யம தீபம் எப்படி ஏற்ற வேண்டும் ?

.யம தீபம் தெற்கு திசை நோக்கி எரிய வேண்டும். விளக்கேற்றிய பின் யம தீப ஸ்லோகம் சொல்லி பிரார்த்தனை செயய் வேண்டும்.
 | 

யம தீபம் எப்படி ஏற்ற வேண்டும் ?

யம தீபத்தை  தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று ஏற்றுவது மரபு. யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும் என்பதுடன், நம் வாழ்வில் இருக்கும் சகலவிதமான  தடைகளும் நீங்கும்.பொதுவாக மாஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு நமது முன்னோர்கள் வருகிறார்கள் என்பது நமது நம்பிக்கை. அமாவாசை அன்று முன்னோர்களுக்கு பித்ரு கடன் என்ற திதி கொடுத்து அந்த ஆத்மாக்கள் மனம் சாந்தியடைய செய்வது நமது இந்து தர்ம வழக்கம்.பிள்ளைகள், பேரன்கள் என தங்களின் வாரிசுகள் தரும் திதியை பெற மாஹாளய அமாவசைக்கு   வந்த முன்னோர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவதே ‘யம தீபம்’.இந்த யம  தீபத்தை ,தீபாவளி காலத்தில் வருகிற திரயோதஸி திதியில் ஏற்றுவது நலம். தீபாவளிக்கு முதல் நாளே திரயோதஸி திதி ஆகும்.

யம தீபம் ஏற்றும் முறை குறித்து நமது தர்ம சாஸ்திரம் வழி வகைகள் ஏற்ப்படுத்தி உள்ளது. இதோ அந்த வழி முறைகள்

1. வீட்டின் வெளிப்புறம் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும். அப்படி விளக்கேற்ற வீட்டில் வசதி இல்லா விட்டால்  வீட்டிற்குள்ளும் யம தீபம் ஏற்றலாம்.

2.யம தீபம் தெற்கு திசை நோக்கி எரிய வேண்டும். விளக்கேற்றிய பின் யம தீப ஸ்லோகம் சொல்லி பிரார்த்தனை செயய் வேண்டும்.

3. விளக்கேற்றிய பின்னர்,முன்னோர்களை மனதில் நினத்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.

யம தீபம் ஏற்றி முன்னோர்களுக்கும் வழிகாட்டி உதவிட நமக்கு  வாழ்நாள் முழுவதும் நல்ல பலன்களைத் தரும். முன்னோர் ஆசிகள் பெற யம தீபம் ஏற்றுவோம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP