்லை. என்னை வழிபாடு செய்ய வருபவர்கள் உன்னை வழிபாடு செய்த பிறகு என்னை வழிபட வேண்டும். அப்போதுதான் முழு பலன் கிடைக்கும். என்று வரமளித்தார். அப்போதிருந்து காளி இக்கோயிலையாண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்திருக்கிறார்.

தல சிறப்பு:
ஆலமரக்காட்டில் சுயம்புவாக தோன்றிய  இறைவன்  நடனம் ஆடியதால்  வடாரண்யேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். அம்மையே என்று எம்பெருமானால் அழைக்கப்பட்ட காரைக்காலம்மையார் தலையை பாதம் போல் நினைத்து நடந்து வந்து எம்பெருமான் பாதம் பணிந்து  வணங்கிய தலம் இது. காரைக்காலம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் பெற்ற சிறப்புக்கொண்ட தலம் இது. இங்கு நடக்கும் கமலத்தேர் சிறப்பு வாய்ந்தது. இங்கு இறைவன் வடாரண்யேஸர் ஒன்றும் இறைவி வண்டார்குழலி என்றும் அழைக்கப்படுகிறாள்.

கணவன் மனைவிக்கிடையே இருக்கும்  பிணக்குகள் நீங்கி ஒற்றுமைகளை உண்டாக்கும் தலம் என்றும் சொல்லலாம். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP