மூர்த்தி நாயனார்

சைவ அடியார்களுக்கு பல இன்னல்களைத் தந்தான். சைவத்தை அவர்கள் கை விடுமாறு துன்புறுத்தினான். அவர்கள் வழியாக சைவம் பரவுவதை தடுத்தான். சைவ மதத்தைப் பரப்பாமல் கண்காணித்தான். சைவ அடியார்கள் வழியாக சிவாலயங்களுக்கு நடைபெறும் வழிபாடுகளையும் திருப்பணிகளையும் நடை பெறவிடாமல் தடுத்தான்.
 | 

மூர்த்தி நாயனார்

பாண்டிய நாட்டின் மதுரையில் எம்பெருமானுக்கு திருத்தொண்டு புரிந்துவரும், வணிகர் குலத்தில் தோன்றியவர் மூர்த்தி நாயனார். எந்நேரமும் சிவபெருமானை நினைத்து வாழ்வதையே பெரும் பேறாக எண்ணி வாழ்ந்திருந்தார்.

பற்றில்லாமல் வாழ்ந்த சிவனடியார்களில் ஒருவரான இவர், அன்றாடம் மதுரை சொக்கநாதனின் திருமேனிக்கு சந்தனக்காப்பு பூசுவதற்காக சந்தனம் அரைத்து தரும் பணியை செய்துவந்தார்.

வீரம் மிகுந்த பாண்டிய நாட்டை, கோழை மன்னன் ஒருவன் ஆட்சி புரிய அத்தருணத்தில் வடுக நாட்டு மன்னன் நால்வகை படையெடுத்து வந்து, மதுரையைக் கைப்பற்றியதோடு அதை வெற்றிக்கொண்டு தன்வசம் வைத்துக்கொண் டான். அவனை பொறுத்தவரை நேர்மை, நாணயம், தர்மம் என்று எதுவும் கிடையாது. 

குறிப்பாக தெய்வ பக்தி நிறைந்த சைவ தொண்டர்களையும், மக்களை யும் துன்புறுத்தி வந்தான்.அவன் சமண மதத்தைத் தழுவுவதால் மக்கள் சைவ மதத்தைப் பின்பற்றுவதை எதிர்த்தான்.

சைவ அடியார்களுக்கு பல இன்னல்களைத் தந்தான். சைவத்தை அவர்கள் கை விடுமாறு துன்புறுத்தினான். அவர்கள் வழியாக சைவம் பரவுவதை தடுத்தான். சைவ மதத்தைப் பரப்பாமல் கண்காணித்தான். சைவ அடியார்கள் வழியாக சிவாலயங்களுக்கு நடைபெறும் வழிபாடுகளையும் திருப்பணிகளையும் நடை பெறவிடாமல் தடுத்தான்.

சைவ அடியார்களுக்கான துன்புறுத்தலில் மூர்த்தி நாயனாரும் சிக்கினார். பலவிதமான இடர்ப்பாடுகளை அவருக்கும் கொடுத் தான்.
சந்தனம் அரைத்து சந்தனக்காப்புக்கு உதவிய மூர்த்தி நாயனாருக்கு சந்தனம் கிடைக்காமல்செய்தனர் வடுகனின் ஆட்கள். சந்தனம் கிடைக்காமல் ஐயனுக்கு எப்படி சந்தனக்காப்பு நிகழ்த்த முடியும்.

அவர்கள் தமக்கிழைத்த அத்தனை கொடுமைகளையும் பொறுத்துக்கொண்ட மூர்த்திநாயனாருக்கு இறைவனுக்கு செய்யும் திருத்தொண்டையும் தடுக்கும் போது மனம் குமுறியது. சந்தனம் இல்லையென்றால் என்ன சந்தனம் உரைத்துக்கொடுக்கும் எமது கரங்கள் இருக்கிறதே என்று அங்கிருந்த கல்லில் தமது கைகளைத் தேய்த்தார். 

கைகளில் குருதி வழிய சதை தேய்ந்து எலும்பு தேய்ந்தது. அதைக் கண்ட எம்பெருமான் மூர்த்தி நாயனாரைத் தடுத்து விரைவில் இந்த நாட்டை ஆளும் பேறை பெறுவாய் அதுவரை பொறுத்திரு என்றார். மூர்த்தி நாயனாரின் கைகள் முன்பு போல் பொலிவுபெற்றன.

இதற்கிடையில் பெயர் அறியா நோயால் படுக்கையில் விழுந்த வடுக மன்னன் பலனற்று போனான். அமைச்சர் பெருமக்கள் ஒன்று கூடி அரசனைத் தேர்ந் தெடுக்கவேண்டும் என்று முடிவுசெய்த போது பட்டத்து யானையின் கண்க ளில் துணியைக் கட்டி யாரை அரசனாக தேர்வு செய்கிறாயோ அவரை தும்பிக் கையால் அழைத்துவார் என்றார்கள். யானை கோயிலின் வாசலில் இருந்த மூர்த்தி நாயனாருக்கு மாலை அணிவித்து அரண்மனைக்கு அழைத்து வந்தது. 

தாங்களே இந்த நாட்டை ஆளவேண்டும் என்று அமைச்சர்களும், பெரு மக்க ளும் வேண்டுகோள் விடுக்க, மூர்த்தி நாயனார் தாம் அரசராக பொறுப்பேற்க வேண்டுமென்றால் நாட்டில் சமணம் ஒழிந்து சைவம் தழைக்க வேண்டும் அப்போதுதான் நான் பதவி ஏற்பேன் என்றார். அமைச்சர் பெருமக்கள் சமண மன்னன் அழிவுற்றதோடு அவர்கள் மதமும் அழிந்தே போனது. ஆதலால் தயக்கமின்றி தாங்கள் எங்களைக் காக்க பொறுப்பேற்க வேண்டும் என்றார்கள்.

மக்களின் விருப்பப்படி அரியணை ஏறினார் மூர்த்தி நாயனார். எனினும் ஆடம் பரங்களைத் துறந்து எம்பெருமானின் திருவடியை மட்டுமெ நினைத்து வாழும் பேறு போதும். எவ்வித பட்டாடையும் தேவையில்லை என்றார். சுற்றியிருந் தவர்கள் மூர்த்தி நாயனாரையும் அவர் எம்பெருமான் மீது கொண் டுள்ள அன்பையும் கண்டு நெகிழ்ந்தார்கள். அவரது விருப்பப்படியே அவருக்கு எளி மையாக முடிசூட்டினார்கள். முடி சூட்டிய கையோடு எம்பெருமானையும், தாயாரையும் வணங்கி வலம் வந்தார்.

எம்பெருமானை நினைத்து திருவெண்ணீறு தரித்து அறம் தவறாமல் ஆட்சி செய்தார். இவரது ஆட்சியில் சமணம் ஒழிந்து சைவம் வளர்ந்தது. மக்கள் நல் வாழ்வு வாழ்ந்தார்கள் எம்பெருமான் கூற்றுப்படி நல்லாட்சி புரிந்து இறைவ னின் திருப்பாதத்தில் சரணடைந்தார். ஆடிமாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் மூர்த்தி நாயனாருக்கு குருபூஜை கொண்டாடப்படுகிறது.    
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP