மனதை  அலைபாய விடும் மனிதர்கள்…

மனதை அலைபாய விடும் மனிதர்கள்… .....இப்படித்தான் நம்மில் பலரும் நிலையான ஒன்றை நாடாமல் மாறிக் கொண் டிருக்கிறோம்.
 | 

மனதை  அலைபாய விடும் மனிதர்கள்…

ஒருமுறை நாரதருக்கு ஒரு சந்தேகம் வந்தது. இந்திரனிடம் வந்தார். ”எனக்கு ஒரு சந்தேகம் இந்திர பகவானே.. பூலோகத்தில் மனிதர்கள் அனை வரும் மனம் தடுமாறாமல் ஒரே மனத்தோடு இருக்கிறார்களா?” என்றார். ”மனி தர்கள் மனம் நிலையாக இருந்தாலே அவர்களுக்கு உலகப் பற்று குறைந்து விடுமே பிறகு அவர்கள் ஞானிகள் என்றல்லவா அழைக்க முடியும்.. ஒன்றும் அறியாப் பிள்ளைப் போல் கேட்கிறீர்களே” என்றார் இந்திரன்… ”அப்படியானால்  மனிதன் தடுமாறிக்கொண்டே  தான் இருக்கிறானா?” என்றார் நாரதர்… ”என்ன நாரதரே இன்று உமது கலகத்துக்கு நாந்தான் கிடைத்தேனா.. வாரும்.. காண்பிக் கிறேன்” என்று  இந்திரன் சொல்லவும்.. இருவரும் மாறுவேடம் அணிந்து பூலோகத்துக்கு வந்தார்கள்.

மிதிலை என்னும் அழகிய கிராமம் ஒன்று இருந்தது. அங்கு கண்ணப்பன் என்பவன் இருந்தான். நிலையான பிழைப்பு என்று எதுவும் இல்லாமல் அனுதினமும் ஒரு வேலை செய்துகொண்டிருப்பான். நிரந்தரமான தொழில் செய்வதே நல்லது என்று எல்லோரும் அவனுக்கு புத்தி கூறினார்கள். ஆனா லும் அவனுக்கு எதிலுமே திருப்தியில்லை. இவன் தான் நாம் தேடிவந்தவன் என்று இந்திரன் நாரதரிடம் கூறினார். இருவரும் அவன் பின்னாடியே சென் றார்கள்.

மண்பானைகளை சுமந்தபடி வீதியில் கூவி விற்றுக்கொண்டிருந்தான் கண்ணப்பன். வண்டி சுமை அதிகரிக்கவே மண்பானைகள் கீழே விழுந்து நொறுங்கியது. இப்படி விழுந்துவிட்டதே என்று புலம்பி அழுதான். எதிரே விறகு வியாபாரி வந்தான். ”இதற்குத்தான் விறகு வியாபாரம் செய்தால் கீழே விழுந்தால்கூடவிறகு உடையாது அல்லவா”என்று சொல்லிவிட்டுப் போனான். இதுவும் சரிதான் என்று காட்டிற்கு சென்று  விறகு வெட்டி  வண்டியில் ஏற்றி விற்க தொடங்கினான். 
 
மழைக்காலம் என்பதால் ஈரமான விறகை யாரும் வாங்க முன் வர வில்லை. இதுவும் போச்சே.. கை வலிக்க தூக்க முடியாமல் தூக்கி வந்தேனே. உடம்பெல்லாம் வலிக்கிறதே என்று அழுதான் கண்ணப்பன். அந்த வழியாக வந்த பொரி வியாபாரி இதற்குதான் என்னை  மாதிரி இலேசான பொருளை தூக்கிட்டு வரணுங்கிறது என்று முணுமுணுத்தப்படி சென்றான். அட இவன் சொல்றது கூட சரிதான் என்றபடி மறுநாள் பொரி  விற்க தொடங்கினான். பேய்க்காற்று வீசியது. கொண்டு வந்த பொரி அனைத்தும் காற்றில் பறந்து விட்டது.. ஐயோ போச்சே.. என்று அழுதான்.. 

மற்றவர்களது அறிவுரையை கேட்டிருந்தால் அவனும் நஷ்டமில்லா மல் தொழிலை செய்திருக்கலாம். மனம் நிலையாக இல்லாமல் அலைந்து கொண்டே இருந்ததால் தான் அவன் நஷ்டப்படும் படி ஆயிற்று. கண்ணப் பனைப் போன்றுதான் பல மனிதர்களும்  வாழ்க்கையில் அனைத்து விஷயங் களிலும் மனத்தை  அலைபாயவிட்டு அல்லல்படுகின்றனர் என்றான் இந்தி ரன்.. நாராயணா… நீதான் இத்தகைய மனிதர்களை காப்பாற்ற வேண்டும் என்றார் நாரதர்.

இப்படித்தான் நம்மில் பலரும் நிலையான ஒன்றை நாடாமல் மாறிக் கொண் டிருக்கிறோம். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP