உங்கள்  வீட்டு  பூஜையறையில் இருப்பது  சாத்விக  தெய்வமா? உக்கிர  தெய்வமா? 

கடவுள் வழிபாடு என்றவுடன்... கண்களின் கடவுளின் உருவம் மனதில் நிற்கும். உருவ வழிபாட்டில்தான் மனிதர்கள் இறைவனிடம் ஒன்றி உருவார்கள். எல்லோருடைய வீட்டிலும் பூஜையறையில் சாமி சிலைகள், உருவப்படங்கள் இருக்கும்.
 | 

உங்கள்  வீட்டு  பூஜையறையில் இருப்பது  சாத்விக  தெய்வமா? உக்கிர  தெய்வமா? 

கடவுள் வழிபாடு என்றவுடன்... கண்களின் கடவுளின் உருவம்  மனதில் நிற்கும். உருவ வழிபாட்டில்தான் மனிதர்கள் இறைவனிடம்  ஒன்றி உருவார்கள். எல்லோருடைய வீட்டிலும் பூஜையறையில்  சாமி சிலைகள், உருவப்படங்கள் இருக்கும். 

பூஜையறையில் முக்கியமாக இடம்பெற வேண்டியது குல தெய்வத்தினுடைய உருவப்படங்கள்தான். குலதெய்வம் ஆசியின்றியும் வேண்டுதல் இன்றியும்  செய்யும் எந்த பிரார்த்தனையும் நிறைவேறுவதில்லை என்பதை ஆன்மிக பெரியவர்களும் வலியுறுத்துகிறார்கள். மேலும்  மற்ற சுவாமி படங்களை வைத்து வழிபடுவதற்கான விதிமுறைகளை நமது முன்னோர்கள் உருவாக்கி யிருக்கிறார்கள்.

பொதுவாக பிள்ளையார், முருகர், லஷ்மி, சரஸ்வதி, பெருமாள் படங்கள் பூஜையறையில் தவறாமல் இருக்கும். இவையெல்லாம் சாத்விக தெய்வங்கள். வாழ்வில்  நமக்கு ஏற்படும் சங்கடங்களிலிருந்து நம்மை காத்து அருள் தரும் சக்திகள். அதனால் இவர்களை பூஜையறையில் வைத்து வழிபடுவது நன்மையே தரும். 

குழந்தை வடிவில் இருக்கும் கடவுளின் படங்களை   வணங்கினால் வீட்டில் குழந்தைப் பேறில் தடை இருக்காது.  முருகன் படம் வைக்கும் போது ராஜ அலங் கார முருகனின் படத்தை வைத்து வணங்கலாம். அரசுத்துறையிலும் அரசாங்கத் துறையிலும்  சாதிக்க இவரது அருள் கிடைக்கும்.  மணக்கோல முருகன் வீட் டில் திருமணத்தடையை நீக்குவார். அர்த்த நாரீஸ்வரரின் படம் இருந்தால் தம்பதியருக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் அகலும். ராதையுடன் குழ லூதும் கண்ணனும் இருக்கும் படம் கணவன் மனைவியிடையே அன்பை அதிகரிக்கச்செய்யும்.

கேட்ட வரம் தரும் அனுமனை தனியாக இல்லாமல் ஸ்ரீராமருடன் இணைந்திருக் கும் படமே நல்லது. குடும்பத்துடன் இணைந்திருக்கும் சிவபெருமானின் படம் குடும்பத்துக்குள் ஒற்றுமையையும் மன அமைதியையும் கொடுக்கும். கலை மகளின் படம் குழந்தைகளுக்கு அறிவையும் கல்வியில் முன்னேற்றத்தையும் அளிப்பாள். துர்கை 16 வகையான உருவங்களில் அருள்பாலிக்கிறாள். சாந்த துர்கை படத்தை வைத்து பூஜிக்கலாம். தீமைகள் அழிந்து நன்மைகள் உண்டாகும். அன்னம் பாலிக்கும் அன்னபூரணியின் படம் வீட்டில் வறுமையை ஒழிக்கும்.

உக்கிரதெய்வங்களான காளி, பிரத்யங்கராதேவி, துர்க்கை, ஆஞ்சநேயர், ஐயப்பன், நரசிம்மர் ஆகியோர் இஷ்டதெய்வங்களாக இருந்தாலும்  அவர்களை வீட்டில் பூஜித்து வழிபடுவது  தவறு. உக்கிரதெய்வங்களை உரிய முறையில் பூஜித்து கவனமாக இருக்க வேண்டும்.  மகான்கள், சித்தர்கள், யோகிகள் படங்கள் வைக்கலாம். முன்னோர்களது படத்தை பூஜையறையில் வைக்க கூடாது. வீட்டின் வரவேற்பறையில்  மாட்டி வைக்கலாம். சிலைகளை வைத்து  பூஜை செய் பவர்கள் ஐந்து அங்குலத்துக்கு மிகாமல் சிலைகள் வைத்திருப்பது நல்லது.  

வளமான வாழ்க்கைக்கு இறைவனது அருள் எப்போதும் தேவை. அதற்குரிய முறையில் நமது வழிபாடும் அமைவதே சிறந்தது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP