செவ்வாய்க்கிழமைகளில் முடிவெட்டலமா?

ஆண்கள் முகச்சவரம்,,, முடி வெட்டுதல் போன்றவற்றைச் செவ்வாய்க் கிழமைகளில் கண்டிப்பாக செய்யவே கூடாது. அப்படி செய்தால் அது குடும்பத்துக்கு ஆகாது. வீட்டில் லஷ்மி தங்காது. தரித்திர நிலை உண்டாகும்.
 | 

செவ்வாய்க்கிழமைகளில் முடிவெட்டலமா?

முன்னோர்கள் பின்பற்றிய சில பழக்க வழக்கங்களை இன்றும் நாம் பின்பற்றுகிறோம். அவற்றில் ஒன்று செவ்வாய்க்கிழமைகளில் முடிவெட்டக் கூடாது என்பது. இதற்கு முக்கிய காரணம் உண்டு.

ஆன்மிக ரீதியாக:

       ஆண்கள் புதன் அல்லது சனிக்கிழமை தோறும் எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும். பெண்கள் வெள்ளிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். அப்படி குளித்தபிறகே பூஜை செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். அதே போன்று ஆண்கள் முகச்சவரம்,,, முடி வெட்டுதல் போன்றவற்றைச் செவ்வாய்க் கிழமைகளில் கண்டிப்பாக செய்யவே கூடாது. அப்படி செய்தால் அது குடும்பத்துக்கு ஆகாது. வீட்டில் லஷ்மி தங்காது. தரித்திர நிலை உண்டாகும். ஆரோக்கியம் சீர் குலையும் இப்படியெல்லாம் விஞ்ஞானத்தைக் கண்டறிந்து மெய்ஞானம் என்னும் பெயரில் ஈடு பட வைத்தார்கள். முந்தைய தலைமுறைகள் வரை  இதைக் கடைப்பிடிக்கவும் செய்தார்கள். இது போன்று வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் முடி வெட்டுதல் கூடாது என்றும் சொல்கிறார்கள். இன்றைய தலைமுறைகள் பெரும்பாலும் இதைக் கண்மூடித்தனமான மூட நம்பிக்கை என்றே கருதுகிறார்கள்.

விஞ்ஞான ரீதியாக:

     மனிதனிடம் இருக்கும் மென்மையான உறுப்பு மூளை. அதை மிகவும் பத்திரமாக பாதுகாப்பாக வைத்திருப்பது கூந்தல் மயிர்க்கற்றைகள் தான். வான் மண்டலத்தில் தான் நவக்கிரகங்கள் குடிகொண்டிருக்கின்றன. செவ்வாய்க் கிழமையில் தான் செவ்வாய்பகவானும் குடிகொண்டிருக்கிறார். மனித உடலில் இரத்தத்தில் இருப்பது செவ்வாய் பகவான் என்கிறது ஜோதிட விஞ்ஞான சாஸ்திரம். செவ்வாய் பகவானுக்குரிய செவ்வாய்க்கிழமைகளில் முடி வெட்டுதல் கூடாது. ஏனெனில் ரத்தத்திலிருந்து  மயிர்கற்றைகள் வளர்வதால் அன்றைய தினம் முடிவெட்டும்பொது இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரும்.

செவ்வாய்க்கிழமைகளில் வான் மண்டலத்திலிருந்து வெளிவரும் கதிர்கள் பெரும்பாலும் தீங்கு விளைவிக்கக் கூடியவை. அன்றைய தினம் நாம் சவரம் செய்வது, முடி ட்ரிம் செய்வது, மொட்டையடிப்பது போன்ற செயல்களைச் செய்தால் தீங்கு விளைவிக்கக்கூடிய கதிர்கள் தூய்மைசெய்யப்பட்ட நம் மயிர் கற்றைகளில் உள்ள நுணுக்கமான துவாரங்களின் வழியே மூளைக்குள் பாய்ந்து இரத்த ஓட்டத்தில் கலக்கின்றன. தொடர்ந்து இந்நாளில் முடி வெட்டினால் நாளடைவில் உடல் ஆரோக்யத்தைச் சீர் குலைக்கவே செய்யும் என்கிறது நிரூபிக்கப்படாத விஞ்ஞான சாஸ்திரம்.

 newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP