புற்றுக்கு பால் ஊற்றி முட்டை வைப்பது ஆன்மிகமா? அறிவியலா?

ஆடி மாதம் வந்தால் அம்மன் கோயில்கள் களைகட்டும் என்பது போலவே அம்மன் கோயில்களில் இருக்கும் பாம்பு புற்றுகளும் மஞ்சள் குங்குமத்தால் களைகட்டும். இந்துக்கள் பாம்பை கடவுளாக வணங்கி வழிபடுவார்கள். பாம்பு புற்றுக்கு பால் ஊற்றி முட்டை வைத்து வழிபடுவார்கள்.
 | 

புற்றுக்கு பால் ஊற்றி முட்டை வைப்பது ஆன்மிகமா? அறிவியலா?

ஆடி மாதம் வந்தால் அம்மன் கோயில்கள் களைகட்டும் என்பது போலவே அம்மன் கோயில்களில் இருக்கும் பாம்பு புற்றுகளும் மஞ்சள் குங்குமத்தால் களைகட்டும். இந்துக்கள் பாம்பை கடவுளாக வணங்கி வழிபடுவார்கள். பாம்பு புற்றுக்கு பால் ஊற்றி முட்டை வைத்து வழிபடுவார்கள்.

ஆதிசேஷன் என்னும் நாகத்தின் மடியில்தான் விஷ்ணு பள்ளி கொண்டிருக்கிறார். சிவபெருமான் தன்னுடைய கழுத்தில் நாகத்தை மாலையாக்கி அணிந்திருக்கிறார். முருகப்பெருமானின் காலடியில் நாகம் படம் எடுத்தப்படி உள்ளது. நாகம் அல்லது சர்ப்ப வழிபாடு என்பது நமது முன்னோர்களின் காலத்திலிருந்தே இருந்து வருகிறது.

ஆடிமாதத்தில் அம்மனுக்கு பூஜை செய்யும் போது நாகதேவி பூஜையும் சிறப்பாக செய்யப்படுகிறது. ஜாதக அமைப்பின் படி நம்மை ஆட்டிப்படைப்பது நவக்கிரகங்கள் என்றாலும் இதில் முக்கியமான ராகுவும் கேதுவும் நாக வடிவைக் கொண்டிருப்பன ஆகும். நாக தோஷத்திலிருந்து நிவாரணம் பெற நாக தேவதை அம்மனை மனம் உருகி வழிபட்டால் நாகதேவதை கருணை காட்டுவாள் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.

ஆடி வெள்ளிக்கிழமை அம்மனை வழிபடும் போதே நாகம்மனையும் வழிபட வேண்டும் என்பது முன்னோர்களின் அறிவுரை. குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரையும் ஏதோ ஒருவித துன்பம் பிடித்து ஆட்டினால் அந்த வீட்டு பெண்கள் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் பாம்பு குடிகொண்டிருக்கும் புற்றுக்கு பால் ஊற்றி முட்டை வைத்து மனமுருகி வழிபட்டால் கண் ணுக்கு அறியாமல் இருக்கும் நாகதோஷம் நீங்கும் என்கிறார்கள் ஆன்மிக பெரியோர்கள்.

அம்மன் கோயிலில் இருக்கும் புற்றுக்களை நாக்கம்மன் குடிகொண்டிருக்கும் ஆலயமாக கருதி மஞ்சள் பொடியைத் தூவி குங்குமத்தையும் தூவி புற்றில் இருக்கும் ஓட்டையில் பால் ஊற்றி, முட்டை வைத்து வழிபடுவார்கள் பெண் கள். ஆடி மாதம் தவறாமல் இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பார்கள். அப்படி செய்தால் நாகங்களால் துன்பம் நேராது என்பது நம்பிக்கையாக இருந்தது.

நவீன விஞ்ஞானம் பாம்பு பாலையும் குடிக்காது முட்டையும் சாப்பிடாது ஆனால் நம் முன்னோர்கள் எதற்காக பாம்புக்கு பால் வார்த்தார்கள் என்று கண் டறிந்து வியந்தார்கள். பண்டைய காலத்தில் மனிதர்களுக்கு நிகராக பாம்புகளின் எண்ணிக்கை அதிகமிருந்ததாம். பாம்பை தெய்வமாக வணங்கும் போது எப்படி கொல்ல முடியும். மாறாக அதன் இனப்பெருக்கத்தை குறைத்துவிடலாம் என்று  முடிவு செய்தார்களாம்.

புற்றில் இருக்கும் பெண் பாம்பு தன்னுடைய உடலில் ஒருவித வாசனையை உண்டாக்கும். அதை நுகர்ந்த ஆண் பாம்பு பெண்பாம்பை தேடி வரும். அந்த வாசனையைத் தடுத்துவிட்டால் பாம்புகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிடலாம். இந்த வாசனையைத் தடுக்கும் குணம் முட்டை மற்றும் பாலுக்கு இருந்ததாலேயே இத்தகைய வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது என்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் இந்துக்கடவுள்களில் நாக தேவதையும் ஒன்று. மனிதனின் ஜாதகத்தில் ஆட்சிபுரியும் நவக்கிரகங்களில் முக்கியமான ராகுவும் கேதுவும் கூட  பாம்பின் வடிவங்களைக் கொண்டிருக்கின்றன. அதனால் சர்ப்ப வழிபாடு நமக்கு சகலவிதத்திலும் சந்தோஷங்களையே கொடுக்கும் என்பதால் வருடத்தில் ஒருமுறையேனும் ஆடிமாதத்தில் புற்றில் இருக்கும் நாக தேவதைக்கு வழிபாடு அவசியம். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP