நவராத்திரி ஸ்பெஷல் - கொண்டாட்டம் ஒன்று தான், பெயர் தான் வேறு

புரட்டாசி மாதம் வரும் அமாவாசை மறுநாள் தொடங்கி பத்து நாட்களுக்குக் கொண்டாடப்படும் பண்டிகை நவராத்திரி. இந்தப் பண்டிகை எல்லா மாநிலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகிற தொன்மையான வழிபாடாகும்
 | 

நவராத்திரி ஸ்பெஷல் - கொண்டாட்டம் ஒன்று தான், பெயர் தான் வேறு

புரட்டாசிமாதம் வரும் அமாவாசை மறுநாள் தொடங்கி பத்து நாட்களுக்குக் கொண்டாடப்படும் பண்டிகை நவராத்திரி ஆகும். இந்தப் பண்டிகை எல்லா மாநிலங்களிலும்  வெவ்வேறு பெயர்களில் வழிபடப்பட்டு வருகிறது..நவராத்திரி விழா நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு பெயர்களில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தின் கலாச்சாரத்தை  போற்றும் நவராத்திரி திருவிழா தசரா என்ற பெயரில் 10 நாட்கள் வெகு உற்சாமாக கொண்டாடப்படுகிறது. கர்நாடகத்தில் சாமுண்டீஸ்வரி. 

வட இந்தியாவிலும், உத்தரப்பிரதேசத்திலும் ராம் லீலா என்று கொண்டாடுகின்றனர். ராமாயண நாடகங்கள் நடிக்கப்படுகிறது.  விஜய தசமியன்று இராவணன் கும்பகர்ணன் உருவப் பொம்மைகள் பெரிய உருவங்களாக செய்து பொது இடங்களில் வைத்து பட்டாசுகளை வெடித்து  உருவங்களை எரித்துக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

மேற்கு வங்கத்தில் நவராத்திரி திருவிழாவை துர்கா பூஜா என்று அழைக்கிறார்கள். இவ்விழாவின் போது பல இடங்களில் 'பேண்டல்கள்' (பந்தல்கள்) அமைத்து  அதில் அசுரனை வதம் செய்யும் துர்கா சிலை, லட்சுமி சிலை, சரஸ்வதி சிலைகளை அமைத்து வழிபடுவார்கள்.

குஜராத்தின் நவராத்திரி திருவிழாவின் போது, கர்பா நடனம் என்று அழைக்கப்படும் இந்த நடனத்தை ஆண்களும் சில நேரங்களில் பெண்களோடு சேர்ந்து ஆடுவதுண்டு. அதேவேளையில் குஜாரத்தின் சில பகுதிகளில் தாண்டியா நடனமாடியும் நவராத்திரி விழாவை மக்கள் கொண்டாடுகிறார்கள்.

தமிழ் நாட்டில் முற்றிலும் பெண்களுக்கான பண்டிகையாகத் திகழ்கிறது நவராத்திரி. பெண்கள் நவராத்திரி விழாவை கொலு வைத்து சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இந்த கொலுவில் நவராத்திரியின் ஒன்பது நாட்களையும் குறிக்கும் விதமாக ஒன்பது படிகளில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி சிலைகள்  வைக்கப்பட்டிருக்கும். அதோடு ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையான சுண்டல்களை செய்து படைக்கிறார்கள். பெண்கள் தங்களின் ஆர்வத்தையும்,  கலைத்திறனையும் கொலுவில் அழகுறக் காட்டி மகிழ்வர்.

பொதுவாக நவராத்திரி பண்டிகையின் போது வீட்டில் விதவிதமான பொம்மைகளுடன் பெண்கள் கொலு வைப்பார்கள். உறவினர்கள், நண்பர்கள், யாவர்களையும்  அழைத்துக் கூடி, வழிபாடு செய்து கொண்டாடும் விசேஷ தினமாகும். அதே நேரத்தில் பக்தியுடன் தேவியை வணங்கித் துதிக்கும் பண்டிகையாகவும் இது  விளங்குகிறது. 

அன்னையை மூன்று சக்திகளாகப் பாவித்து, பார்வதி, லக்ஷ்மி, சரஸ்வதி என ஒவ்வொருவருக்கும் மூன்று நாட்களை ஒதுக்கி இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞான  சக்தி என ஒன்பது நாட்கள் பூஜை செய்யப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP