இன்று தானம் செய்தால் புண்ணியக்கணக்கு இரட்டிப்பாகும்…

சித்ரகுப்தனுக்கு மிகவும் புனிதமான நாள்.. இன்றைய தினம் சித்ரகுப்தனை வணங்கினால் நமது பாவக்கணக்கைத் தீர்த்து புண்ணியக்கணக்கை அதிகரிக்க செய்ய வழிகாட்டுவார்... இண்று சித்ரகுப்தனை வழிபடுவது விசேஷம்.
 | 

இன்று தானம் செய்தால் புண்ணியக்கணக்கு இரட்டிப்பாகும்…

சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தின் உச்சத்தில் இருக்கும் பெளர்ணமி எமதர்மனிடம் கணக்கு எழுதும் சித்ரகுப்தனுக்கு மிகவும் புனிதமான நாள்.. இன்றைய தினம் சித்ரகுப்தனை வணங்கினால் நமது பாவக்கணக்கைத் தீர்த்து புண்ணியக்கணக்கை அதிகரிக்க செய்ய வழிகாட்டுவார்... இண்று சித்ரகுப்தனை வழிபடுவது விசேஷம். 

எமதர்மனின் கணக்குப்பிள்ளையான சித்திரகுப்தன் பிரம்மதேவன் உடலிலிருந்து சித்ரா பெளர்ணமி அன்று தோன்றியதால் சித்ரகுப்தன் என்று அழைக்கப்பட்டதாக சொல்கிறார்கள். மனிதப்பிறவிகள் செய்யும் பாவ, புண்ணியக் கணக்குகளை எழுதி இறுதிக்காலத்தில் எமதர்மனுக்கு கணக்கு சொல்வது இவரது வேலை என்பதால்  இன்றைய தினத்தில்  இவரை வழிபட்டு பாவக்கணக்கை குறைத்து புண்ணியத் தைத் தேட வழிபடுங்கள்..

சித்ரகுப்தனை வேண்டி விரதமிருந்து வழிபட்டால் பாவகணக்குகள் குறையும் என்பது ஐதிகம். இவரை வழிபடும்போது பாவங்கள் குறைந்து  பாவம் செய்யும் மனோபாவமும் குறைந்துவிடும் என்பதால் இயல்பாகவே மனம் புண்ணியக் காரியங்கள்  ஈடுபடுவதை விரும்பும்..  சித்ரகுப்தனை வேண்டி விரதமிருந்தால் எமபயம் இருக்காது என்று புராண இதிகாசங்களில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய வழிபாடு எப்படி இருக்கவேண்டும்.. என்கிறீர்கள்... பாவக்கணக்கை மலையளவிலிருந்து கடுகளவாகவும்.. புண்ணியக்கணக்கை கடுகளவிலிருந்து மலையாக்கவும் எழுத பிரார்த்தனை செய்வார்கள். போதும் மனிதப்பிறவி என்று நினைப்பவர்களும் மீண்டும் பிறவாமை என்னும் நிலை வேண்டும் என்பவர்களும், இப்பிறப்பில் துன்பமில்லா நற்பிறவி வேண்டும் என்பவர்களும் சித்ரகுப்தனை அணுகினால் எல்லா பேறுகளையும் பெறலாம்.

இன்றைய தினம் பால் பொருள்களை சேர்க்கவோ.... பால் பொருள்களால் செய்த உணவுகளை  செய்வதோ கூடாது. ஏனெனில் சித்ரகுப்தனை ஈன்ற பசுவுக்கு செய் யும் நன்மையாகும் என்பதால் எருமை தயிரில்  தயிர் சாதம் நிவேதனம்  செய் வது நல்லது. பொங்கல், பானகம் நைவேதயம் செய்வது நல்லது. சித்ரா பெளர்ணமி அன்று செய்யும்  வழிபாடு வருடம் முழுவதும் பெளர்ணமி பூஜை செய்த பலன் கிட்டும்.

சித்ரகுப்தனை  வேண்டி   விரதம் இருந்து வழிபட்டு  வறியோருக்கு   செய்யும் தானதர்மங்கள் புண்ணியக்கணக்கில் இரட்டிப்பாக சேரும் என்பதால் இன்று அவசியம்  அன்னதானம்,  ஆடைதானம் செய்யுங்கள்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP