கடவுளை உங்கள் ஆத்மாவுக்குள் தேடுங்கள்....

காற்றை பார்க்க முடியாது. நீரின் சுவையை உணர முடியாது. ஆகாயத்தை அளக்க முடியாது. ஆனால் இவையெல்லாம் நம்மைச் சுற்றி நீக்கமற நிறைந்திருக்கிறது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை கடவுள் இருப்பதும்.
 | 

கடவுளை உங்கள் ஆத்மாவுக்குள் தேடுங்கள்....

காற்றை பார்க்க முடியாது. நீரின் சுவையை உணர முடியாது. ஆகாயத்தை அளக்க முடியாது. ஆனால் இவையெல்லாம் நம்மைச் சுற்றி நீக்கமற நிறைந்திருக்கிறது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை கடவுள் இருப்பதும். ஆனால் கடவுளை  பார்க்க முடியவில்லையே என்று வருந்துபவர்களுக்கான கதை இது...

முனிவர் ஒருவர் இருந்தார். அவரது சீடர்களில் புத்திசாலியான இளவரசன் ஒருவன் இருந்தான். எதையும் ஆராய்ந்து சீர் தூக்கி பார்க்கும் அவனை எல்லோருக்கும் பிடிக்கும். ஒருமுறை  எல்லோரும் முனிவரிடம் அமர்ந்து பேசிக் கொண் டிருந்தார்கள். பேச்சு கடவுளைப் பற்றி வந்தது. வழக்கம் போல் புத்திசாலி இளவரசன் “கடவுள் எங்கே இருக்கிறார் குருவே.. அவரை பார்க்க வேண்டும்” என்றான். முனிவர் சிறிது நேரம் யோசித்தார். “இதற்கு பதில் சொல்வதற்கு முன்பு நீ பக்கத்தில் இருக்கும் ஊருக்குச் சென்று என் சகோதரனைப் பார்த்துவிட்டு  நலம் விசாரித்துவிட்டு வா” என்றார். சரி என்று சம்மதித்தான் இளவரசன்..

காட்டைத்தாண்டிய பயணம் என்பதால் வழியில் சாப்பிட முனிவரின் மனைவி உணவுப்பொட்டலத்தைக் கட்டி கொடுத்தாள். அதை வாங்கிக்கொண்டு பயணப் பட்டான் இளவரசன். மரநிழலில் கொண்டு வந்த உணவை சாப்பிட்டான். தண்ணீர் தாகம் ஏற்பட்டது. என்ன செய்வது என்று சுற்றும் முற்றும் பார்த்தபோது வழியில் கண் தெரியாத வயோதிக தோற்றமுடையவர் அருகிலிருந்த செடிகளைத் தொட்டு தடவியபடி முகர்ந்து பார்த்து  இலையைப் பறித்து பைகளில் சேகரிக்க தொடங்கினார். 

மேடு பள்ளத்தில் தடுமாறி விழப்போனவரைத் தடுத்து நிறுத்திய இளவரசனுக்கு நன்றி கூறிய வயோதிகர், கையில் இருந்த இலையைக் கொடுத்தார். “இதை வைத்துக்கொள் மகனே... கடும் விஷத்தோடு தீண்டும் நாகத்தின் விஷத்தை முறிக்கும் சக்தி இந்த இலைக்கு உண்டு” என்றார். எதற்காக என்று கேட்கபோன இளவரசன் ஏதோ தோன்றவும் எதையும் பேசாமல் வாங்கிக் கொண்டான். “பக்கத்தில் கிணறு ஒன்று இருக்கும் அமிர்தமாய் இருக்கும் தண்ணீரை உண்டு உன் தாகம் தீர்த்துகொள்” என்றார். நன்றி உரைத்து கிணற்றடிக்கு சென்றான் இளவரசன்.  

பக்கத்து நாட்டிலிருந்து வேட்டைக்கு வந்த அரசர் மயக்க முற்று கீழே விழுந்திருந்தார். ஓடிப்போய் தூக்கிய போது  நாகம் தீண்டியதன் அறிகுறி தெரிந்தது. கையில் இருந்த இலை சாற்றை அரசனின் வாயில் ஊற்றினான்.  அரசன் உறக்கத்திலிருந்து எழுவது போல் எழுந்தான்.  மகிழ்ச்சியோடு கட்டியணைத்த அரசர் ”உனக்கு எந்த உதவியையும் செய்ய தயாராக இருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் என்னைப் பார்க்க வரலாம்” என்று கூறி சென்றார்.

ஒருவழியாய் பக்கத்து ஊருக்குச் சென்று முனிவரின் சகோதரரிடம் நலம் விசாரித்து ஆசிரமத்துக்கு வந்தான் இளவரசன்.  நீ போனதில் இருந்து திரும்பி வந்தது வரை நடந்ததை ஒன்று விடாமல் சொல் என்றார். அனைத்தையும் கூறினான் இளவரசன். ”வழிநெடுக இத்தனை கடவுளைப் பார்த்தாயா?” என்றார் முனிவர். இளவரசனுக்கு ஒன்றும் புரியவில்லை. ”என்ன சொல்கிறீர்கள்?” என்றான். ”ஆமாம் வயோதிக தோற்றத்தில் விஷம் நீக்கும் இலையைத் தந்தவர் கடவுள். தாகம் தீர்க்க காட்டில் விறகு வெட்டியவனும் கடவுள். எப்போதும் உதவுகிறேன் என்று அன்புடன் சொன்ன அரசரும் கடவுள். நீயும் கடவுள் தான்...இப்போது புரிந்ததா” என்றார் முனிவர். ”புரிந்தது சாமி” என்றான் புத்திசாலி  சீடனான இளவரசன்.  

கடவுளை வெளியில் தேடவேண்டாம். உங்களுக்குள் உங்கள் ஆத்மாவில்  தேடுங்கள்..

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP