சக்தி பீடம் -18 அபிராமி

சக்தி பீடம் -18 அபிராமி
 | 

சக்தி பீடம் -18 அபிராமி

சக்தி பீடம் -18 அபிராமி

அம்மனின் சக்திபீடங்களில்  இப்போது நாம் காணவிருப்பது திருக்கடையூரில் இருக்கும் அபிராமி. அம்மனின் சக்திபீடங்களில் இது கால சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் இது 110 வது தேவாரத் தலம் ஆகும். 
தல வரலாறு:

கயிலையில் சிவபெருமானிடம் சென்ற பிரம்மா தனக்கு ஞான உபதேசம் அருள வேண்டும் என்று கூறினார். சிவபெருமான் வில்வ விதைகளை பிரம்மா விடம் கொடுத்து பூலோகத்தில் நீ இந்த விதைகளை விதைக்கும் போது விதை விழுந்த ஒரு நிமிடத்தில் வில்வமரம் வளரும் இடத்தில் நான் உனக்கு ஞான உபதேசம் செய்கிறேன் என்று கூறினார்.

சிவபெருமானின் கோரிக்கையை ஏற்று பிரம்மா பூலோகம் வந்த பிரம்மா இந்த தலத்தில் வந்து விதை போட்ட தும் வில்வரமரம் வளர்ந்தது.
சிவபெருமான் பிரம்மாவுக்கு காட்சி தந்து ஞான உபதேசம் செய்துவைத்தார். இவர் தான் ஆதி வில்வநாதனாக  தனி சன்னிதியில் அருளுகிறார். தேவர்கள் பாற்கடலில் எடுத்த அமிர்தத்தை விநாயகரை வணங்காமல் சாப்பிட சென்றார் கள். அதனால் கோபமுற்ற விநாயகர் அதை எடுத்து மறைத்து விட்டார்.

அதன் பிறகு தவறை உணர்ந்த தேவர்கள் விநாயகரை வணங்கி அமிர்த கலசத்தைப் பெற்று இத்தலத்தில் வைத்தார்கள்; அமிர்த கலசம் வைத்த இடத்திலிருந்து சுயம்பு லிங்கமாக உருவானது. இவரே அமிர்தகடேஸ்வரர் என்று அழைக்கப் பட்டார்.

தல சிறப்பு:
 இங்கு சிவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அட்ட வீரட்ட தலங்க ளில் இது எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்த தலம். கருவ றைக்குள் இருக்கும் மூலவரை உற்று நோக்கினால் பின்பு இன்னொரு லிங்கம் பிம்பமாக தெரியும். எமன் மீது வீசிய பாசக்கயிறு லிங்கத்தின் மீது பாலா பிஷேகம் செய்யும் போது இப்போதும் காண முடிகிறது.

சிதம்பரத்தில் ஆகாயம் ரகசியம் போல, சுவாமிக்கு வலப்புற மதிலில் யந்திரத் தகடு உள்ளது. திருக்கடையூர் ரகசியம் என்று இதைக் குறிப்பிடுகிறார்கள். எமன், மார்க்கண்டேயன் உயிரை பறிக்க வந்த போது மார்க்கண்டேயன் லிங் கத்தை தழுவ எமனின் பாசக்கயிறு லிங்கத்தின் மீதும் சேர்ந்து விழுந்தது.

சிவன் கோபம் கொண்டு எமனை வதம் செய்ததும் பூலோகத்தின் பாரங்கள் தாங்காத பூமாதேவி ஈசனிடம் முறையிட சிவன் கோபம் தணிந்து எமனுக்கு உயிர் கொடுத்தார்.  இவை நடந்தது இத்தலத்தில் தான். இவரே காலசம் ஹாரமூர்த்தி என்னும் பெயரில் அருளுகிறார். சாதாரணமாக பார்க்கும் போது காலசம்ஹார மூர்த்தியை மட்டுமே தரிசிக்க முடியும். பூஜை செய்யும் போது பீடத்தை திறக்கும் போதுதான் எமனையும் சேர்த்து பார்க்கமுடியும்.

மஹாவிஷ்ணு அமிர்த கலசத்தை தேவர்களுக்கு பரிமாறும் போது சிவபூஜை செய்ய நினைத்தார். அம்பிகையில்லாமல் சிவபூஜை செய்யக்கூடாது என்று நினைத்த மஹாவிஷ்ணு தனது ஆபரணங்களை கழற்றினார். ஆபரணத்திலி ருந்து அபிராமி  தோன்றினாள்.  அதனால் அபிராமியின் அன்னையாக மஹா விஷ்ணுவை வழிபடுகிறார்கள்.

அபிராமி அம்பிகையின் பக்தர் சுப்ரமணிய பட்டர் அம்பிகையின் மீது மிகுந்த பற்றுகொண்டவர். அம்பிகையின் முகத்தைக் கண்டு அகமகிழ்ந்த அவர்  சர போஜி மன்னரிடம்  அமாவாசை தினம் ஒன்றை பெளர்ணமி என்று கூறி விட் டார். உடனே மன்னர் அபிராமி பட்டரிடம் இன்று பெளர்ணமி என்று நிரூபிக் காவிட்டால் உமக்கு கடுமையான தண்டனை என்று கூறவே பட்டர் அன்னை யிடம் சரணடைந்து அபிராமி அந்தாதி பாடினார். 79 வது பாடல் பாடும் போது அபிராமியும் காதில் இருந்த சந்திர அம்ச காதணியை வானில் எறியவே அது முழுநிலவு போல் காட்சியளித்தது.

இப்போதும் ஒவ்வொரு தை அமாவாசை அன்றும் இந்நிகழ்ச்சி நடக்கிறது. புஷ்ப அலங்காரத்தில் வரும் அம்பிகைக்குஅர்ச்சகர்கள் அபிராமி அந்தாதி பாடி ஆரத்தி காட்டுகிறார்கள். 79 வது பாடல் பாடும் போது மின்விளக்கு எரியும் இந்த வைபவத்தைக் காண மக்கள் திரளாக கூடுகிறார்கள்.
முருகனுக்கு ஆறுபடை வீடு இருப்பது போல் பிள்ளையாருக்கும் ஆறுபடை வீடு உண்டு. சிவன் சன்னிதிக்கு வலதுபுறம் நந்திக்கு அருகில் வெளிப்பிரகாரத் தில் கள்ளவாரண விநாயகர் சன்னிதி விநாயகரின் படைவீட்டில் 3 ஆக குறிக்கிறார்கள்.
தல பிரார்த்தனை:
இத்தலத்தில் உக்ரரத சாந்தி பூஜை, சஷ்டியப்த  பூர்த்தி பூஜை, பீமரத சாந்தி பூஜை, சதாபிஷேகம், ஆயுஷ்ய ஹோமம் போன்றவற்றை செய்து கொள்கி றார்கள். உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் இங்கு வந்து  சஷ்டியப்த பூர்த்தி செய்துகொள்கிறார்கள்.
அபிராமி அம்மன் சக்தி வாய்ந்தவள். இவளை வழிபட்டால் திருமணப்பேறு, குழந்தைபாக்யம், கல்வி ஞானம் போன்றவற்றை வற்றாமல் அருளுகிறாள். எமபயம் கொண்டவர்களைக் காக்கும் இத்தலத்துக்கு வந்து வழிபட்டால் அனைத்து பிரச்னைகளும் நீங்கிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையுடன் நாமும் அபிராமி அம்மனை வழிபட்டு வருவோம். 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP