சக்தி பீடம் -19 பகவதி

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் கொடுங்கலூர் பகுதியில் உள்ளது பகவதி அம்மன் கோவில். இது சக்தி பீடங்களில் மகா சக்தி பீடமாக அழைக்கப் படு கிறது.
 | 

சக்தி பீடம் -19 பகவதி

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் கொடுங்கலூர் பகுதியில் உள்ளது பகவதி அம்மன் கோவில். இது சக்தி பீடங்களில் மகா சக்தி பீடமாக அழைக்கப் படு கிறது.

தல வரலாறு:
சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகியைத் திருமணம் செய்தபிறகு கூடா நட்பால் செல்வங்கள் அனைத்தும் இழந்து இறுதியாக கண்ணகியை சரணடைந்தான். இருவரும் பிழைப்பு தேடி மதுரை நகருக்கு வந்தார்கள். அங்கு வணிகம் செய்ய கண்ணகியின் காற்சிலம்பை விற்க போகும் போது பாண்டிய அரசியின் காற்சிலம்பு காணாமல் போக கள்வன் கோவலன் என்று நினைத்து அவனை கொன்று விட்டார்கள்.

ஒன்றும் அறியாத தன் கணவனை கொன்ற அரசனிடம் சென்ற கண்ணகி கோபத்தில் மன்னனை சபித்ததோடு மதுரை நகரையும் எரித்துவிட்டாள். அப்போதும் சினம் தணியாமல் சேர நாடு நோக்கி திரும்பினாள் அவளுடைய பக்தியையும், சக்தியையும் நினைத்து சேர அரசன் அங்கு அவளுக்கு கோவில் எழுப்பினான். அந்தக் கோவில் தான் பகவதி கோவிலாக மாறிவிட்டதாக கூறுகிறார்கள். உக்கிர கோலத்தில் இந்த ஆலயத்துக்கு வந்த கண்ணகி அம்மனை வேண்டி தவமிருக்க தொடங்கினாள். அப்போது கண்ணகியை தன்னிடம் அழைத்துக் கொண்டு முக்தி கொடுத்த தலம் இது என்கிறார்கள்.

மற்றொரு புராணக்கதையின் படி பரசுராமரையும், மக்களையும் தாருகன் என்னும் அசுரன் கொடுமைப்படுத்தி வந்தான். உடனே மக்கள் சிவப்பெருமானை சரணடைந்தார்கள். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியேறிய பார்வதி தேவி பத்ரகாளியாக உருவெடுத்து அசுரனை வதம் செய்ததால் இத்தலம் பகவதி அம்மனுக்குரிய தலமாக மாறியது.

தல சிறப்பு:
இங்கிருக்கும்  அம்மனின் விக்ரகம் பலா மரத்தினால் செய்யப்பட்டது. அம்மனுக்கு இங்கு அபிஷேகம் கிடையாது. மாறாக சாந்தாட்டம் என்னும் சிறப்பு அபிஷேகம் மட்டுமே. இந்த ஊர் மக்கள் இவரை தாயாகவே பாவிக்கிறார்கள். தங்கள் வீட்டில் நடக்கும் எந்த விஷேசங்களுக்கும் முதல் மரியாதையை இந்த அம்மனுக்கே செலுத்துகிறார்கள். இவள் லோகாம்பிகை, கன்யகா தேவி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறாள்.

ஆறடி உயரத்தில் எட்டு திருக்கரங்களுடன் பெரிய கண்களைக் கொண்டு சிறிய இடையில் முகத்தில் எதிரியை அழிக்கும் கோபத்தோடு  வலதுகாலை மடக்கி இடது காலை தொங்கவிட்டு வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். இந்த கருவறைக்கு அருகில் ரகசிய அறை ஒன்றும் இருக்கிறது. இதற்கும் சிறப்பு பூஜைகள் உண்டு. கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் சிவபெருமானையும் பகவதியையும் ஒரெ இடத்தில் நின்றபடி ஒரு சேர தரிசிக்கலாம். எனினும் அம்மனுக்கே முக்கியத்துவம் அதிகம். 

அம்மன் ஆரம்பகாலத்தில் பத்ரகாளிகளிலேயே இவள்தான் அதிக உக்ர தெய்வமாக இருந்துள்ளாள். இவளுக்கு உயிர்பலியும், நைவேத்யமும் செய்யப்பட்டு வந்தது. அதன் பிறகு ஸ்ரீ ஆதிசங்கரர் யந்திர பிரதிஷ்டை செய்து அம்மனை சாந்த சொரூபிக்கியானார். இப்போது அம்மனுக்கு உயிர்ப்பலிகள் கிடையாது. உயிர்ப்பலிக்கு பதில் குங்குமத்தில் குருதி பூஜை செய்யப்படுகிறது. 

தல பிரார்த்தனை:
அம்மை நோயால் அவதிக்கண்டவர்களும், வெப்ப நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த அம்மனை வழிபடுகிறார்கள். குறிப்பாக குழந்தைப்பேறு வேண்டி துலாபாரம் செலுத்துவதாக வேண்டினால் பகவதி அம்மன் மனம் மகிழ்ந்து அருள்புரிகிறாள். சென்றுவருவோமா பகவதி அம்மனை தரிசிக்க…

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP