சக்தி பீடம் -20 மகாலட்சுமி

மராட்டிய பாணியில் கட்டப்பட்டிருக்கும் மகாலட்சுமி கோயில் சக்தி பீடங்களில் கரவீர பீடம் என்றழைக்கப்படுகிறது.
 | 

சக்தி பீடம் -20 மகாலட்சுமி

மராட்டிய பாணியில் கட்டப்பட்டிருக்கும் மகாலட்சுமி கோயில் சக்தி பீடங்களில் கரவீர பீடம் என்றழைக்கப்படுகிறது. நாம் செல்வத்துக்கும் செழிப்புக்கும் பொறுப்பான கடவுளாக மகாலட்மியைப் போற்றுகிறோம். பெண் தெய்வங்கள் எழுந்தருளியிருக்கும் 18 முக்கிய ஆன்மிக தலங்களில் இதுவும் ஒன்று என்று புராண சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோயில் இங்கிருப்பதால் இந்த இடம் இந்தியாவின் முக்கிய ஆன்மிக தலமாக விளங்குகிறது. மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் என்னும் ஊரில் இத்தலம் அமைந்திருக்கிறது.

தல வரலாறு:
பார்வதி தேவி கோலாசுரன் என்னும் அசுரனை வதம் செய்ய சிங்கவாகனத்தில் எழுந்தருளினாள். அதனால் இந்ததலம் கோலாப்பூர் என்று அழைக்கப்படுகிறது. பிரளய காலத்தின் போது கடல் பொங்கி எல்லா இடங்களையும் தன்னுள் சங்கமித்துக்கொள்ள இந்த பகுதியை மட்டும் அன்னை தனது திருக்கரங்களால் தூக்கி நிறுத்தியதாக வரலாறு கூறுகிறது. அகத்திய மாமுனிவர் காசியை விட்டு வெளியேறி ஈசனிடம் வேண்டியபோது அவருக்காக சிவபெருமான் கட்டிய இத்தலம் குளபுரம் என்று அழைக்கப்பட்டாலும் காசிக்கு சமமான நகராக கருதப்படுகிறது.

தல சிறப்பு:
அன்னை மகாலட்சுமியின் சிற்பம் 1300 வருடங்களுக்கு முந்தையது. கிடைப்பதற்கரிய ரத்தினக்கல்லால் ஆனது. அன்னை ஆதிசேஷன் குடைப்பிடிக்க கையில் அமுதசுரபி ஏந்தி நின்று அருள்பாலிக்கிறாள். அன்னை ஒரு சதுர பீடத்தில் நின்றபடி காட்சிதருகிறாள். மகாதுவாரம் எனப்படும் மேற்கு வாயிலில் அழகிய தீபஸ்தம்பங்களைக் காணலாம்.

காளி, சரஸ்வதி, நவகிரகங்கள், காசி விஸ்வநாதன், சீதை, இலட்சுமணன், மாருதியுடன் கூடிய ஸ்ரீ இராமன் ஆகியோரையும் இத்தலத்தில் தரிசிக்கலாம். இவள் குடிகொண்டிருக்கும் இந்த ஆலயத்தைச் சுற்றி 50 சிறிய கோயிலும் ஊர் முழுவதும் 3000 சிறு கோயில்களும் கட்டப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் சூரியனின் கதிர்கள் அம்மன் மீது பட்டு  தங்க நிறத்தில் பிரகாசிக்கும்படி அமைக்கப்பட்டிருக்கிறது. ஜனவரி 31 மற்றும் நவம்பர் 9 தேதி களில் மாலை வேளையில் கர்ப்பக்கிரகத்தின் வழியாக மகாலட்சுமியின் பாதத் தில் நிற்கிறது. பிப்ரவரி 1 மற்றும் நவம்பர் 10 தேதிகளில் சூரியனின் கதிர்கள் மகாலட்சுமியின் மார்பு பகுதியில் விழுகிறது. பிப்ரவர் 2 மற்றும் நவம்பர் 11 தேதிகளில் சூரியனின் கதிர்கள் மகாலட்சுமியின் உடல் பகுதி முழுவதும் விழுகிறது. சூரிய கதிர்கள் அம்மனின் மீது படும் நேரம் அம்மனைத் தரிசிப்பது நல்லது என்கிறார்கள் ஆன்மிக பெரியோர்கள்.

வாழ்வில் தோஷங்கள் எதுவாக இருந்தாலும் இத்தலத்துக்கு வந்து மகாலட்சுமியை வேண்டினால் தோஷங்கள் நீங்குவதாக ஐதிகம். வற்றாத செல்வத்தைப் பெற மகாலட்சுமியின் அருளைப்பெற வாழ்வில் ஒருமுறையாவது தரிசிப்போம்.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP