ரேவதி நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய தலம்

ரேவதி நட்சத்திரக்காரர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற பக்தர்களுக்கு 27 எண்ணிக்கை வரும்படி தாலிச்சரடு, பிரசாத பொட்டலங்கள், குங்கும மஞ்சள் போன்றவற்றை கொடுத்தால் வேண்டுதல் தடையின்றி நீங்கும் என்பது நம்பிக்கை.
 | 

ரேவதி நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய தலம்

27 நட்சத்திரங்களும் இறைவனை வழிபட வேண்டிய தலங்களைப் பற்றி பார்த்துவருகிறோம். இன்று இறுதி நட்சத்திரமான  ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் ஏற்படும் தோஷங்களைக் களைய செல்ல வேண்டிய திருத்தலம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். திருச்சி மாவட்டம் காருகுடி என்னும் ஊரில் வீற்றிருக்கும் இத்தலத்தில் இறைவன் சுயம்புவாக வீற்றிருக்கிறார். தாயார் கருணாகரவல்லி.

சந்திரன் தனது மனைவிகளான 27 நட்சத்திரங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்திருந்தார். ஒருமுறை சந்திரனுக்கும் 27 வது நட்சத்திரமான ரேவதிக்கும் சிவப்பார்வதியைத் தரிசனம் செய்ய வேண்டும் என்னும் ஆசை தோன்றியது. அவர்களது ஆசையை நிறைவேற்ற இறைவனும் இறைவியும் இத்தலத்தில் காட்சி கொடுத்து மகிழ்வித்தனர்.

இறைவனின் அருளால் மகிழ்ந்த ரேவதி இன்றும் அரூபவடிவில் வந்து தினமும் இறைவனுக்கும் இறைவிக்கும் பூஜை செய்வதாக நம்பப்படுகிறது. ரேவதி நட்சத்திரநாளில் கார் எனப்படும் ஏழுவகை மேகங்களும் இத்தலத்தில் வழிபாடு செய்வதாக ஐதிகம். இத்தலத்தின் கீழ் அசோக நட்சத்திரம் சுற்றுகிறது. 

பிரகாரத்தில் விநாயகர், முருகன், காசி விசாலாட்சி, குங்குமவல்லி, சூரியன், காலபைரவர், நவகிரகம், நந்தி, தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, சண்டி கேஸ்வரர், துர்க்கை  முதலானோர் எழுந்தருளியுள்ளனர்.

ரேவதி நட்சத்திரக்காரர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற பக்தர்களுக்கு 27 எண்ணிக்கை வரும்படி தாலிச்சரடு, பிரசாத பொட்டலங்கள், குங்கும மஞ்சள் போன்றவற்றை கொடுத்தால் வேண்டுதல் தடையின்றி நீங்கும் என்பது நம்பிக்கை.

பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற ரேவதி நட்சத் திரம் முடிந்து அஸ்வினி தொடங்கும் இடைப்பட்ட நிமிடத்தில் இறைவனுக்கு  பால் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர்.

இத்தலத்தில் வருணபகவானுக்கு வேண்டி ஹோமம் செய்தால் மழை பெய்யும் என்பது காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.. விவசாயிகள் விவசாயம் செழிக்க இத்தலத்தில் பிரார்த்தனை செய்கிறார்கள். ரேவதி நட்சத்திரக் காரர்கள் தங்கள் வாழ்வில் மேலும் மேன்மை பெற நேரம் கிடைக்கும் போது அல்லது பிறந்த ஜென்ம நட்சத்திரத்தன்று வழிபாடு செய்யலாம். 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP