மனைவிக்கு தன் ஆயுளை பாதியாக கொடுத்த கணவன்..

மனைவிக்கு ஆயுளை பாதியாக கொடுத்தான் ருரு. அதனால் தான் இறைவனிடம் வேண்டும் போது பதிவிரதைகள் என்னுடைய ஆயுளில் பாதியை கணவனுக்கு கொடு என்று வேண்டுகிறார்கள் போலும்..
 | 

மனைவிக்கு தன் ஆயுளை பாதியாக கொடுத்த கணவன்..

மனித பிறவியில் ஆண்கள் சிவனாகவும் பெண்கள் சக்தியாகவும் பார்க்கப் படுகிறார்கள். புராணக்கதையில் சிவப்பெருமான் தன்னுடைய பாதியை அம்பாளுக்கு கொடுத்ததால் அர்த்த நாரீஸ்வரரானார். இது போன்று முனிக்குமாரன் ஒருவன் தன்னுடைய ஆயுளில் பாதியை தன் மனைவிக்கு கொடுத்ததாக ருரு உபாக் யானத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் ஸ்தூலகேசர் என்ற ரிஷி ஒருவர் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது கந்தர்வனான விஸ்வாவசு மேனகையுடன் சேர்ந்து உறவாடினான். அதனுடைய பலனாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையை எடுத்து செல்ல முடியாததால் அருகிலிருந்த ஸ்தூல கேசர் மகரிஷி ஆசிரமத்தில் அக்குழந்தையை கிடத்தி சென்றுவிட்டார்கள். மகரிஷி அக்குழந்தைக்கு தாயாய், தந்தையாய் இருந்து  ப்ரமத்வரா என்று பெயரிட்டு வளர்த்துவந்தார்.

ப்ரமத்வரா அழகு, அறிவு நிரம்பி அனைவரையும் கவரும் பெண்ணாக வளர்ந்தாள். ஒருமுறை அங்குவந்த முனிகுமாரனான ருரு, ப்ரமத்வராவின் அழகில் மயங்கி அவளை மணக்க விரும்பினான். இருவருக்கும் விவாகம் செய்ய முடிவெடுத்தார்கள். திருமணத்துக்கு முன்பு தோட்டத்துக்கு உலாவ சென்ற ப்ரமத் வராவை அங்கிருந்த கருநாகம் தீண்டியது.

உடனடியாக தலைக்கேறிய விஷத்தால் சுருண்டு விழுந்து இறந்துவிட்டாள். விஷயம் கேள்விப்பட்டு வந்த ஸ்தூல மகரிஷி. ரிஷிகள் அவளை மணக்கவிருக்கும் ருரு அனைவரும் வந்தார்கள். ப்ரமத்வராவை பார்த்து கதறிய ருருவை ஆறுதல் படுத்த தேவலோகத்தில் இருந்த தேவர்கள் ஒரு தூதுவனை அனுப்பினார்கள்.

“மகரிஷியே வருத்தப்பட்டு எதுவும் ஆவப்போவதில்லை.. அவளுடைய ஆயுள் முடிந்துவிட்டது அதனால் கவலைப்படாதீர்கள்” என்றார்கள். “இல்லை ப்ரமத்வராவுடன் நான் வாழ வேண்டும் என்றால் நான் என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள்” என்றான் ருரு. “நீங்கள் செய்த தவத்தின் பலனாக இவள் உயிர் பிழைக்க ஒரே ஒரு வழி உண்டு... அதை செய்து பார்க்கலாம்” என்றான் தூதுவன்.

“என்ன உபாயம் என்றாலும் செய்ய கடமைப்பட்டிடுக்கிறேன்” என்றான் ருரு. “உமது ஆயுளில் நீ  பாதியைத் தந்தால் இவள் மீண்டும்  உயிர்த்தெழுவாள்” என்றாள். உடனே ருரு சந்தோஷமாக இவளோடு இணைந்து வாழ விரும்புகிறேன். அதற்கு பிரயாசித்தமாக என் ஆயுளில் பாதியை இவளுக்கு அளிக்க விரும்புகிறேன் என்று  தேவர்களிடம் கூறினான்.

பிறகு எமனிடம் தேவர்கள் வேண்ட ப்ரமத்வரா உறக்கத்திலிருந்து எழுவது போல் துயிலெழுந்தாள்... ஸ்தூலகேசரும், மகரிஷிகளும் ,ருருவும் மகிழ்ச்சியடைந்தார்கள். பிறகு முனிவர்களும் தேவர்களும் இணைந்து இவர்களுக்கு மணம் முடித்துவைத்தார்கள். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.

மனைவிக்கு ஆயுளை பாதியாக கொடுத்தான் ருரு. அதனால் தான் இறைவனிடம் வேண்டும் போது பதிவிரதைகள் என்னுடைய ஆயுளில் பாதியை கணவனுக்கு கொடு என்று வேண்டுகிறார்கள் போலும்..
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP