சக்தி பீடம் - 6 : சங்கரி மகாகாளி!

மகாபாரத காலத்தில் அவந்தி இளவரசர்கள், கவுரவர்கள் பக்கம் நின்றார்கள். இராமயணக் காலத்தில் இராமர் வந்து நீராடியதால் ராம் காட் என்னும் குளியல் கட்டம் ஏற்பட்டு உள்ளது. இத்தலம் சரித்திர காலத்திலிருந்தே புகழ் பெற்றதை அறிய முடிகிறது. உஜ்ஜயினில் சித்தவட் என்று அழைக்கப்படும் அதிசய ஆலமரம் ஒன்று உள்ளது. பல நூறுவருடங்களாக வளராமல் சிறிய அளவிலேயே இருக்கிறது.
 | 

சக்தி பீடம் - 6 : சங்கரி மகாகாளி!

சக்தி பீடங்கள் 51-ல், அடுத்து நாம் பார்க்கவிருக்கும் கோவிலானது, உஜ்ஜைனி. இது அம்பாளின் முழங்கை விழுந்த இடம். இது, மகோத்பலா சக்தி பீடம் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானுக்குரிய 12 ஜோதிலிங்கங்களில் இத்தலமும் ஒன்று. மத்தியப் பிரதேசத்தில், உஜ்ஜைனி மாவட்டத்தில் இருக்கும் இத்தலம் ஏழு மோட்ச நகரங்களுள் ஒன்றாக விளங்குகிறது.

அயோத்தி, மதுரா, ஹரித்துவார், காசி, காஞ்சி, அவந்திகை, துவாரகை என்று அழைக்கப்படும் மோட்ச தலங்களில் அவந்திகையை ஆண்ட ஜைன அரசன் உஜ்ஜையினி என்று பெயரிட்டான். இத்தலம் ஏரியின் அருகில், ஐந்து அடுக்குகளைக் கொண்டு அமைந்திருக்கிறது. ஒரு தளம் பூமி மட்டத்துக்குகீழ் உள்ளது. உஜ்ஜைனி= உத்+ஜைன= ஜைன சமயத்தை உச்ச நிலைக்கு கொண்டு வந்த நகரம்இவை என்று குறிப்பிடப்படுகிறது.
உஜ்ஜைனி காளி கோயில் காளி மந்திர் என்றழைக்கப்படுகிறது.

தலவரலாறு:
ஜோதிர்லிங்கம் பற்றி சிவபுராணத்தில் கூறியபடி இத்தலத்தின் புராணக் கதை இது. அவந்தி நகரில் விலாசன் என்னும் அந்தணன் இருந்தான். சிறந்த சிவ பக்தனான இவன் ஆட்சி செய்த நகரை அந்நகரின் அருகே இருந்த இரத்தின மாலை என்ற மலையில் வாழ்ந்த தூஷணன் என்ற அரக்கன் சூறையாடி மக்களை துன்புறுத்தினான். 

சக்தி பீடம் - 6 : சங்கரி மகாகாளி!

மக்கள் விலாசனை அணுகி தங்களைக் காக்கும்படி எம்பெருமானிடம் வேண்டுதல் வைக்க சொல்ல, அந்தணரும் சிவ                                                                                          லிங்கத்தை பிடித்து வைத்து நாள்தோறும் வழிபட்டு வந்தார். அதைக் கேள்வியுற்ற அரக்கன், அந்த இடத்துக்கு வந்து சிவலிங்கத்தை காலால் உதைத்து, துவம்சம் செய்தான். அப்போது லிங்கத்திலிருந்து வெளிப்பட்ட எம்பெருமான் பெரும்கோஷம் எழுப்பி அந்த அசுரனை வதைத்தார். மக்களின் வேண்டு கோளுக்கிணங்க அவர் அங்கேயே இருக்க ஒப்புக்கொண்டார்

தேவகிக்கு பிறந்தகுழந்தை யசோதையிடம் கொடுக்கப்பட்டு அங்கிருந்த பெண் குழந்தையைச் சிறைச்சாலைக்கு எடுத்துசென்றார்கள். கம்ஸன் அந்தக் குழந்தையை வெட்டி சாய்த்தான். அப்போது அந்த குழந்தை காளியாக அவதாரம் எடுத்து இங்கேயே தங்கிவிட்டதாகவும் சொல்கிறார்கள். இத்தல காளி மகாகாளி என்று அழைக்கப்படுகிறாள். இவளுக்கு ஹரசித்தி தேவி என்ற பெயரும் உண்டு. 

தல சிறப்பு:
இத்தலம் தேவார வைப்புத்தலம். இறைவனுக்கு பூஜித்த பொருள்களை மீண்டும் பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் இத்தலத்தில் வில்வத்தையும், பிரசாதத்தையும் மீண்டும் பயன்படுத்துகிறார்கள்.12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு மகா கும்பமேளா சிறப்பாக நடைபெறுகிறது.

தேவாமிர்தம் சிந்திய நான்கு புண்ணியத்தலங்களில் இந்தத் தலமும் ஒன்று. கிருஷ்ணர், பலராமர், சுதாமர் இங்குவந்துதான் சாந்தீப முனிவரிடம் கல்வி பயின்றிருக்கிறார்கள்.குப்தர்கள், மெளரியர்களின் தலைநகராக இருந்த சிறப்புக்களைக் கொண்டது.

மகாபாரத காலத்தில் அவந்தி இளவரசர்கள், கவுரவர்கள் பக்கம் நின்றார்கள். இராமயணக் காலத்தில் இராமர் வந்து நீராடியதால் ராம் காட் என்னும் குளியல் கட்டம் ஏற்பட்டு உள்ளது. இத்தலம் சரித்திர காலத்திலிருந்தே புகழ் பெற்றதை அறிய முடிகிறது. உஜ்ஜயினில் சித்தவட் என்று அழைக்கப்படும் அதிசய ஆலமரம் ஒன்று உள்ளது. பல நூறுவருடங்களாக வளராமல் சிறிய அளவிலேயே இருக்கிறது.

இங்கிருக்கும் கட்டடங்களின் நிழலை வைத்தே மணி, நிமிடம், திதி, நட்சத்திரம் முதலானவற்றை அறியலாம். விக்கிரமாதித்தர் காளியிடம் வரம்பெற்றார்.

தல பிரார்த்தனை:
சித்தவட் ஆலமரத்தில் வேண்டி மஞ்சள் கயிறை வைத்து வணங்கி எடுத்து கட்டிக்கொண்டால் நினைத்தது நடக்கும். மனிதர்களிடம் அசுர குணம் தலை தூக்கும் போது இத்தலத்துக்கு வந்து மகாகாளியை வழிபட்டால் மனம் அமைதிபெறும். அலைபாயும் மனத்தை அடக்கி ஆள நிச்சயம் உஜ்ஜயினி தரிசனம் தேவை..    

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP